Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அமைச்சரவைக் முடிவுகள் - 2020.11.30 

அமைச்சரவைக் முடிவுகள் – 2020.11.30

  • 17

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

2020.11.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்.

  1. தேசிய பொருளாதாரத்தை வலுவூட்டும் வகையில் அரச வங்கிகளை முறைமைப்படுத்தி வினைத்திறனாக மாற்றுவதற்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் கால எல்லையை நீடித்தல்.
  2. அந்நிய செலாவணி நாட்டிலிருந்து வெளிச் செல்வதை மட்டுப்படுத்துதல் தொடர்பாக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள நிபந்தனைகள் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்.
  3. வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்.
  4. சிங்கபுரம் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ள 48 தோட்டக் காணியை நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு எடுத்தல்.
  5. பொலன்னறுவை நிர்வாகக் கட்டிடத்தொகுதி அமைத்தல்.
  6. வேரஸ் ஆறு மழைநீர் வடிகாலமைப்பு மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகள் வழங்கல்.
  7. விளையாட்டுக்கான பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், விளையாட்டுக்கான பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு மற்றும் விளையாட்டுக்கான மாணவர் புலமைப்பரிசில் மற்றும் போசாக்குக் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை அதிகரித்தல்.
  8. பால்நிலை மற்றும் வயதிற்கமைய வகைப்படுத்தப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களைத் திரட்டுவதற்கான தேசிய கொள்கையை வகுத்தல்.
  9. வாகன இலக்கத் தகடு மற்றும் சாரதி அனுமதிப் பத்திரங்களை விரைவுத் தபால் (Speed Post) மூலம் சேவை பெறுநர்களுக்கு வழங்குவதற்கான வசதிகளை வழங்கல்.
  10. இலங்கை – சிங்கப்பூர் இடையிலான 50 வருட இராஜதந்திரத் தொடர்புகளை நினைவுகூருவதற்கான நினைவு முத்திரை வெளியிடல்.
  11. 2021 ஆம் ஆண்டுக்கான கால்நடைகள் அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தல்.
  12. தேசிய கலாபவனத்தை மேம்படுத்தலும் பாதுகாத்தலும்.
  13. சுரக்ஷா மாணவர் காப்புறுதி.
  14. ஏரியல் பண்டல் கன்டக்ரிவ் யுடர. (ABC) 230/400V3x70+54.6+ ச.மி.மி. 16-கி.மீ.2000 வழங்கல் மற்றும் விநியோகத்திற்கான ஒப்பந்தம் வழங்கல் – இலக்கம்.
  15. 2020.12.01 இலிருந்து 2021.07.31 வரை எட்டு மாதங்களுக்கான பெற்றோல் இறக்கமதிக்கான நீண்டகால ஒப்பந்தம் வழங்கல்.
  16. களுத்துறை புதிய நீதிமன்றக் கட்டிடத்தொகுதி.க்றாண்ட் ஹயார்ட் கருத்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்குக் குழுவொன்றை நியமித்தல்.
  17. க்றாண்ட் ஹயார்ட் கருத்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்குக் குழுவொன்றை நியமித்தல்.
  18. 95.86 கிலோமீற்றர் நீளமான வடமத்திய மஹ அல நிர்மாணிப்புக் கருத்திட்டத்தின் 27.7 கிலோமீற்றர் நீளமான சுரங்கப் பாதையை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் வழங்கல்

2020.11.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகள் பின்வருமாறு:

01.தேசிய பொருளாதாரத்தை வலுவூட்டும் வகையில் அரச வங்கிகளை முறைமைப்படுத்தி வினைத்திறனாக மாற்றுவதற்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் கால எல்லையை நீடித்தல்

தேசிய பொருளாதாரத்தை வலுவூட்டும் வகையில் அரச வங்கிகளை முறைமைப்படுத்தி வினைத்திறனாக மாற்றுவதற்கான பரிந்துரைகளை 03 மாதங்களில் சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு 2020 ஆம் ஆண்டு யூலை மாதம் 22 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. நாட்டில் தற்போதுள்ள நிலைமையால் எதிர்பார்க்கப்பட்ட வகையில் குழுவின் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு முடியாமல் போயுள்ளது. அதனால், குறித்த குழுவின் கால எல்லையை 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதியிலிருந்து மேலும் 03 மாதங்களுக்கு நீடிப்பதற்காக நிதி அமைச்சரான கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. அந்நிய செலாவணி நாட்டிலிருந்து வெளிச் செல்வதை மட்டுப்படுத்துதல் தொடர்பாக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள நிபந்தனைகள் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்

அந்நிய செலாவணி நாட்டிலிருந்து வெளிச் செல்வதற்குக் காரணமாக அமையும் மூலதன பரிவர்த்தனைகள் தொடர்பாக கட்டுப்பாடுகளை விதிப்பதற்காக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் 06 மாதகாலத்திற்கு செல்லுபடியாகும் வகையில் நிபந்தனையை வெளியிடுவதற்காக 2020 ஆம் ஆண்டு யூன் மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய, 2020 ஆம் ஆண்டு யூலை மாதம் 02 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் குறித்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதன் செல்லுபடியாகும் காலம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முடிவடையவுள்ளது. குறித்த நிபந்தனைகள் மேலும் 06 மாதங்களுக்கு நீடிப்பது உகந்தது எனத் தெரியவந்துள்ளது. அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சரான கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

2007 ஆம் ஆண்டு விசேட வர்த்தகப் பொருட்களுக்கான வரிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள் 06 உம், 1962 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க வரிப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும், இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களுக்கான சுங்கக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சுங்க வரிக்கமைவான கட்டண விதிப்புக்களுக்கு ஏற்புடையதாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும், பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சரான கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. சிங்கபுரம் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ள 48 தோட்டக் காணியை நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு எடுத்தல்

திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகப் பிரிவில் வனாத்தமுல்ல கிராமத்தில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான 0.4423 ஹெக்ரயர் காணியின் ஒருபகுதியில் இரண்டு கட்டங்களில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் குறைந்த வசதிகளுடன் வாழும் குறைந்த வருமானங் கொண்ட 120 குடும்பங்களுக்கு சிங்கபுரம் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டுத் திட்டம் 2007 ஆம் ஆண்டு முன்னாள் வீடமைப்பு அமைச்சரின் கீழ் இயங்கிய நிறுவனமான றியல் எஸ்ரேட் எக்ஸ்ஜேன்ஜ் (பிரைவெட் லிமிட்டட்) நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்காக திறைசேரி ஒதுக்கீடு 174.15 மில்லின் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதுடன், குறித்த வீடுகளை வழங்கிய குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக குறித்த காணித்துண்டை விடுவிப்பாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. பொலன்னறுவை நிர்வாகக் கட்டிடத்தொகுதி அமைத்தல்

பொலன்னறுவை நிர்வாகக் கட்டிடத் தொகுதியை அமைப்பதற்காக 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ் நிர்மாணிக்கப்படும் இக்கட்டிடத்திற்காக இதுவரை 1,018 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதுடன், அரச மற்றும் பகுதியரச நிறுவனங்கள் 19 இற்காக குறித்த கட்டிடத்தில் இடவசதிகள் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்காக மேலும் வளிச்சீராக்கித் தொகுதிகளை அமைத்தல், மின்னுற்பத்தி இயந்திரங்களை நிறுவுதல், கேட்போர் கூடத்தின் எஞ்சிய வேலைகளைப் பூர்த்தி செய்தல், மற்றும் நில அலங்காரப் பணிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன், அதற்கமைய, குறித்த கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்காக நகர அபிவிருத்தி, கடலோரப் பாதுகாப்பு, கழிவகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் அலுவல்கள் அமைச்சுக்குத் தெவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. வேரஸ் ஆறு மழைநீர் வடிகாலமைப்பு மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகள் வழங்கல்

