Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 17 

அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 17

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“நீங்க என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க?” என்று கேட்டாள் கோரின்.

ரியூகியும் அலைசும் நடந்தது அனைத்தும் ஒன்றுவிடாமல் சொல்லி முடிக்க, கோரின் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தாள்.

“அலீஸியா… நீ என்னோட தங்கை. எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? நாம மத்த சகோதரர்களையும் கண்டுபிடிக்கணும். எனக்கு அவங்க எல்லோரையும் அம்மா அப்பாவையும் பாக்கணும் போலவே இருக்கு.” என்றாள்.

அப்பறம் ரியூகியை நன்றி உணர்வோடு நோக்கி,

“ஓஹ் ரியூகி… இவளை பத்திரமா கொண்டுவந்து சேர்த்ததற்கு ரொம்ப நன்றி… நாம ரெண்டாவது நாளில் புறப்படலாம். இங்கே ஊரில் சில வேலைகள் பாக்கி இருக்கு. நான் அவற்றை எல்லாம் முடிக்கணும். அதனால எல்லோரும் இங்கேயே தங்கிக்கோங்க.” என்றாள் கோரின்.

ஒரு வழியாக ஏனைய மூவரில் ஒருத்தியை கண்டுபிடித்து விட்ட சந்தோசம் அலைஸுக்கு. அவ்விடத்தில் இருந்து எழுந்த போது கோரின் ரியூகியிடம்,

“ஆஹ்… இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். நீ ரொம்ப அழகா இருக்கே ரியூகி.” என்றவள். அவன் கன்னத்தை கிள்ளிவிட்டு எழுந்து சென்றாள். கோரினின் இச்செயல் எல்லோரையும் தடுமாற வைத்து விட்டது.

மறுநாள் காலையில் எப்படியாவது தன்னுடைய காதலை ரியூகி கிட்ட சொல்லிவிட வேண்டும் என்றெண்ணி கொண்டே அலைஸ் நேரத்தோடு எழும்பி ரியூகி அறைக்கதவை மெல்ல திறந்தாள்.

அங்கு ரியூகி அருகில் கோரின் உறங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலைஸ் அலற அவன் எழுந்து அவனும் அலற கண்களை கசக்கி கொண்டு சோம்பல் முடித்து கொண்டு எழுந்த கோரின்.

“என்ன அலைஸ் கதவை தட்டிட்டு உள்ளே வரமாட்டியா? பாரு இவன் பயத்துல அலறியதை” என்று சர்வ சாதாரணமாக சொன்னாள்.

அலைசுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ரொம்பவும் தர்ம சங்கடமாகி விட்டது.

“மன்னிச்சிடுங்க..” என்ற படியே அங்கிருந்து அகன்றாள். கோரினும் மறுபடியும் தூங்கினாள்.

தன்னுடைய காதல் இவ்வளவு சீக்கிரம் வெறும் காற்றாக கணவாகி போனதை எண்ணி தனியாக நின்று அழுது கொண்டிருந்தாள் அலைஸ். அப்போது ரியூகி அங்கு வந்தான்.

“ஹே… அலைஸ் அவங்க சொன்னத்துக்காகவா அழரே ஏதோ அவங்க தெரியாம பண்ணிட்டாங்க.” என்றான். அவள் மேலும் அழுதாள்.

“உன்னை தான் சொல்லுறேன். புரிஞ்சிக்க மொதல்ல அழரத நிறுத்து.” என்றான்.

“அவங்களுக்கு தான் அறிவில்லை என்றால் உனக்கு எங்க போச்சு புத்தி இதுவரை நீ என்னை புரிஞ்சிக்கலியே.” என்று விசும்பினாள்.

அலைஸ் எதை பற்றி பேசுகிறாள் என்று அவனுக்கு புரியவில்லை.

“என்ன சொல்ல வர்றீங்க நான் எப்போ உங்க மனச”

“இன்னொரு பொண்ணு உன்னை நெருங்கும்போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? அது என்னோட அக்காவா இருந்தாலும் சரி ஏன்னா.. ஏன்னா… நான் ஒன்ன அந்த அளவுக்கு லவ் பண்ணுறேன்.” என்றாள். மூச்சு விடாமல், அவ்வளவையும் இமைக்காமல் கேட்டு கொண்டிருந்தவன். தன்னை சுதாரித்து கொண்டு,

“பிரின்சஸ் அலைஸ் நீங்க ஏதோ மனச போட்டு குழப்பி கிட்டு இருக்கீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாகிடும்.” என்று சொன்னதும் சுக்கு நூறாகி போனாள் அலைஸ்.

சுட்டு போட்டாலும் ரியூகி தன்னை ஏறெடுத்து பார்க்க போவதில்லை என்பது மேலும் உறுதியானது. அவன் என்னை அவனோட இளவரசி ஆக மட்டுமே பார்க்கிறான். மரியாதையோடு ஆனா என் மேலே அன்பெல்லாம் கிடையாது. என்று மனதில் நினைத்தவாறு வீட்டில் நுழைந்தாள் அவள்.

தொடரும்……
ALF. Sanfara.

“நீங்க என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க?” என்று கேட்டாள் கோரின். ரியூகியும் அலைசும் நடந்தது அனைத்தும் ஒன்றுவிடாமல் சொல்லி முடிக்க, கோரின் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தாள். “அலீஸியா… நீ என்னோட தங்கை. எனக்கு…

“நீங்க என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க?” என்று கேட்டாள் கோரின். ரியூகியும் அலைசும் நடந்தது அனைத்தும் ஒன்றுவிடாமல் சொல்லி முடிக்க, கோரின் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தாள். “அலீஸியா… நீ என்னோட தங்கை. எனக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *