Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அல்குர்ஆனிய சிந்தனைகள் 

அல்குர்ஆனிய சிந்தனைகள்

  • 6

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நான் குர்ஆனை வாசிக்கையில், இரு சூராக்களுக்கு இடையிலான அல்லது இரு வசனங்களுக்கு இடையிலான கால இடைவெளி உண்மையிலேயே மிக அதிகம் என்று சிலபோது எண்ணுவேன். இந்த இடைவெளி பற்றி வாசகருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டே அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதோ என்றெண்ணி வியப்புறுவேன். குர்ஆனின் இறுதிப் பகுதியில் இடம்பெறும் ‘வெற்றி’ என்ற அத்தியாயம் (சூரா நஸ்ரு), ‘நிராகரிப்பாளர்கள்’ எனும் அத்தியாயத்தை (சூரா காஃபிரூன்) தொட்டடுத்து வருகிறது என்பதை பார்க்கிறோம். இவற்றுள் இரண்டாவது மதீனாக் காலகட்டத்தின் ஏறத்தாழ இறுதியில் அருளப்பட்டது. அதே சமயம், முதலாவதோ மக்கா காலக்கட்டத்தின் துவக்கத்தில் அருளப்பட்டது. அதாவது, இவ்விரு அத்தியாயங்களுக்கும் இடையிலான காலஇடைவெளி இருபது ஆண்டுகளுக்கும் அதிகம். எனினும் நாம் குர்ஆனை வாசிக்கும் போது, அவற்றுள் ஒன்றிலிருந்து மற்றதுக்கு நகரும்போது இவ்விடைவெளி நொடிப்பொழுதில் கடந்து மறைகின்றது.”

“இஸ்லாம் புதியதொரு போக்காகத் தோன்றியிருந்த ஒரு காலத்தில், அதன் ஆதரவாளர்கள் கடுமையான நெருக்கடியிலிருந்த ஒரு காலத்தில், எதிரிகள் அதனைப் பிடிவாதமாக நிராகரித்துக் கொண்டிருந்த ஒரு காலத்தில் இவற்றுள் முதலாவது அத்தியாயம் (109-வது அத்தியாயம்) அருளப்பட்டது. முஸ்லிம் சமுதாயம் புரிய வேண்டியிருந்த தியாகங்களுக்கும், அதன் பாதையில் இடப்பட்ட தடைக் கற்களுக்கும் அப்பால், அதன் நடைமுறை ஐக்கியத்திற்கான கோட்பாடுகளை நிலைநிறுத்துவதே இந்த அத்தியாயத்தின் பாத்திரமாக இருந்தது.”

“அறிகுறிகள் அனைத்தும் இஸ்லாத்தின் அறுதி வெற்றியை குறிப்பால் தெரிவித்துக் கொண்டிருந்த மற்றொரு காலத்தில் இவற்றுள் இரண்டாவது அத்தியாயம் (110-வது அத்தியாயம்) அருளப்பட்டது. ஆரம்பத்தில் பகை மனப்பான்மை கொண்டிருந்த அறபுக் கோத்திரங்களெல்லாம் இப்போது இஸ்லாத்தின் பக்கம் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து கொண்டிருந்தன. இறைத்தூதரவர்கள் (ஸல்) தனது வாழ்வின் அந்திம காலம் நெருங்குவதை உணர ஆரம்பித்திருந்த காலமது. உலகின் மாபெரும் போர்க்கள நாயகர்களால் கூட இணையாக முடியாதவொரு ஜிஹாதிய வாழ்க்கை வாழ்ந்த நபியவர்கள் அப்போது அதிகமதிகம் இறைவனைத் துதிப்பது, மன்னிப்பை வேண்டுவது என மரணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சுமந்திருந்த பாரத்தைச் சுமக்க முயன்றிருந்தால் மலைகளே கூட உடைந்து நொறுங்கியிருக்கும்!”

“இரு அத்தியாயங்களும் தெளிவாக வேறுபடும் இரு சித்திரங்களை முன்வைக்கின்றன: ஒன்று விதை விதைப்பதைச் சித்தரிக்கிறது. மற்றது அறுவடையைச் சித்தரிக்கிறது. இந்த வேறுபாட்டை நாம் உணர வேண்டும் என்பதுதான் இந்த குர்ஆனிய சூராக்கள் இவ்விதம் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதன் நோக்கமோ என்பதை எண்ணி நான் மீண்டும் வியப்பிலாழ்கிறேன்.

 முஹம்மது அல்-கஸ்ஸாலி

நான் குர்ஆனை வாசிக்கையில், இரு சூராக்களுக்கு இடையிலான அல்லது இரு வசனங்களுக்கு இடையிலான கால இடைவெளி உண்மையிலேயே மிக அதிகம் என்று சிலபோது எண்ணுவேன். இந்த இடைவெளி பற்றி வாசகருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதற்காக…

நான் குர்ஆனை வாசிக்கையில், இரு சூராக்களுக்கு இடையிலான அல்லது இரு வசனங்களுக்கு இடையிலான கால இடைவெளி உண்மையிலேயே மிக அதிகம் என்று சிலபோது எண்ணுவேன். இந்த இடைவெளி பற்றி வாசகருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதற்காக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *