Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஆன்மாவின் ஏக்கம்… 

ஆன்மாவின் ஏக்கம்…

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

சுவர்களுக்குள் பூட்டியிருந்த
இதயங்கள் – இலட்சியங்கள்
பலதுடன் உலகமதை
காண கஷ்டங்கள் பல
கடந்து காலடி வைக்கும்
கனாக்களை கட்டிக்கொண்டு
பல்கலையின் வாயிலில்

நடுக் காட்டில் விட்டது போல நடுநடுங்கும் இதயங்கள்
உறவுகளை பிரிந்த சேதிசொல்லும் முகங்கள்
தெரிந்தவரை தேடி அலைமோதும் பாவப்பட்ட கண்கள் –
முதல் நாளில் பயமதின் குறிகாட்டும் உடம்பெங்கும்

அழகாயும் ஆதரவாயும் வழிகாட்ட வேண்டிய மூத்த உறவுகள்
‘பகிடிவதை’ எனும் நாமம் கொண்டு பயம் காட்ட –
ஏலவே காயப்பட்ட அந்த உள்ளங்கள்
கசங்கிய காகிதமாய் – எனினும்
ஓவியம் வரைய முனைந்திடும் கிறுக்கல்களையும்
கசக்கத்தையும் கிழித்தெறிந்து விட்டு – கனாக்கள்
பல சுமந்த குற்றத்திற்காய்

பீடத்தினுள் நுழையுமிடத்து
நெஞ்சம் படபடக்க
விரிவுரை முடிந்து விரைகையில்
தலை நிமிராது தரைக்கற்களை எண்ணிக்கொண்டு
தடுமாறி போக சிரேஷ்ட உறவுகள் எம்
பெயர் சொல்லிட உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்ட-
கனாக்களிலும் சோகக் கதை சொல்லும் கண்ணீரோடு

உறவுகளும் உரிமைகளும்
பெருமையாலும் அதிகாரத்தாலும் வளராது – அழகுற்ற
சொற்களும் – பொன்னான
புன்சிரிப்பும் – உறவுகள்
உரிமையோடு உன்னதமாய்
உருவாக உரமிடும்

சிரேஷ்ட உறவுகளிடத்தில்
அன்பான வழிகாட்டலையும்
ஆதரவான சொற்களையும்
இயல்பான புன்னகையையும்
அளவான பகிடிவதையும்
மாத்திரம் எதிர்பார்க்கும் – அந்த
பாவப்பட்ட ஆன்மா- கருகிப்போன
கானாக்களுக்கு மருந்தாக…….

Shamla Sama Mubarak
First year
SEUSL

சுவர்களுக்குள் பூட்டியிருந்த இதயங்கள் – இலட்சியங்கள் பலதுடன் உலகமதை காண கஷ்டங்கள் பல கடந்து காலடி வைக்கும் கனாக்களை கட்டிக்கொண்டு பல்கலையின் வாயிலில் நடுக் காட்டில் விட்டது போல நடுநடுங்கும் இதயங்கள் உறவுகளை பிரிந்த…

சுவர்களுக்குள் பூட்டியிருந்த இதயங்கள் – இலட்சியங்கள் பலதுடன் உலகமதை காண கஷ்டங்கள் பல கடந்து காலடி வைக்கும் கனாக்களை கட்டிக்கொண்டு பல்கலையின் வாயிலில் நடுக் காட்டில் விட்டது போல நடுநடுங்கும் இதயங்கள் உறவுகளை பிரிந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *