Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அரசியல் உள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக கவிஞர் அஹ்னாப் தடுத்து வைப்பு - Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store

அரசியல் உள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக கவிஞர் அஹ்னாப் தடுத்து வைப்பு

  • 35

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கடந்த 12ம் திகதி அஹ்னாப் ஜசீமை நீதிமன்றத்திற்கு கொண்டுவரும்போது அவரது சட்டத்தரணிக்கு ஏன் அறிவிக்கவில்லையென்ற நீதிபதியின் கேள்விக்கு சட்டத்தரணிக்கு அறிவிக்குமாறு ஜசீம் கோரவில்லையென காவல் ஆய்வாளர் கூறியுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற இல: 44230/08/20 வழக்கு (29.06.2021) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது விளக்கமளித்த பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொலிஸ் ஆய்வாளர் கபில ஹேமந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டு, சட்டத்தரணியின் உதவி இல்லாமல் கடந்த ஒரு வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அஹ்னாப் ஜசீம் இந்நாட்டின் சட்டத்திற்கமைய கிடைக்க வேண்டிய சட்டத்தரணியின் உதவியை தவிர்ப்பதற்கு இலங்கை பொலிஸ் இப்படியான காரணங்களைக் கூறுவது வேடிக்கையாக உளளது.

ஒரு தடுப்புக் காவல் கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது அவரது சட்டத்தரணிக்கு அல்லது உறவினர்களுக்கு அறிவிக்காமல், தடுப்புக் காவலில் உள்ள ஒருவருக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்றே தவறியதை நியாயப்படுத்தி பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொலிஸ் ஆய்வாளர் நீதிமன்றத்தில் விளக்கமளித்திருப்பது பொறுப்புவாய்ந்த ஒரு அரச அதிகாரி; என்ற வகையில் அல்ல என்பது தெரிகிறது.

பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து அவருக்கு சம்பளம் கொடுப்பது அரசியல் அதிகாரத்திற்காக நபர்களின் உரிமைகளை மீறுவதற்கல்ல. இந்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் கடமையை செய்வதற்குத்தான்.

2020 மே மாதம் 16ம் திகதி கைது செய்யப்பட்ட 26 வயதுடைய கவிஞர் அஹ்னாப் ஜசீமிற்கு எதிராக குற்றங்களை முன்வைக்க, பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பல மாதங்கள் தேவைப்பட்டிருந்தன. அது மாத்திரமல்ல, உறவினர்களுக்கோ, சட்டத்தரணிக்கோ காட்டாமல் அவரை 10 மாதங்கள் தடுத்து வைத்துள்ளனர். சட்டத்தரணியை சந்தித்த முதல் சந்தரப்பத்திலிருந்து சட்டத்தரணியுடனான உரையாடல்களை அறிவித்து சட்ட உதவி சம்பந்தமாக உரிமைகளை மீறி, சட்டத்தரணி தொழிலும், இந்நாட்டு நீதிமன்ற முறையும் கேலிக் கூத்தாக ஆக்கப்பட்டுள்ளது.

அஹ்னாப் ஜசீமின் ‘நவரசம்” சஞ்சிகையில் தீவிரவாத கருத்துக்கள் அடங்கியிருப்பதாக குற்றஞ்சாட்டி, 2020 டிசம்பர் மாதம் 11ம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தது. அதன் பின்னர் ஜூன் 12ம் திகதி தாக்கல் செய்யப்பட்ட மேலதிக அறிக்கையில் அஹ்னாபிற்கு எதிராக மேலும் குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கவிஞர் அஹ்னாப் ஜசீம் தீவிரவாதத்தை பரப்புகிறார் என குற்றஞ்சாட்டுவதற்கு, அவர் எழுதிய ‘நவரசம்” கவிதை தொகுப்பு சம்பந்தமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் பொலிஸார் விளக்கமளிக்கவில்லை. அந்த கவிதை நூலை மொழிபெயர்த்தவர் கவிதைகள் சம்பந்தமாகவோ, தமிழ் இலக்கியம் சம்பந்தமாகவோ புலமை பெற்றவரல்ல.

நீதிமன்ற நடவடிக்கைகளை மொழிபெயர்ப்பு செய்யும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. அது மாத்திரமல்ல, அந்தக் கவிதைகள் மனித மனதில் வன்முறை ஆவேசத்தை தூண்டுபவையாகுமென எந்த அறிவியல் அடிப்படையுமின்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைப் பார்க்கும் போது, ஏதோவொரு அரசியல் உள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்த இளம் கவிஞரை பொலிஸார் பலவந்தமாக தடுத்து வைத்திருப்பது தெரிகிறது. TLDR

கடந்த 12ம் திகதி அஹ்னாப் ஜசீமை நீதிமன்றத்திற்கு கொண்டுவரும்போது அவரது சட்டத்தரணிக்கு ஏன் அறிவிக்கவில்லையென்ற நீதிபதியின் கேள்விக்கு சட்டத்தரணிக்கு அறிவிக்குமாறு ஜசீம் கோரவில்லையென காவல் ஆய்வாளர் கூறியுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற…

கடந்த 12ம் திகதி அஹ்னாப் ஜசீமை நீதிமன்றத்திற்கு கொண்டுவரும்போது அவரது சட்டத்தரணிக்கு ஏன் அறிவிக்கவில்லையென்ற நீதிபதியின் கேள்விக்கு சட்டத்தரணிக்கு அறிவிக்குமாறு ஜசீம் கோரவில்லையென காவல் ஆய்வாளர் கூறியுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற…