Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அந்த ஓர் வார்த்தை 

அந்த ஓர் வார்த்தை

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மெளனமாய்
எனக்குள் எழுந்த
ஒரு வார்த்தை
காரிருள் தாண்டி
என்னை கவிதை
எழுத தூண்டிற்று

எப்போதும் உச்சரிக்கும்
வார்த்தை தான்.
என்றாலும் அழுத்து போகாமலே
அது என் இதயத்திற்கு
பிடித்து போனது

மெளனமாய் கண்களை
இருக்கி மூடி ஒரு முறை
உச்சரித்து பார்க்கையில்
உள்ளம் பூரித்து போகிறது

அதிர்ந்து போனேன்
அந்த வார்த்தைக்கு
இந்தளவு சக்தியா? என

எத்தனை முறை தான்
தேடி விட்டேன்
அந்த வார்த்தைக்கான
முழு அர்த்தத்தை
ஆனால் இன்னும் தான்
கிடைத்தபாடில்லை

அதிகமாய் சிரித்த போது
உணர்ந்திடாத அதன்
அர்த்தத்தை அதிகமாய் அழுதபோது
ஆழமாய் உணர்ந்து கொண்டேன்
இருந்தும் அது பூரணமில்லை

அது ஒரு வார்த்தை தான்
ஓயாமல் உச்சரிக்க
என் நாவு துடிக்கிறது
உச்சரித்து விட்டாலோ
உள்ளமோ பூரித்துப் போகிறது

உணர்வுகளை தட்டியெழுப்பி
என்னை உயிர்ப்பிக்கும்
அவ்வார்த்தையை
மெளனமாய் கண்களை
இருக மூடி
அதன் அர்த்தத்தை
ஆழமாய் அனுபவித்து
ஒரு முறை நீங்களும்
உச்சரித்து பாருங்கள்

”அர்ரஹ்மான்- الرحمن (அளவற்ற அருளாளன்)” என

உங்கள் உள்ளத்திலும்
ஓர் இனம்புரியாத
இன்பம் ஏற்படும்.

Rifka Mubarak (Rambuke-Ela)
Faculty of Islamic Studies and Arabic Language
South Eastern university of Sri-lanka

மெளனமாய் எனக்குள் எழுந்த ஒரு வார்த்தை காரிருள் தாண்டி என்னை கவிதை எழுத தூண்டிற்று எப்போதும் உச்சரிக்கும் வார்த்தை தான். என்றாலும் அழுத்து போகாமலே அது என் இதயத்திற்கு பிடித்து போனது மெளனமாய் கண்களை…

மெளனமாய் எனக்குள் எழுந்த ஒரு வார்த்தை காரிருள் தாண்டி என்னை கவிதை எழுத தூண்டிற்று எப்போதும் உச்சரிக்கும் வார்த்தை தான். என்றாலும் அழுத்து போகாமலே அது என் இதயத்திற்கு பிடித்து போனது மெளனமாய் கண்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *