Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை - Youth Ceylon

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை
உலகின் முதல்தர செல்வந்தர்களை
வரிசைப்படுத்துகின்றனர்
சொத்து மதிப்புக்களை
பட்டியலிடுகின்றனர்
உலகின் எட்டுத்திக்கும்
வங்கிகளில் கணக்கு
வைத்திருக்கின்றார்கள்

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை
சொந்தப் பயணத்திற்கு
விமானம் வைத்திருக்கிறார்கள்
திருமணங்களை
சொகுசு கப்பல்களில்
நடாத்துகிறார்கள்
புதையல் போல
ஆடை அணிகலன்
வைத்திருக்கின்றார்கள்

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை
காலையுணவு ஒரு நாட்டிலும்
பகலுணவு இன்னொரு நாட்டிலும்
எடுத்துக் கொள்கிறார்கள்
சற்றே சளி பிடித்தாலும்
வீட்டில் மருத்துவர்களை
நிறைத்து விடுகிறார்கள்

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை
வசிப்பதற்கென்று சொர்க்கபுரியே
வடிவமைத்துக் கொள்கிறார்கள்
நொடிக்கு நொடி உல்லாசமாய்
அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை
வீதியோரங்களில்
வாழ்க்கை நடத்தும்
மனிதர்கள் பற்றி
குப்பைத் தொட்டியில்
உணவு தேடும்
மனிதர்கள் பற்றி
நோய்க்கு மருந்தின்றி
அநியாயமாக இழக்கப்படும்
உயிர்கள் பற்றி
மானம் மறைக்க
ஆடையில்லா ஜீவன்கள் பற்றி

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை
குடிக்க ஒரு மிடர்
தண்ணீர் கூட
இல்லாத இடங்கள் பற்றி
படிக்க பாடசாலைகள்
இல்லா நிலைபற்றி
தெருப்புழுதியில்
சுருண்டுபடுக்கும்
மனிதர்கள் பற்றி
முகாம்களில் வதைபடும்
மனிதர்கள் பற்றி
எலும்பும் தோலுமாய்
நடமாடும் மனிதர்கள் பற்றி
இலட்சியங்களை புதைத்து விட்டு
இன்னலுறும் மனிதர்கள் பற்றி

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை
உப்புக் கரிக்கும் துளிகளுடன்
தினம் வாழ்பவர்கள் பற்றி
உதவிக்கு ஆளின்றி
தவிக்கின்றவர்கள் பற்றி
சத்திரசிகிச்சைகளுக்காய்
பெரும் வரிசையில்
காத்திருப்பவர்கள் பற்றி

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை
என்ற சிந்தனை
என்னுள் எதிரொலித்துக்
கொண்டே இருக்கின்றது.

மக்கொனையூராள்

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை உலகின் முதல்தர செல்வந்தர்களை வரிசைப்படுத்துகின்றனர் சொத்து மதிப்புக்களை பட்டியலிடுகின்றனர் உலகின் எட்டுத்திக்கும் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றார்கள் அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை சொந்தப் பயணத்திற்கு விமானம் வைத்திருக்கிறார்கள் திருமணங்களை சொகுசு கப்பல்களில்…

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை உலகின் முதல்தர செல்வந்தர்களை வரிசைப்படுத்துகின்றனர் சொத்து மதிப்புக்களை பட்டியலிடுகின்றனர் உலகின் எட்டுத்திக்கும் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றார்கள் அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை சொந்தப் பயணத்திற்கு விமானம் வைத்திருக்கிறார்கள் திருமணங்களை சொகுசு கப்பல்களில்…