Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அவதூறு பரப்பலும் வீண் சந்தேகமும் 

அவதூறு பரப்பலும் வீண் சந்தேகமும்

  • 69

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தற்காலத்தில் ஒரு மனிதருக்கு மத்தியில் பொறாமையும் குரோதமும் வஞ்சகமும் ஒருவரை ஒருவர் வெறுக்கவும் இதமான ஒற்றுமை உறவு இல்லாததற்கும், தவறான புரிதல் களுக்கும் பிரதான மாக இருப்பது தேவையற்ற சந்தேகங்களும், அவதூறு பரப்பலும் என்றால் ஐயமில்லை. நம் வாழ்வில் சில சந்தர்ப்பங்களில் அடுத்தவரைப் பற்றி தோன்றும் தீய எண்ணங்கள் அதாவது வீண் சந்தேகங்களை குரோதமாக மாறி, தான் கொண்ட அந்த வீண் சந்தேகங்களை அவதூறாக பரப்பும் நிலை ஏற்படும்.

இஸ்லாத்தை பரிபூரண வாழ்க்கை நெறியாகவும், முஸ்லிம் என அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் நாம் கண்டிப்பாக தப்பான சந்தேகங்களையும், அவதூறு பரப்பலையும் நிறுத்தல் வேண்டும். மனிதனின் எதிரி குழப்பவாதியான ஷைத்தான் நம்மை பாவத்தின் பக்கம் மிக மிக இலகுவாக இழுத்துச் செல்ல கையில் எடுக்கும் ஆயுதம் இந்த வீண் சந்தேகம் ஆகும். அவ் ஆயுதத்தின் கூறிய தன்மையால் அது அவதூறு கூறும் ஓர் விடயமாக மாறுகிறது.

வல்ல இறைவன் அல்லாஹ் தவிர்த்துக் கொள்ளும் படி கூறிய மிக முக்கிய தண்டனைக்குரிய பாவமாக இது விளங்குகிறது. அவதூறு மற்றும் வீண் சந்தேகம் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதாவது

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்; சில ஊகங்கள் பாவமாகும். இன்னும் துருவித் துருவி ஆராயாதீர்கள். உங்களில் ஒருவர் மற்றவரை புறம் புறம் பேசாதீர்கள்.(24:12)

என்று கூறிவிட்டு அல்லாஹ், நீங்கள் இப்படி மற்றவரை புறம் பேசுவீர்கள் ஆயின், தொடர்ந்து அவ் வசனத்திலே கூறுகின்றான்.

உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரரின் மாமிசத்தை புசிக்க விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள்.

என இறைவன் வினவுகிறான். அப்படி என்றால் இப் பாவம் அந்த அளவு கண்டிக்கக் கூடிய பாவமாகும். மேலும் முதலில் நம்மில் யாராவது மனித மாமிசம் புசிப்போமா? அதிலும் குறிப்பாக தமது சகோதரனின் இறந்த மாமிசம்!!! எவ்வளவு வெறுப்பாக உள்ளதென்றால் அவதூறும் அப்படியே!

அல்லாஹ்! ஏ மனிதர்களே! என்று கூறாமல் நம்பிக்கை கொண்டவர்களே! என விளித்து இப்பாவச் செயலை கூறுவது என்பதனை நாம் உற்று நோக்க வேண்டும். ஏனெனில் இப்பாவம் தற்காலத்தில் ஒரு சர்வ சாதாரண பாவமாக கருதப்படுகிறது. இறைவனைப் பயந்து நரகத்தைப் பயந்து வாழும் மனிதனுக்கு இது பாவமாக தெரியாது போலும் அதனையே அல்லாஹ் நம்பிக்கை கொண்டோரே! என விளிக்கின்றது.

அல்லாஹ்வை பயப்படாமலும் அவன் தூதர் வாழ்வினை பின்பற்றாமலும் இருப்பவர்களே அதிகமாக இது போன்ற அவதூறு மற்றும் வீண் சந்தேகங்களை தினமும் செய்கின்றனர். நபியவர்களும் இதை பற்றி எச்சரித்துள்ளார்கள்.

(நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாவது அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் “பிறர் மீது கெட்ட எண்ணம் கொள்வது குறித்து நான் உங்களுக்கு எச்சரிக்கின்றேன்; ஏனெனில் கெட்ட எண்ணம் தான் பேச்சுக்களில் மிகவும் பொய்யானதாகும் (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள்; ஒட்டுக்கேட்காதீர்கள்; ஒருவருடன் ஒருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள்; சகோதரர்களாய் இருங்கள்”என கூறினார்கள். (அல் புகாரி)

இன்று எம்மால் சர்வ சாதாரணமாக நிகழும் அப் பாவத்தை பற்றி 1400 வருடங்களுக்கு முன் எம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் இது சாதாரண பாவமன்று இது தண்டனைக்குரிய பாவம் என்று கூறி விட்டார்கள். மேலும்,

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் “ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் பிறருக்கு அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்கு போதுமானதாகும். (அபூ ஹுரைரா (ரழி) நூல் (முஸ்லிம்:6)

சிலர் அடுத்தவர்கள் பற்றி எதைக் கேள்விப்பட்டாலும் உடனே அதை பரப்புவதற்கு முன்வருவர். அதை பற்றி தெரிந்து ஆராய்ச்சி செய்வதோ, அதன் உண்மை தன்மையை கண்டறிவதோ, இல்லை. உடனே பரப்பி வருகின்றனர். இப்படி ஒருவர் இருப்பாராயின் அவர் பொய்யரே!

ஆம், அவதூறினால் பாதிக்கப்பட்டவரின் மனநிலையிலிருந்து சிந்தித்து பாருங்கள். அடுத்தவர்கள் மேல் உள்ள பொறாமை, வஞ்சகம், குரோதம் காரணமாக அவர்கள் பற்றி இல்லாத பொல்லாத செய்திகளை அள்ளி வீசுகின்றோம். இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்கள் தங்கள் கௌரவத்தை பாதுகாக்கவும் மரியாதையை இழக்க விரும்பாமலும் அவர்கள் படும் பாட்டை அவரவர் அனுபவித்தால் தான் உண்மை புரியும் .

செய்யாத குற்றம் ஒன்றுக்காக ஒருவர் மீது அவதூறு பரப்புவதன் காரணமாக ஏற்படும் வேதனைகளை நினைத்துப் பாருங்கள். இந்த நிலை நமக்கு ஏற்பட்டால் எம்மால் அதை தாங்கிக்கொள்ள முடியுமா? ஊரார் பார்வையில் கெட்ட பெயர், இப் பொய் அவதூறு காரணமாக மக்கள் அவரை கெட்ட எண்ணத்துடன் பார்க்கும் நிலை யாருக்காவது ஏற்பட்டால் அதை எப்படி தாங்கிக்கொள்ள முடியும். அடுத்தவர் மீது வீன் சந்தேகம் கொண்டு அவதூறு பரப்புவபர்கள் சற்றும் சிந்திக்காமல் வாய்க்கு வந்தபடி பேசுவதையும் அதன் மூலம் அடுத்தவர்களின் மனதை புண்படுதுவதையும் அவரின் மானத்தையும் பறக்க விடுவதையும் பார்க்கிறோம். ஒருவரின் மானதில் கைவைப்பது புனித கஃபாவை உடைப்பதற்கு சமனாகும்.

இறுதியாக, எவர் எச் செய்தியை சொன்னாலும் அதை யார் சொன்னார்? எப்போது சொன்னார்! சொன்னாரா? இல்லையா? இவர் சொன்னது உண்மையா? பொய்யா? என்பதனை உறுதி பண்ணிவிட்டுதான் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டும். ஆகவே அவதூறு கூறுவுபர்களிடம் கேள்விப்பட்ட வற்றை உடனே பரப்பக் கூடாது. ஆகவே எவர் மீதும் கெட்ட என்னம் கொள்ளாமலும் அவதூறு பரப்பாமலும் வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பறுவோமாக!!

R.M. AFZAL RAZA.
KANUKETIYA.
NIKAWERATIYA
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

தற்காலத்தில் ஒரு மனிதருக்கு மத்தியில் பொறாமையும் குரோதமும் வஞ்சகமும் ஒருவரை ஒருவர் வெறுக்கவும் இதமான ஒற்றுமை உறவு இல்லாததற்கும், தவறான புரிதல் களுக்கும் பிரதான மாக இருப்பது தேவையற்ற சந்தேகங்களும், அவதூறு பரப்பலும் என்றால்…

தற்காலத்தில் ஒரு மனிதருக்கு மத்தியில் பொறாமையும் குரோதமும் வஞ்சகமும் ஒருவரை ஒருவர் வெறுக்கவும் இதமான ஒற்றுமை உறவு இல்லாததற்கும், தவறான புரிதல் களுக்கும் பிரதான மாக இருப்பது தேவையற்ற சந்தேகங்களும், அவதூறு பரப்பலும் என்றால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *