Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஆப்கானில் தப்பி ஓடிய அஷ்ரப் கனியும் ராஜபக்ஷவுடன் உரையாடிய ஹமித் கர்சாயும் - Youth Ceylon

ஆப்கானில் தப்பி ஓடிய அஷ்ரப் கனியும் ராஜபக்ஷவுடன் உரையாடிய ஹமித் கர்சாயும்

  • 18

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஆப்கானிஸ்தானின் கடைசி 2 அதிபர்கள் – ஹமித் கர்சாய், அஷ்ரப் கனி

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பிறகு அதிபராக செயல்பட்ட ஹமித் கர்சாய் மற்றும் அஷ்ரப் கனி ஆகியோரது செயல்பாடு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

தலிபான்களின் பிடியில் இருந்து 2001-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் விடுபட்டபோது இடைக்கால அதிபராக பொறுப்பேற்றவர் ஹமித் கர்சாய்.

தலிபான்களின் பிற்போக்குத்தனங்களால் உருக்குலைந்து கிடந்த ஆப்கானிஸ்தானை வளர்ச்சியை நோக்கி கட்டியெழுப்பியதில் ஹமித் கர்சாயின் பங்கு முதன்மையானதாக பார்க்கப்படுகிறது.

2004-இல் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று நாட்டின் அதிகாரப்பூர்வ அதிபராக பொறுப்பேற்ற ஹமித் கர்சாய், பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவரது ஆட்சி காலத்தில் அரசின் வருமானம் உயர்ந்ததோடு, வளர்ச்சி அடைந்த நட்பு நாடுகளிடமிருந்து கணிசமான அளவில் நிதியுதவியும் ஆப்கானிஸ்தானுக்கு கிடைத்தது.

2009 பொதுத்தேர்தலிலும் மீண்டும் வெற்றிபெற்று அதிபரான ஹமித் கர்சாய் அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளோடு நட்புறவுடன் செயல்பட்டார். இவரை படுகொலை செய்ய பல்வேறு முறை தலிபான் முயற்சித்தது.

ஹமித் கர்சாய்க்கு பிறகு 2014-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக பொறுப்பேற்றார் அஷ்ரப் கனி. அடிப்படையில் இவர் ஒரு பேராசிரியர். எனினும், ஆப்கானிஸ்தான் அரசியல் நகர்வுகளிலும் ஒருசேர பங்கெடுத்தார்.

நிலையற்ற தன்மையில் இருந்த ஆப்கானிஸ்தான் அரசு நிர்வாகம், அஷ்ரப் கனியின் ஆட்சியில் ஓரளவிற்கு திடமாக இருந்தது. அதற்கு மற்றொரு முக்கிய காரணம், தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் பணியில் அமெரிக்க படையினருடன் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்தார்.

அஷ்ரப் கனியின் ஆட்சிக்கு மக்களிடையே அதிருப்தி நிலவியதாக ஆய்வுகள் கூறினாலும், 2019 பொதுத்தேர்தலிலும் அஷ்ரப் கனி வெற்றிபெற்றார். இறுதியாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக திரும்ப பெறப்பட்டபோது, அஷ்ரப் கனியின் பலம் குறையத் தொடங்கியது.

ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களை தங்கள் பிடியில் கொண்டு வந்த தாலிபான்கள் கடந்த கடந்த 15ஆம் திகதி தலைநகர் காபுலில் நுழைந்தனர். அந்நகர எல்லையில் தங்களின் வீரர்களை குவித்து வைத்திருந்த தாலிபான்கள், வன்முறையின்றி அதிகார பறிமாற்றத்திற்காக காத்திருந்தனர். இதையடுத்து உயிருக்கு பயந்த அதிபர் அஷ்ரப் கனி, அன்றைய தினம் விமானப் படை விமானத்தில் நாட்டை விட்டே தப்பிச் சென்றார்.

தஜிகிஸ்தான் சென்ற அஷ்ரப் கனி

நாட்டைவிட்டு தப்பிச்சென்றதாகக் கூறப்படும்  ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யுமாறு இண்டர்போலுக்கு தஜிகிஸ்தானில் (Tajikistan) உள்ள ஆப்கன் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தஜிகிஸ்தானுக்கு சென்ற அவருடைய விமானத்தை தங்கள் நாட்டில் தரையிறங்க அந்நாடு மறுத்தது. இந்நிலையில் அவர் தற்போது ஓமனில் தஞ்சமடைந்திருக்கிறார். அவருடன் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் உள்ளிட்ட முன்னாள் அதிகாரிகள் உடன் இருக்கின்றனர். அங்கிருந்து அஷ்ரப் கனி அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லக் கூடும் என கூறப்படுகிறது.

கார்களில் பணம் நிரப்பிச் சென்ற அஷ்ரப் கனி

இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து அஷ்ரப் கானி விமானத்தில் புறப்பட்ட போது 4 கார்களும், ஒரு ஹெலிகாப்டர் முழுக்க பணத்தை நிரப்பிக் கொண்டு சென்றதாகவும் ரஷ்ய தூதரக செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

அஷ்ரப் கானி ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி ஓடிய விதம் குறித்து பேசிய ரஷ்ய தூதரக செய்தித்தொடர்பாளரான நிகிடா இஷென்கோ, “நான்கு கார்களில் பணம் நிறைந்திருந்தன, ஹெலிகொப்டரில் பணத்தை நிரப்ப முயன்றனர், ஆனால் எல்லா பணத்தையும் அதில் நிரப்ப முடியவில்லை. கொஞ்சம் பணம் ஓடுபாதையில் விடப்பட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அஷ்ரப் கனி அரச பணம் 169 மில்லியன் டொலரை திருடிவிட்டார்

அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச்செல்லும்போது 169 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை ரூபாவில் 3367 கோடி, இந்திய ரூபாவில் 1255 கோடி,) அரச பணத்தை திருடி சென்றுவிட்டதாக தஜிகிஸ்தானிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதர் முகமது ஜாகீர் அக்பர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அஷ்ரப் கனியை கைது செய்யுமாறு இண்டர்போலுக்கு கோரிக்கை

இந்த சூழலில் ஆப்கன் மக்களின் வரிப்பணத்துடன் தப்பியோடிய அஷ்ரப் கனியை கைது செய்ய வேண்டும் என்று தஜிகிஸ்தானில் உள்ள ஆப்கன் தூதரகம், சர்வதேச பொலிஸாரான இண்டர்போலுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் அவருக்கு உடந்தையாக ஹம்தல்லா மொஹிப், பசல் மக்மூத் பஸ்லி ஆகியோரை பொதுமக்களின் பணத்தை திருடிச் சென்ற குற்றத்திற்காக கைது செய்ய வேண்டும் என ஆப்கன் தூதரகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஆப்கனில் இருந்து புறப்பட்ட அஷ்ரப் கானி, சமூக வளைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே நாட்டைவிட்டு வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார். இனி நாட்டின் மரியாதைக்குக்கும், பாதுகாப்புக்கும் தலிபான்களே பொறுப்பாவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, அஷ்ரப் கனி உள்ளிட்டோர் நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, போர் முடிவுக்கு வந்ததாகவும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும், தாலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்களில் பணம் கொண்டுவரவில்லை நான் வெளியேற்றப்பட்டேன் – அஷ்ரப் கனி

எனது காலணிகளை கூட அணிய முடியாத சூழ்நிலையில் நான் வெளியேற்றப்பட்டேன் என்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் நுழைந்ததும் அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கனி தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச்சென்ற ஜனாதிபதி அஷ்ரப் கனி மீது பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஐக்கிய அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ள அஷ்ரப் கனி தனது சமூகவலைதள பக்கம் மூலம் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அஷ்ரப் கனி கூறியதாவது, எனது காலணிகளை கூட அணிய முடியாத சூழ்நிலையில் நான் வெளியேற்றப்பட்டேன். உள்ளூர் மொழி பேசத்தெரியாவதவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து என்னை தேடினர். நான் வெளியேற்றப்பட்டேன்.

தான் வெளியேறும்போது கார் முழுக்க பணம் கொண்டு வந்ததாக கூறப்படுவது முழுக்க முழுக்க தவறான தகவல் என்றும் ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கானி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதிபர் கானியை அவர்கள் வெளியேற சொன்னதை அடுத்து அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் ஆப்கானிஸ்தானில் ஒரு பதற்றமான சூழலே நிலவி வருகிறது

இந்த நிகழ்வுகள் மிகவும் வேகமாக நடைபெற்றுவிட்டது. தலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்து ஆலோசிக்க நான் எண்ணினேன்.

அரசின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் தலிபான்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். நான் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தாலிபான்களை சந்தித்து உரையாடிய ஹமீத் கர்சாய்

Former Afghanistan president Karzai talks with Taliban about power transfer | Afghanistan | The Guardian

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் உடன் தாலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாலிபான் தளபதியும் ஹக்கானி தீவிரவாத குழுவின் மூத்த தலைவருமான அனஸ் ஹக்கானி, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தாலிபான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசு அமைப்பது தொடர்பாக இந்த சந்திப்பில் பேசப்படலாம் என்று கூறப்படுகிறது. முந்தைய அரசின் முக்கிய அமைதித் தூதுவரான அப்துல்லா அப்துல்லாவும் இந்த கூட்டத்தில் ஹமீத் கர்சாய் உடன் இருந்தார் என்றும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ஹமித் கர்சாயுடன் உரையாடிய பிரதமர் ராஜபக்ஷ

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் நிலமைகள் குறித்து விசாரிக்க ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயிடம் பேசியதாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹமீத் கர்சாய் ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக 2001 முதல் 2014 வரை பணியாற்றினார். அவர் தற்போது தலிபான்களுடன் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

“ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியிடம் தனது நாட்டில் இடம்பெற்று வரும் நிலமைகள் குறித்து விசாரித்து, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஸ்ரீலங்காவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ட்வீட் செய்துள்ளார். Ibnu Asad

ஆப்கானிஸ்தானின் கடைசி 2 அதிபர்கள் – ஹமித் கர்சாய், அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பிறகு அதிபராக செயல்பட்ட ஹமித் கர்சாய் மற்றும் அஷ்ரப் கனி ஆகியோரது செயல்பாடு குறித்து விவரிக்கிறது இந்த…

ஆப்கானிஸ்தானின் கடைசி 2 அதிபர்கள் – ஹமித் கர்சாய், அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பிறகு அதிபராக செயல்பட்ட ஹமித் கர்சாய் மற்றும் அஷ்ரப் கனி ஆகியோரது செயல்பாடு குறித்து விவரிக்கிறது இந்த…