கொழும்பை அண்டிய மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தல், சுற்றாடலை மேம்படுத்தல், சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல், சரணாலயங்களைப் பாதுகாத்தல் மற்றும் கால்வாய்த் தொகுதியை விரிவாக்கல், போன்ற விடயங்களை நோக்காகக் கொண்டு வேரஸ் ஆறு மழைநீர் வடிகாலமைப்பு மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த கருத்திட்டத்தால் பாதிப்புக்குள்ளாகும் கட்டிடங்கள் மற்றும் கட்டிட வடிவமைப்புக்களுக்காக விலைமதிப்புத் திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்ட தொகையின் 80ம% வீதத்தினை செலுத்துவதற்கும், கருத்திட்டத்தின் கீழ் முழுமையாக அகற்றப்பட வேண்டிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு 06 மாதங்களுக்கு தற்காலிக வீட்டு வசதிகளுக்காக வாடகையை செலுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கருத்திட்டத்திற்கான காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன், கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2020 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படவுள்ளது.

இக்கருத்திட்டத்தால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைக் குறைக்கும் நோக்கில், அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் சட்ட ரீதியான இழப்பீட்டுத் தொகை வழங்குதல் தவிர்க்க முடியாத காரணமாக அமைவதாலும், 06 மாதங்களை விட மேலும் அதிகரிக்கும் போது குறித்த இழப்பீடு வழங்கும் வரை மேலதிக காலப்பகுதிக்கான தற்காலிக வீடுகளில் குடியமர்வதற்கு செலுத்தப்படும் வாடகையை தொடர்ந்தும் வழங்குவதற்கும், முழுமையாக அகற்றப்படும் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் வடிவமைப்புக்களுக்கும் விலைமதிப்புத் திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்ட மொத்த மதிப்பீட்டுத் தொகையின் 100% வீதம் குடும்பங்களுக்குச் செலுத்தவும் நிதி அமைச்சரான கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. விளையாட்டுக்கான பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், விளையாட்டுக்கான பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு மற்றும் விளையாட்டுக்கான மாணவர் புலமைப்பரிசில் மற்றும் போசாக்குக் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை அதிகரித்தல்

1989 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக ஒரு மாவட்டத்தில் ஒரு பாடசாலையை விளையாட்டுக்களுக்கான பாடசாலையாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த கொள்கையை மேலும் பயனுறுதி வாய்ந்ததாக நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து நிகழ்;ச்சித்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, கல்வி அமைச்சரும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் சமர்ப்பித்த கீழ்க்காணும் கூட்டு யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • தற்போதுள்ள விளையாட்டுக்களுக்கான பாடசாலைகள் 26 இன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்
  • கீழ்க்காணும் பாடசாலைகளை விசேட விளையாட்டுக்களுக்கான பாடசாலைகளாக அபிவிருத்தி செய்தல்
  1. சூரியவௌ சர்வதேச விளையாட்டரங்குத் தொகுதியில் ‘கிரிக்கட் விளையாட்டுக்கான பாடசாலை’ எனும் இருமொழி புதிய தேசிய பாடசாலையை ஆரம்பித்து அபிவிருத்தி செய்தல் மற்றும் 2021 ஆம் ஆண்டு தொடக்கம் 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குதல்.
  2. பெல்வத்த நவோதயா பாடசாலையை மெய்வல்லுனர் விளையாட்டுக்கள்/ கரப்பந்து விளையாட்டுக்கான பாடசாலையாக மேம்படுத்தல்.
  3. பிட்டிபன மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தை மெய்வல்லுனர் விளையாட்டுக்களுக்காக மேம்படுத்தல்.
  4. மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தை காற்பந்து/ மெய்வல்லுனர் விளையாட்டுக்களுக்காக மேம்படுத்தல்
  • மாணவர் விடுதி இல்லாத விளையாட்டுக்களுக்கான பாடசாலைகளில் புதிதாக விடுதிகளை அமைத்தல் மற்றும் தற்போதுள்ள விடுதிகளை அபிவிருத்தி செய்தல்
  • மாணவர்களுக்கான விளையாட்டுக்களுக்கான புலமைப்பரிசில் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை சமகாலத்திற்கு ஏற்ற வகையில் அதிகரித்தல்

08. பால்நிலை மற்றும் வயதிற்கமைய வகைப்படுத்தப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களைத் திரட்டுவதற்கான தேசிய கொள்கையை வகுத்தல்

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் குடிசன மதிப்பீடு மற்றும் ஆய்வுகள் மற்றும் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்படும் ஒருசில ஆய்வுகளைத் தவிர பால்நிலை மற்றும் வயதிற்கமைய தகவல்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமங்களால் கொள்கைகள் மற்றும் திட்டமிடல் செயன்முறைகளில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தித் துறையில் அரசாங்கம் வழங்கியுள்ள முன்னுரிமைகளை அடையாளங் காணல், அவற்றின் போக்குகளை விளங்கிக் கொள்ளல் மற்றும் அவற்றுக்குத் தீர்வுகளை வழங்கும் போது திட்டமிடல் மற்றும் மூலோபாயங்களை மேற்கொள்வதற்கு தகவல்கள் அவசியமாகும். அதற்கமைய, அமைச்சு, திணைக்களங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் தமது விடயப்பரப்புக்களின் கீழ் மெற்கொள்ளும் அனைத்து குடிசன மதிப்பீடு, ஆய்வுகள் மற்றும் கற்கைகள் மூலம் திரட்டப்படும் பால்நிலை மற்றும் வயதிற்கேற்ப திரட்டுவதைக் கட்டாயமாக்குவதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. வாகன இலக்கத் தகடு மற்றும் சாரதி அனுமதிப் பத்திரங்களை விரைவுத் தபால் (Speed Post) மூலம் சேவை பெறுநர்களுக்கு வழங்குவதற்கான வசதிகளை வழங்கல்

வாகனமொன்றைப் பதிவு செய்யும் போது வாகனப் பதிவுச் சான்றிதழ், வாகன இலக்கத் தகடு மற்றும் ஸ்ரிக்கர் ஒன்றும் வழங்கப்படும். தற்போதுள்ள பொறிமுறைக்கமைய அவற்றைப் பெறுவதற்காக குறிப்பிட்ட காலமும் செலவும் அதேபோல் மோட்டார் வாகனத் திணைக்களத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறே, புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பதிவுத் தபாலில் சேவை பெறுநருக்கு அனுப்பப்படும் போது காலதாமதம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. அதற்குத் தீர்வாக தபால் திணைக்களத்தின் நடைமுறையிலுள்ள விரைவுத் தபால் சேவையின் மூலம் சேவை பெறுநர்களின் வீடுகளுக்கே வழங்குவதற்காக பொருத்தமான நிகழ்ச்சித்திட்டத்தை தபால் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. இலங்கை – சிங்கப்பூர் இடையிலான 50 வருட இராஜதந்திரத் தொடர்புகளை நினைவுகூருவதற்கான நினைவு முத்திரை வெளியிடல்

இலங்கை – சிங்கப்பூர் இடையிலான 50 வருட இராஜதந்திரத் தொடர்புகளை நினைவுகூருவதற்காக இலங்கை தபால் திணைக்களம் மற்றும் சிங்கப்பூர் தபால் நிறுவனமும் இணைந்து 02 முத்திரைகள் வீதம் வெளியிடுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளத. அதற்கமைய, இரு நாடுகளும் பொதுவான தொனிப்பொருளாக ‘சமுத்திர உயிரியல் பாதுகாப்பு’ தொனிப்பொருளின் கீழ் முத்தியை அச்சிடுவதற்கும், வெளியிடப்படும் முத்திரைகளில் 4000 உம் மற்றும் நினைவுப் பத்திரங்கள் 1000 உம் இருதரப்புக்கிடையே பரிமாறிக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இருதரப்புக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கு வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 2021 ஆம் ஆண்டுக்கான கால்நடைகள் அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தல்

கால்நடைகள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் கீழ் 2021 ஆம் ஆண்டில் ‘சௌபாக்கியா’ பால் பசுக்கள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் உள்ளுர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ‘பால் பசுக்கள் அபிவிருத்தி நிலையம்’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, ‘சௌபாக்கியா’ பால் பசுக்கள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கால்நடை கருவளர்ப்பை வினைத்திறனாக்குவதற்கு, கால்நடைகளின் போசாக்கை அதிகரிப்பதற்கும், கால்நடை கழிவு முகாமைத்துவத்தின் மூலம் சுற்றாடல் நேயப் பண்ணைகளை அமைத்தல், போன்றன திட்டமிடப்பட்டுள்ளன. அதேபோல் பால் பசுக்கள் அபிவிருத்தி நிலையத்தை அமைக்கும் திட்டத்தின் மூலம் செயற்கைக் கருவுறல் நிலையத்தை மேம்படுத்தல், அதற்குத் தேவையான உள்ளீடுகள் மற்றும் பயிற்சிகளை வழங்கல், கால்நடை மருத்துவ அலுவலத்தை வலையமைப்பாக்கல் போன்ற பணிகளின் மூலம் பால் பெறுமதிசேர் செயன்முறையை விருத்தி செய்வதற்க எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2021 – 2023 இடைக்கால வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. தேசிய கலாபவனத்தை மேம்படுத்தலும் பாதுகாத்தலும்

தேசிய கலாபவனத்தை மறுசீரமைப்புச் செய்வதற்குரிய அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதடன், 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்காக 42 மில்லின் ரூபாய்கள் ஒதுக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அதற்மைவாக மறுசீரமைப்பு இடம்பெறவில்லை. தற்போது அதன் பிரதான கட்டிடம் மழைநீர் வடிந்து செல்வதற்குப் பொருத்தப்பட்டுள்ள கூரை மழைநீர் வடிகால் மூலம் நீர் கசிந்து செல்வதால், கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதுடன், துரிதமாக திருத்தப்பட வேண்டியுள்ளது. அதனால், இலங்கைக் கடற்படையின் சேவையைப் பெற்றுக் கொண்டு தேசிய கலாபவனத்தின் குறித்த திருத்த வேலைகளை பூர்த்தி செய்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சரான கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. சுரக்ஷா மாணவர் காப்புறுதி

சுரக்ஷா மாணவர் காப்புறுதியை வழங்குவதற்காக அரசாங்கத்திற்குச் சொந்தமான காப்புறுதிச் சேவை வழங்குனர்களிடம் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மாத்திரம் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. அதற்கமைய, இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாட்டு எட்டப்பட்ட முடிவுகளின் பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, சுரக்ஷா மாணவர் காப்புறுதி வழங்குவதற்கான விலை மனுக்கோரலை இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. ஏரியல் பண்டல் கன்டக்ரிவ் யுடர. (ABC) 230/400V3x70+54.6+ ச.மி.மி. 16-கி.மீ.2000 வழங்கல் மற்றும் விநியோகத்திற்கான ஒப்பந்தம் வழங்கல் – இலக்கம்

இலங்கை மின்சார சபையின் விநியோக வலயம் 2 இற்கான ஏரியல் பண்டல் கன்டக்ரிவ் வங்குவதற்கான போட்டி முறி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, இலங்கை மின்சார சபையின் விநியோக வலயம் 2 இற்கான ஏரியல் பண்டல் கன்டக்ரிவ் யுடர..(ABC) 230/400V3x70+54.6+ ச.மி.மி. 16-கி.மீ.2000 வழங்கல் மற்றும் விநியோகத்திற்கான ஒப்பந்தம் M/s ACL Cables PLC நிறுவனத்திற்கு வழங்குவதற்கு மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. 2020.12.01 இலிருந்து 2021.07.31 வரை எட்டு மாதங்களுக்கான பெற்றோல் இறக்கமதிக்கான நீண்டகால ஒப்பந்தம் வழங்கல்

2020.12.01 இலிருந்து 2021.07.31 வரை எட்டு மாதங்களுக்கான பெற்றோல் (92 Unl) கொள்கலன்கள் 1,564,500 + 10/-5% உம் மற்றும் பெற்றோல் (95Unl) கொள்கலன்கள் 535,500+10/-5% உம் இறக்கமதிக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடம் முறி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, குறித்த பெறுகை M/s BB Energy (Asia) Pte. Ltd, Singapore நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. களுத்துறை புதிய நீதிமன்றக் கட்டிடத்தொகுதி

களுத்துறை நீதிமன்றக் கட்டிடத்தொகுதி தற்போது தொல்லியல் பெறுமதி கொண்ட காணி மற்றும் கட்டிடங்களில் இயங்குவதுடன், களுத்தறை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக 1.064 ஹெக்ரயார் காணித் துண்டு நீதி அமைச்சின் கீழ் பெறப்பட்டுள்ளது. அதற்கமைய, புதிய நீதிமன்றக் கட்டிடத்தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஆலோசனைச் சேவை மற்றும் பொறியியல் பணிகள் தொடர்பாக மத்திய ஆலோசனைப் பணியகத்திற்கு வழங்குவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. க்றாண்ட் ஹயார்ட் கருத்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்குக் குழுவொன்றை நியமித்தல்

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் லிட்ரோ காஸ் லங்கா லிமிட்டட் போன்ற நிறுவனங்களின் உரிமையைக் கொண்டிருக்கும் சினோ லங்கா தனியார் கம்பனியின் கீழ் க்றாண்ட் ஹயார்ட் ஹோட்டல் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நிர்மாணப் பணிகளைப் பூர்;த்தி செய்து குறித்த ஹோட்டல் கருத்திட்டம் 2016 ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் நிறைவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நியமிக்கப்பட்ட சினோ லங்கா தனியார் கம்பனியின் புதிய பணிப்பாளர் சபை மூலம் முன்னிருந்த அரசாங்கத்தால் கைச்சாத்திட்ட கூடுதலான ஒப்பந்தங்க எவ்வித நியாயமின்றி செல்லுபடியற்றதாக்கி குறித்த திட்டங்களுக்காக புதிய ஒப்பந்தக்காரர்களுடன் ஒப்பங்தங்களை மேற்கொண்டுள்ளனர். அதனால் சில நிறுவனங்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், ஏறத்தாழ 1.8 மில்லியன் ரூபாய்கள் சினோ லங்கா நிறுவனம் இழப்பீடாகச் செலுத்த வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப திட்டமிடலுக்கமைய 30 பில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் பூர்த்தி செய்வதற்கு இருந்தபோதிலும், இக்கருத்திட்டத்தின் சமகால செலவு 60 பில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. சினோ லங்கா தனியார் கம்பனி கடந்தகால அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடிகளால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளதால், அரசாங்கத்திற்கு நிதி ரீதியான நட்டம் ஏற்பட்டுள்ளதா என்பதை விசாரணை செய்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்காக நிதி அமைச்சரான கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. 95.86 கிலோமீற்றர் நீளமான வடமத்திய மஹ அல நிர்மாணிப்புக் கருத்திட்டத்தின் 27.7 கிலோமீற்றர் நீளமான சுரங்கப் பாதையை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் வழங்கல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்தின் ஒரு பக்கேஜாக கோந்துருவாவ தொடக்கம் நாமல்புர வரையான மின்னேரியா, கிரித்தலே, மற்றும் ஹூருளு பாதுகாப்பு வனம் மற்றும் சரணாலயத்திற்குக் கீழ் 27.7 கிலோமீற்றர் நீளமான சுரங்கப் பாதையை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளத. அதற்காக பொருத்தமான ஒப்பந்தக்காரரைத் தெரிவு செய்வதற்கு சர்வதேச போட்டி முறி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, குறித்த ஒப்பந்தம் China State Construction Engineering Corporation Ltd. நிறுவனத்திற்கு வழங்குவதற்காக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

2020.11.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். தேசிய பொருளாதாரத்தை வலுவூட்டும் வகையில் அரச வங்கிகளை முறைமைப்படுத்தி வினைத்திறனாக மாற்றுவதற்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் கால எல்லையை நீடித்தல். அந்நிய செலாவணி…

2020.11.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். தேசிய பொருளாதாரத்தை வலுவூட்டும் வகையில் அரச வங்கிகளை முறைமைப்படுத்தி வினைத்திறனாக மாற்றுவதற்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் கால எல்லையை நீடித்தல். அந்நிய செலாவணி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *