Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இணையவழியூடான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பல நிராகரிப்பு 

இணையவழியூடான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பல நிராகரிப்பு

  • 5

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

தொழில்நுட்ப அறிவு இல்லாததாலும், சில ஆவணங்கள் முறைசாரா முறையில் புதுப்பிக்கப்பட்டதாலும், அவர்களின் கடவுச்சீட்டு அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தலைமையில் பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற நேற்று முன்தினம் (18) ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் இந்த விடயங்கள் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் 75 வீதமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இணையவழி கடவுச்சீட்டு விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து 51 பிரதேச செயலக அலுவலகங்களில் கைரேகை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் 03 நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியுமென்றும், அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,

“பொதுச் சேவைகளின் கீழ் 192,041 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 90,817 பேரது கைரேகை பிரதேச செயலகங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களுள் 55,600 பேரின் கடவுச்சீட்டுகள் அச்சிடப்பட்டன. மேலும் 03 நாள் விரைவு சேவையின் கீழ் 22,471 பேர் இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் 18,770 பேரின் கைரேகைகள் பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 17,904 பேரின் பேரின் கடவுச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.

இணையவழியில் விண்ணப்பிக்கும் போது சிலர் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை புகைப்படங்களை தெளிவற்ற முறையில் பயன்படுத்தியிருப்பதாலும், சிலர் வேறு நபர்களின் கையடக்க தொலைபேசி எண்களில் விண்ணப்பித்திருப்பதாலும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளை அச்சிட முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

The post இணையவழியூடான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பல நிராகரிப்பு appeared first on Thinakaran.

“}]]Read More 

​ 

[[{“value”:” இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். தொழில்நுட்ப அறிவு இல்லாததாலும், சில ஆவணங்கள் முறைசாரா முறையில் புதுப்பிக்கப்பட்டதாலும், அவர்களின்…

[[{“value”:” இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். தொழில்நுட்ப அறிவு இல்லாததாலும், சில ஆவணங்கள் முறைசாரா முறையில் புதுப்பிக்கப்பட்டதாலும், அவர்களின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *