Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அதிகரிக்கும் அம்மை..!! அலட்சியம் காட்டினால் மரணம்..? வராமல் தடுப்பது எப்படி..? 

அதிகரிக்கும் அம்மை..!! அலட்சியம் காட்டினால் மரணம்..? வராமல் தடுப்பது எப்படி..?

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

பொதுவாக வெயில் நாட்களில் அம்மை நோய் உடல் உஷ்ணத்தினால் வருகிறதென்று நாம் அனைவரும் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், உண்மையில் கோடை காலத்தில் சுற்றுப்புற சுழலினாலும், குப்பை, சுகாதாரமற்ற, மக்கள் நெருக்கி வாழக்கூடிய இடங்களில் இருக்கக்கூடிய (Varicella Zoster) என்ற வைரஸ் கிருமியால், தாக்கப்பட்டு, பின்பு காற்று மூலம் பரவக்கூடியது ஆகும்.

முக்கியமாக 10 வயதிற்குள்ள உட்பட சிறு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால், பெரும்பாலான குழந்தைகளே இதில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அனைத்து வயதுள்ளவர்களையும் தாக்கக்கூடிய நோயாக இது இருக்கிறது. வெரிசெல்லா ஜோஸ்டர் (Varicella Zoster) என்ற வைரஸ் கிருமியினால் அம்மை நோய் வருவதாகும். முதலில் இந்த வைரஸ் உடலில் உள்ள எலும்புகளை தாக்கும். இதனால் உடல் வலி அதிகமாக இருக்கும்.

இதனைத் தொடர்ந்து சளி, தும்மல், கடுமையான காய்ச்சல், வயிற்று போக்கு, உடலில் நீரிழப்பு ஏற்படும். இரண்டாவதாக உடம்பில் அரிப்பு, எரிச்சல், நமைச்சல் போன்றவை இருக்கும். மூன்றாவதாக உடலில் சிறு சிறு கட்டிகள் போன்ற சிவப்பு நிற கொப்புளங்கள் (Blister) முகம், மார்பு, முதுகு, வயிறு, கழுத்து, அக்குள் பகுதி போன்ற இடங்களில் உண்டாகும். பிறகு அந்த சிறு கட்டிகள் பழுத்து நீர் கோத்த கொப்புளங்களாக மாறிவிடும். இவை எல்லாமே 5-10 நாட்களுக்குள் காணப்படும்.

கொப்புளங்கள் உடைந்து நீர் வடிவதால், காற்று மூலமாகவும் மற்றவர்களுக்கு பரவும். இது ஒரு தொற்று நோய் என்பதால், தனிமைப்படுத்தி, அவர்கள் பயன்படுத்திய பொருட்களை குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் உபயோகம் செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதற்கு சரியான முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், உடனடியாக தெரியாது, பின்னாட்களில் (4-5) ஆண்டுகளுக்கு பிறகு இந்த வைரஸ்யின் வீரியம், மூளை, கண், இதயம், கல்லீரல் ஆகிய முக்கிய உடல் உள்ளுறுப்புகளை பாதித்துவிடும். சில சமயங்களில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே, எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால், மற்றவருக்கும் வர அதிக வாய்ப்புண்டு.

அம்மை நோய் தாக்கப்பட்டால், இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். அழுக்கு, குப்பை, சேராமல் தினமும் அவற்றை அப்புறப்படுத்துவது, மெல்லிய பருத்தி ஆடை அணிவது, அவற்றை உலர்த்தி வெயிலில் காய வைக்க வேண்டும். வேப்பிலையை படுக்கையில் விரித்து அதன் மேல் படுத்துக் கொள்வது, அல்லது வேப்பிலை, துளசி, மஞ்சள் அரைத்து பூசினால், அரிப்பு நமைச்சல் குறையும், மேலும், வேப்பிலை கிருமி நாசினியாக செயல்பட்டு, கொப்புளங்கள் உடைந்து, தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளும்.

சந்தனத்தை பன்னீரில் குழைத்து, உடைந்த கொப்பளங்களின் மேல் பற்றுபோல் தடவினால், உடல் குளிர்ச்சி அடைந்து, நமைச்சல் மற்றும் அரிப்பு விரைவில் குறைந்துவிடும். மேலும், அந்த நாட்களில் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டியது அவசியமாகும். சுத்தமான குடிநீர் பருக வேண்டும். அதிக காரமான உணவை சேர்க்காமல், பசும் மோரில் எலுமிச்சை சாறு கலந்து அதை உணவில் சேர்த்து உண்பதும், முளைக்கீரை, பசலைக்கீரை, தக்காளி, கூழ், அரிசிக்கஞ்சி, சத்துமாவு, சிறுகீரை, பூசணிக்காய், ஆகிய உணவு வகைகளை சேர்த்துக்கொள்ளலாம். இதைத்தவிர இளநீர், நீர்மோர், கரும்புச்சாறு, ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம் போன்றவை சாப்பிட வேண்டும்.

Read More : சென்னையில் அடுத்த ஒருவாரம் எப்படி இருக்கும்..? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்..!!

The post அதிகரிக்கும் அம்மை..!! அலட்சியம் காட்டினால் மரணம்..? வராமல் தடுப்பது எப்படி..? appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” பொதுவாக வெயில் நாட்களில் அம்மை நோய் உடல் உஷ்ணத்தினால் வருகிறதென்று நாம் அனைவரும் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், உண்மையில் கோடை காலத்தில் சுற்றுப்புற சுழலினாலும், குப்பை, சுகாதாரமற்ற, மக்கள் நெருக்கி வாழக்கூடிய இடங்களில்…

[[{“value”:” பொதுவாக வெயில் நாட்களில் அம்மை நோய் உடல் உஷ்ணத்தினால் வருகிறதென்று நாம் அனைவரும் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், உண்மையில் கோடை காலத்தில் சுற்றுப்புற சுழலினாலும், குப்பை, சுகாதாரமற்ற, மக்கள் நெருக்கி வாழக்கூடிய இடங்களில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *