அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 14

  • 16

“என்ன நான் கேட்டுகிட்டே இருக்கேன் நீ எந்த பதிலும் சொல்லாம இருக்கே!” என்று கேட்டாள் அலைஸ்.

“அதில்லை உங்களுக்கு எதுக்கு இந்த கஷ்டமான பயிற்சி எல்லாம் அதுதான் யோசனை” என்றான்.

“நான் சாதாரண அலைஸ் ஆக சொன்னதால் கத்து தர மாட்டேன் என்கிறே இரு இந்த கான்மன் உலகத்தோட இளவரசி ஆக கட்டளை இடறேன்.” என்றாள்.

அவள் அப்படி சொன்ன பிறகும் வேற என்ன செய்ய முடியும்..

“சரி சரி… வா..” என்றவன். ஒரு ஓரமாக வந்து ஒவ்வொரு ஸ்டெப்பாக அவளுக்கு சொல்லி கொடுக்க முயற்சி செய்தான்.

“இதெல்லாம் கற்றுக்கொள்ள நானெல்லாம் பலவருடங்களாக பயிற்சி பெற்று கொண்டோம் தெரியுமா” என்று சொல்லி கொண்டே ஒரு முறையை சொல்ல அதை அவளும் செய்ய போக கால் இடறி,

“ஆஹ்ஹ்..” அவளை அப்படியே பிடித்து கொண்ட ரியூகி.

“அப்போவே சொன்னேன் இதெல்லாம் வேணாம் என்னு” என்று அவளிடம் சொல்ல தன் பிடிவாதத்தை எண்ணி நொந்து கொண்டாள் அலைஸ்.

“ஆனா சரி பரவாயில்லை இங்கேயே கொஞ்ச நேரம் சுத்திப்பாக்கலாம்.” என்று மறுபடியும் கண்களை சிமிட்டி கொண்டே அலைஸ் சொல்ல ரியூகி அதற்கு இணங்கி பாதையை ஒட்டிய காட்டுக்குள் சென்றான்.

மறுபுறம்,

“என்ன மேடம் எதுவும் பேசாமல் வறீங்க?” என்று கியோன் சோஃபியை சீண்டினான்.

“அதான் என் வாயை அடைச்சிட்டியே” என்று கோபமாகவே சொன்னாள் அவள். அவன் சிரித்து விட்டு,

“இப்போ மறுபடியும் திறக்க இன்னுமொன்று தரவா என்ன?” என்று கேட்க அவள் பயந்து போய்,

“என்ன?”

“இன்னொரு முத்தம் வேணுமான்னு கேட்டேன்” என்றான்.

“சீ… உன்னை.”

“என்ன என்ன என்னை.”

“போடா… நான் இதை என்னோட அண்ணன் கிட்ட சொல்லிடுவேன்.”

“நல்லது தானே நான் சொல்லுறத விட நீயே சொல்லிட்டே என்றால் ரியூகி உடனே ஏத்துக்குவான்.” என்றான் கியோன்,

“கியோன் என்னை யோசிக்க விடு நான் எப்படி உன்னை…” என்று இழுத்தாள்.

“காதலிக்குறது. என்று கேக்கிறாயா… பயப்படாதே.. காதலிச்சிட்டு உன்னை கழட்டி விட்டுட்டு போற ஆளு நான் இல்ல… நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருப்போம்.” என்றான்.

“நான் உன்னை விட வயசில சின்னவ எனக்கு குடும்ப உறவு எப்பேற்பட்டது அதை எப்படி நடத்தனும் எந்த அறிவும் இல்லாத குறும்பு காரி”

“அதனால…”

“அதனால எனக்கு கொஞ்சம் நேரம் கொடு நான் யோசித்து என்னோட பதிலை சொல்லுறேன்.” என்றாள்.

“கண்டிப்பா தாராளமாக எடுத்துக்க ஆனா முடிவு நமக்கு சாதகமாக இருக்கணும் சரியா”

“சரி…”

ரியூகி… அலீஸியா பக்கம்… நடப்பவை,

“எனக்கு ஆச்சரியமாக இருக்கு இப்படி இன்னொரு உலகம் மாயமந்திரம் எல்லாமே கற்பனை என்னு நினைச்சிட்டு இருந்தேன். உண்மையா சொல்லணும் என்றால். நீ கூட என் கனவில் எதிரியாக வந்தவன் தான்” என்றால் அலைஸ்.

“என்ன நான் உன்னோட கனவில் வந்தேனா.”

“உன்னை சந்திப்பதற்கு முன்னாடி” என்று ஆரம்பித்தவள் அதனை சொல்லி முடிக்கவும் ஒரு நீர்த்தேக்கம் வரவும் சரியாக இருந்தது.

“அது சரி… இது எல்லாமே நம்ம கான் மன் உலகம் தானா.”

“ஆமா நாலு இளவரசுகளும் இதை ஆளப்போறீங்க வருங்காலத்தில் உங்களுக்கு இருப்பது போல் மாய சக்தி எல்லாம் எங்களுக்கு கிடையாது நாங்க சாதாரண மனிசங்கதானே” என்று ரியூகி சொல்ல ஒரு குட்டி அமைதி பரவிற்று. அலைஸ் தன்னுடைய காதலை சொல்ல இதுதான் பொருத்தமான நேரம் என்றெண்ணி ரியூகி பக்கம் திரும்ப அதற்குள் ரியூகி,

“ஓகே… நாம போகலாம் கியோனும் சோஃபியும் காத்து கொண்டு இருப்பாங்க” என்று விட்டு அவன் முன்னாடி நடக்க வாய்ப்பை நழுவவிட்ட அலைஸ் ஏமாந்து போனாள். அவர்கள் அங்கு போனபோது கொஞ்சம் தூரத்தில் சோஃபி மட்டும் தனியாக வருவது தெரிந்தது.

“ரியூகி ரியூகி” என்றதுமே அவன் பதறிப்போய் விசாரிக்க,

“கியோன்… கியோன்.” என்று மூச்சிரைக்க சொல்ல அவனுக்கு ஏதோ ஆபத்து என்பதை புரிந்து,

“என்னாச்சு அவனுக்கு..?”

தொடரும்……

ALF. Sanfara.

“என்ன நான் கேட்டுகிட்டே இருக்கேன் நீ எந்த பதிலும் சொல்லாம இருக்கே!” என்று கேட்டாள் அலைஸ். “அதில்லை உங்களுக்கு எதுக்கு இந்த கஷ்டமான பயிற்சி எல்லாம் அதுதான் யோசனை” என்றான். “நான் சாதாரண அலைஸ்…

“என்ன நான் கேட்டுகிட்டே இருக்கேன் நீ எந்த பதிலும் சொல்லாம இருக்கே!” என்று கேட்டாள் அலைஸ். “அதில்லை உங்களுக்கு எதுக்கு இந்த கஷ்டமான பயிற்சி எல்லாம் அதுதான் யோசனை” என்றான். “நான் சாதாரண அலைஸ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *