அன்புள்ள கொறோனாவுக்கு.

  • 12

[cov2019]

தீராவி மாயாவி போல்
மயக்கி விட்டயே!  இந்த
மனித இனத்தை

ஆண்டாண்டு காலங்கள்
அழகாக வாழ்ந்த மனித
இனத்தை  ஒரு சில நாட்களில்
வீட்டோடு அடக்கி விட்டாயே!

சந்திரனில் கால் பதித்து
செவ்வாயில் மனித இனத்தை
குடியேற்றுவேன். என்று
நெஞ்சை தட்டிய
பல வல்லரசுகளை
மரண பயத்தில்
ஆழ்த்தி விட்டாயே!

நீ வெறும் வைரசு தானா???
இல்லை என்றால் மனித
இனத்தை அடியோடு
அழிக்க-வந்திருக்கும்
பெயரில்லாத அற்புதப்
படைப்பா???

எத்தனையோ தடவைகளில்
எத்தனையோ சவால்களை
துணிந்து சந்தித்த-மனித
இனத்தை ஆட்டிப் படைக்கின்றாயே!!

உனக்கு  இரக்கமே இல்லையா?
ஆயிரமாயிரமாய் செத்து மடியும்
மனித இனத்தைப் பார்த்து!

எங்களை விட்டு விடு
இனியும் உன்னோடு
மோதுவதற்கு-எங்கள்
இனத்தில் யாருக்கும்
துணிவில்லை-என்பதை
நாங்கள்  ஒத்துக் கொள்கிறோம்.

பஸ்ல் அஹமட்

Monetize your website traffic with yX Media


[cov2019] தீராவி மாயாவி போல் மயக்கி விட்டயே!  இந்த மனித இனத்தை ஆண்டாண்டு காலங்கள் அழகாக வாழ்ந்த மனித இனத்தை  ஒரு சில நாட்களில் வீட்டோடு அடக்கி விட்டாயே! சந்திரனில் கால் பதித்து செவ்வாயில்…

[cov2019] தீராவி மாயாவி போல் மயக்கி விட்டயே!  இந்த மனித இனத்தை ஆண்டாண்டு காலங்கள் அழகாக வாழ்ந்த மனித இனத்தை  ஒரு சில நாட்களில் வீட்டோடு அடக்கி விட்டாயே! சந்திரனில் கால் பதித்து செவ்வாயில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *