Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஆணிவேரான அப்பா... 

ஆணிவேரான அப்பா…

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

விழுதுகள் விட்ட ஓர்
ஆலமரமாய் நானும் மாற
ஆழக்குழி வெட்டி ஆணிவேராய் வளரும் வரை
எனை- அரவணைத்து
ஆயுளையே அர்பணித்தவர்
“அப்பா”

அடுக்கிடும் வினாக்கள்- நானாய்
அத்தனைக்கும் விடை தேடி
அழுதிடுவாள் மகவென்றஞ்சி
அழகாக பொய்யை புனைந்தததும்
“அப்பா “

அக்கரையை நான் கேட்டாலும் – அதை
இக்கரைக்கு கொண்டுவர
அயராது பாடுபடுவது
அக்கரையுள்ள
” அப்பா”

எத்தனை பாதணி இருந்தும் – அன்று
அளவில் பெருத்திட்ட
அப்பாவின் பாதணியில்
ஆளாதிப்பிரியம் ஏனோ??

ஆனால் இன்று
பாதணியை பிடித்த
பலருக்கு
அப்பாக்களை பிடிக்குதில்லை

மெழுகு காற்றில் அனைவதுண்டு
அனையா மெழுகுவர்த்தியொன்றும் உண்டு
அதுவும் “அப்பா ”
என்றால் மிகையல்ல

அனுபவங்களின் தொகுப்பும் அப்பா
ஆயுள் முழுக்க உழைப்பதும் அப்பா
அரவணைப்பில் ஆட்சி செய்பவரும் அப்பா

அடுக்கு மாளிகை விட
அப்பாவின் அரவணைப்பொன்றே போதும்
அன்றும் என்றும் -நான்
அரசியாய் வாழ

Asana Akbar
Anuradhapura
SEU Of Srilanka

விழுதுகள் விட்ட ஓர் ஆலமரமாய் நானும் மாற ஆழக்குழி வெட்டி ஆணிவேராய் வளரும் வரை எனை- அரவணைத்து ஆயுளையே அர்பணித்தவர் “அப்பா” அடுக்கிடும் வினாக்கள்- நானாய் அத்தனைக்கும் விடை தேடி அழுதிடுவாள் மகவென்றஞ்சி அழகாக…

விழுதுகள் விட்ட ஓர் ஆலமரமாய் நானும் மாற ஆழக்குழி வெட்டி ஆணிவேராய் வளரும் வரை எனை- அரவணைத்து ஆயுளையே அர்பணித்தவர் “அப்பா” அடுக்கிடும் வினாக்கள்- நானாய் அத்தனைக்கும் விடை தேடி அழுதிடுவாள் மகவென்றஞ்சி அழகாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *