Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இது அவள் கதை... 

இது அவள் கதை…

  • 18

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வயிறு வரண்டு
பாலைவனத்தை விஞ்சிவிட்டது.
உணவுக்குழி எச்சில் ஊறி
ஒரு வாரமாகிறது

முப்பொழுதும் எலக்கஞ்சி
எல எலயா பக்குவம்பாத்து
பறிச்சு எடுப்பா
பச்சத்தண்ணி வேகவைக்க

பாத்திரத்தை சுமக்குது
கரிபிடிச்ச மூனுகல்லு
அத சுத்திவர
பட்டினியா வயிறு நாலு

இது பட்டினிப் பிடிவாதம்
எள்ளுத்தீனி எதுவாச்சும்
அரைச்சு வாயி வயிறு
கேக்குர சாபமாச்சு

பாவம் அவ
சிங்காரமா நெருப்பு மூட்டி
குழல் கொண்டு ஊதுறா
சீக்கிரம் வேகட்டுண்டு…

உணவும் வேகல…
உப்புக்கின்னு
சுவையும் பாக்கல…

சட்டெண்டு முழிச்சு
கந்தல் முந்தாணை
முடிச்சு நோக்கிப்போகுது
அவ பார்வ…

அது ஏமாற்று வேடிக்கன்னு
தெரிஞ்சும் செய்யுறா…

நெருப்பு பாம்புபோல சீறிடுச்சு
விறகு தன்னப்போட்டு எரிச்சிடுச்சு
பாத்திரத் திரவ குமிழி
அவள எட்டிப்பாத்து சிரிச்சிடுச்சு

அவ மூச்சு
நெஞ்சோட பதுங்கிப்போச்சு
உள்ளுக்குள்ள சில்லூறா
இரைச்சலோட அழுவுறா
தீர்த்துப் போட்ட ஆயிரத்த
தினத்தினமா நெனச்சு

ஊரடங்கு முடுக்கியாச்சு
அரசு ஆணை போட்டிடுச்சு
சன்மானம் கொடுத்ததும்
கொழுந்தோட வாடிப்போச்சு

மூத்ததுட வாப்பாவ
மூச்சுடாம திட்டிடுவா
குற்றம் சாட்டிடுவா

முந்தானை முடிச்சுக்காச
பீடியும் வெத்துலயுமா
குடிச்சுட்டு உழறிடுவான்
உவர்ப்புச் சுவையோட

சம்பாதிச்ச பத்துக்காச
தீர்த்துட்டு திரும்பிவந்தா
குச்சோரம் கிடக்கும்
சொம்பு ரெண்டு எத்துப்படும்
எங்கோ போய்க்கிடக்கும்
தாளம் மலையேறும்…

தினந்தினமா இப்படியே
தீட்டுற தூரிகையாய்
விடிகிறது இவ பாடு
யாரும் விரும்பாத ஏற்பாடு

முன் ஊட்டு
வாத்தியார் வாசலிடம்
மானத்தை சுருட்டிவச்சு
வெட்கத்தை மூட்டகட்டி
உணர்வுகளை தீர்த்துக்கட்டி

வாய் வளைச்சு
காச்சுண்டு அரிசிய
கடனாக்கேப்பா
அடம்பிடிக்கும்
பசி போக்க
ருசி போக்க இல்ல
நாலு உயிர் காக்க

வாத்திவீட்டு கூரையால
கோழிக்குழம்பு வாசம்
இவ குடிசை ஓட்டவழியா
புகையா நுழையிரப்போ

எலக்கஞ்சி தயாராகும்
எறக்கி கீழ வச்சா
ஆரவாரம் ஏதுமில்ல
துணை உணவு ஒன்னுமில்ல.

பக்குவமா பகிர்ந்து
அவ பருக்கிவிடுவா
பெத்ததுகளுக்கு
கோழிக்குளம்பு
வாடையோட

பகற்பொழுது கழிச்சாச்சு
என்னு சொல்லயில்ல
அதுக்குள்ள
ராவுக்கு என்ன செய்ய?
அவ தல முழுக்க கேள்வியோட
அவ பொழுது விடிகிறது

குறிப்பு:
எத்தனையோ அப்பாவி மக்கள் இந்த கொரோனா அவசரகால ஊரடங்கு சட்டத்தினால் உணவுக்கு கூட நாதியில்லாமல் வாடுகிறார்கள் என்பதை நாங்கள் கண்கூடே காண்கிறோம். அவர்களுக்கு இந்நேரத்தில் உதவ வேண்டியது மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரினதும் பொறுப்பு என்பதை மறந்துவிடமுடியாது.

சல்ஜி லபீர்
பேசும் பேனாமுனை

Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media


வயிறு வரண்டு பாலைவனத்தை விஞ்சிவிட்டது. உணவுக்குழி எச்சில் ஊறி ஒரு வாரமாகிறது முப்பொழுதும் எலக்கஞ்சி எல எலயா பக்குவம்பாத்து பறிச்சு எடுப்பா பச்சத்தண்ணி வேகவைக்க பாத்திரத்தை சுமக்குது கரிபிடிச்ச மூனுகல்லு அத சுத்திவர பட்டினியா…

வயிறு வரண்டு பாலைவனத்தை விