Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரகமாக சோதனை - Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store

அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரகமாக சோதனை

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அக்னி ரக ஏவுகணைகளின் புதிய வகையான அக்னி பி (Agni-P அல்லது Agni – Prime) ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

ஒடிசாவின் கடற்கரை பகுதியில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO இனால் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு அரணாக விளங்குவதில், அக்னி ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அக்னி 1 ஏவுகணை தொடங்கி அக்னி 5 ஏவுகணை வரை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்து, இந்திய இராணுவத்தோடு இணைத்துள்ளது.

இதில் அக்னி 6 ஏவுகணை அதிகபட்சம் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. அக்னி 6 இன்னும் முழுமையாக சோதனை செய்யப்படவில்லை.

இந்த நிலையில் அக்னி ரக ஏவுகணைகளின் புதிய வகையான அக்னி பிரைம் (Agni-P) ஏவுகணையை இந்தியா இன்று ஒடிசாவில் வெற்றிகரமாக சோதனை செய்தது.

அக்னி பி ஏவுகணை 1,000 – 2,000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்க கூடியது. அக்னி 3 ஏவுகணையின் எடையில் பாதி எடை கொண்டது. இதன் propulsion சிஸ்டம் புதிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது அணு ஆயுதத்தை ஏந்தி சென்று தாக்கும் திறன் கொண்டதாகும். இந்த ஏவுகணை முழுக்க முழுக்க காம்போசைட் மெட்டீரியல் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும்.

திட்டமிட்டபடி மிக துல்லியமாக, எந்த பிரச்சினையும் இன்றி இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டதாக மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO தெரிவித்துள்ளது. ஒடிசாவில் இருக்கும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.

பல்வேறு ரேடார்களை வைத்து இந்த ஏவுகணையின் பாதை, வேகம், துல்லியத்தை சோதித்துள்ளனர். இதில் அக்னி பி ஏவுகணை அனைத்து சோதனைகளிலும் சிறப்பாக, துல்லியமாக செயல்பட்டதாக DRDO தெரிவித்துள்ளது. அக்னி ரக ஏவுகணைகளின் புதிய வகைதான் அக்னி பி ஏவுகணை ஆகும். நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக வைத்து, எங்கிருந்தும் இந்த அக்னி பி ஏவுகணையை ஏவ முடியும். (ஒன் இந்தியா)

அக்னி ரக ஏவுகணைகளின் புதிய வகையான அக்னி பி (Agni-P அல்லது Agni – Prime) ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசாவின் கடற்கரை பகுதியில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி…

அக்னி ரக ஏவுகணைகளின் புதிய வகையான அக்னி பி (Agni-P அல்லது Agni – Prime) ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசாவின் கடற்கரை பகுதியில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி…