Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இக்லாஸ் என்ற உளத்தூய்மை... 

இக்லாஸ் என்ற உளத்தூய்மை…

  • 46

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மனித சமுதாயத்தை படைத்த இறைவன் மனிதனின் எண்ணங்களை பலவாறாக அமைத்து வைத்துள்ளான். மனிதர்கள் யாராக இருப்பினும் அவர்கள் எந்தவொரு காரியத்தைப் பற்றிப் பேசினாலும் யாரையும் ஆதரிப்பதாக இருந்தாலும் எச்செயலை செய்தாலும் அதற்கு பின்புலமாக ஏதாவது ஒரு எண்ணம் அல்லது நோக்கம் (அதாவது அல்லாஹ்விற்காக, முகஸ்துதிக்காக, (பிறருக்காக) சுயநலனுக்காக, பொதுநலனுக்காக, பேருக்காக, புகழுக்காக, பிறர் பாராட்டுதலுக்காக) இருக்கும். அது இல்லாமல் எவரும் எச்செயலையும் எப்பேச்சையும் பேசுவதுமில்லை, செய்வதுமில்லை.

இது குறித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்: செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும். (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப்(ரலி) நூல்: புகாரி 1)

ஆனால் மனிதனின் எண்ணங்களை பலவாறாக அமைத்திருந்தாலும் மனிதன் இறைவன் எந்த நோக்கத்திற்காக படைத்துள்ளானோ அதனையறிந்து அதற்கேற்றார் போல் மனிதர்கள் வாழ வேண்டும். வல்ல ரஹ்மான் மனித இனத்தை என்ன நோக்கத்திற்காக படைத்துள்ளான் எனில் வமாகலக்த்துல் இன்ஸான இல்லா லியஅபுதூன்.

அதனை உலகோருக்கு உணர்த்திடவே இறைவன் இஸ்லாமிய மார்க்கத்ததை வழங்கினான். இது தான் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் ஏனைய மத, சமயங்களுக்குண்டான மிகப்பெரிய வித்தியாசமாகும். ஏனெனில்; அம்மார்க்கமானது மனித கர மாசுகளுக்கு அப்பாற்பட்டது அல்லாஹ் கூறியுள்ளான். கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது (அல்குர்ஆன் 39:3)

மேற்கூறிய வசனத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை கோட்பாடுகள், சட்ட திட்டங்கள் யாவும் மனித கரங்களால் மாசு படுத்தப்படாமல் தூய்மையானதாக எவ்வாறெனில் பால் போன்று தூய்மையானதாக ஆக்கியருளியுள்ளான். அத்தோடு களங்கமில்லாத அல்லாஹ்வின் மார்க்த்தை எடுத்துச் சொல்வதற்காக தேந்தெடுத்து அனுபப்பட்ட தூதர்மார்களுக்கும் அல்லாஹ் விடுத்த அறிவுரை என்னவெனில் வணக்கத்தை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை நான் வணங்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டுளேன். (அல்குர்ஆன் 39:14)

மற்றொரு இடத்தில் கூறும் போது (ஷிர்க்-ரியாயின்றி) உளத்தூய்மையுடன் எனது வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனையே வணங்குவேன் எனவும் கூறுவீராக! (அல்குர்ஆன் 39:14)

இறைவன் நபிமார்களுக்கு எதனை கட்டளையாக பிறப்பித்தானோ அதனையே தன் அடியார்கள் மீதும் கடமையாக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான். வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும் ஸகாத்தை கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம் (அல்குர்ஆன் 98:5)

இஸ்லாத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதராலும் சொல்லப்பட்டுள்ள எந்தவொரு வணக்கமானாலும்; அவற்றையெல்லாம் ஷிர்க் (இணையாக்காமலும்) ரியா (முகஸ்துதி) யின்றி முழுக்க முழுக்க இறைவனின் திருப்தியை நாடியே மட்டும் செய்ய வேண்டும் அப்போது தான் அந்த காரியங்கள் அல்லாஹ்விடம் ஏற்கப்படும். ஏனெனில் முகம்மது (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து கேட்டார். ஒரு மனிதர் அல்லாஹ்வின் பாதையில் நன்மையை நாடியும் தன்னைப் பற்றி நினைவு கூறப்படுவதையும் நாடியவராக போரில் கலந்து கொண்டால் அவருடைய நிலை என்ன? என்று வினவ அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு எதுவும் இல்லை என மூன்று முறை கூறிவிட்டு பின்பு சொன்னார்கள் நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய திருப்பொருத்தத்தை நாடி உளத்தூய்மையோடு செய்யப்படும் அமலைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்ளவதில்லை (அறிவிப்பவர்: அபு உமாமா அல் பாஹிலி (ரலி) நூல்: நஸாயீ 3089)

மற்றொரு நபிமொழியில் வந்துள்ளதாவது நிச்சயமாக அல்லாஹ் உங்களின் (புறத்) தோற்றங்களையோ உங்களின் பொருளாதாரத்தையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்4651)

மேற்கூறப்பட்டுள்ள ஹதீஸ்களிலிருந்து இஸ்லாத்தில் அல்லாஹ் கூறியுள்ள எந்த காரியத்தையும் அவனுடைய தூதர் காட்டித் தந்துள்ள வழிகாட்டுதலை அச்சரம் பிசகாமல் செயல்படுத்தப்படுவதையும் அவருடைய எண்ணங்களையும் முக்கியமாக கண்காணிக்கிறான். அவையிரண்டிலும் யாரையும் எதனையும் கூட்டாக்காமலும் இணையாக்காமலும் முழுக்க முழுக்க இறைதிருப்தியை மட்டுமே அடிப்படையாக கொண்டு செய்யப்படும் அமலைத் தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

உதாரணமாக ஒருவர் பள்ளிவாசலின் வளர்ச்சிப் பணிக்காக தர்மமோ, அன்பளிப்போ நிதியோ கொடுத்தால் அதனை அல்லாஹ் சொன்னான் என்பதற்காகவும் அதற்குரிய நன்மையை அவனிடம் மாத்திரமே எதிர்பார்த்தால் அதற்கு கூலி சொர்க்கம் தான். ஏனெனில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தர்மம் செய்தால் அவருக்காக அதனை அங்கீகரித்துக் கொண்டு அவரை சுவனத்தில் நுழைவிக்கின்றான். (அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: அஹ்மத் 22235)

இதை விட்டு விட்டு ஒருவர் வேறு காரணங்களுக்காக வேறு முகத்துக்காகவோ, வேறு லேபிள்களுக்காகவோ, ஒரு தனிநபர் பெயருக்காகவோ என்று செய்தால் அது அல்லாஹ்வின் அருளை பெற்றுத் தராது. ஏனெனில் நான் நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான் என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) நூல்: புகாரி 6499)

மற்றொரு அறிவிப்பில் வந்துள்ளதாவது அல்லாஹ் மறுமை நாளில் மூன்று வகை மனிதர்களிடம் பேசவேமாட்டான் 1. எதை (தர்மமாக) கொடுத்தாலும் அதை சொல்லிக்காட்டுவான்.2. பொய் சத்தியம் செய்து தன் பொருளை விற்றவன் 3. பெருமையோடு தன் ஆடையை தரையில் படும் வரை அணிபவன்.

மற்றொரு அறிவிப்பில் வந்துள்ளதாவது தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 2589)

வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான். நான் இணையானவனை விட்டு இணைகற்பித்தலை விட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால் அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டு விடுவேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 5708)

இஸ்லாத்தை ஏற்ற பிறகு இணைவைக்கும் இணைவைப்பாளனிடமிருந்து எந்த நற்காரியத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி) நூல்: இப்னுமாஜா 2527)

உங்கள் விசயத்தில் நான் மிக அஞ்சுவது சிறிய இணைவைப்பைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் சிறிய இணைவைப்பு என்றால் என்ன? என கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதுதான் முகஸ்துதி மறுமைநாளில் மக்களுடைய செயல்பாடுகளுக்குக் கூலி கொடுக்கப்படும் போது இந்த உலகத்தில் யாருக்காக (அமைப்புக்காக) நீங்கள் நற்காரியங்கள் செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள் உங்களுக்கு கூலி அவர்களிடம் உள்ளதா என்று பாருங்கள் என்று சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறுவான். (அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி) நூல்: அஹ்மத் 22523)

இறுதியாக கலப்பில்லாத மார்க்கத்தை அல்லாஹ் தன் தூதருக்கு எவ்வாறு ஏவினானோ அவர் எவ்வாறு வாழ்ந்து காண்பித்தார்களோ அது போன்று தான் நாமும் நடக்க வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது அதனடிப்படையயில் நமது சொல் செயல்களிலும் ரியா ஷிர்க் இன்றி செய்து ஈமானை பரிபூரணப்படுத்த வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: அல்லாஹ் (விரும்பியதை)விற்காக விரும்புகிறாரோ, அல்லாஹ் (வெறுத்ததை)விற்காக வெறுக்கிறாரோ, அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ, அல்லாஹ்விற்காக தடுக்கிறாரோ (அவர் தன்) ஈமானை பரிபூரணப்படுத்திவிட்டார். (அறிவிப்பவர்: அபுஉமாமா(ரலி) நூல்: அபூதாவூத் 4061)

மேலே குறிப்பிடப்படவற்றை சிந்தித்து செயல்படுவோமாக.

மனித சமுதாயத்தை படைத்த இறைவன் மனிதனின் எண்ணங்களை பலவாறாக அமைத்து வைத்துள்ளான். மனிதர்கள் யாராக இருப்பினும் அவர்கள் எந்தவொரு காரியத்தைப் பற்றிப் பேசினாலும் யாரையும் ஆதரிப்பதாக இருந்தாலும் எச்செயலை செய்தாலும் அதற்கு பின்புலமாக ஏதாவது…

மனித சமுதாயத்தை படைத்த இறைவன் மனிதனின் எண்ணங்களை பலவாறாக அமைத்து வைத்துள்ளான். மனிதர்கள் யாராக இருப்பினும் அவர்கள் எந்தவொரு காரியத்தைப் பற்றிப் பேசினாலும் யாரையும் ஆதரிப்பதாக இருந்தாலும் எச்செயலை செய்தாலும் அதற்கு பின்புலமாக ஏதாவது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *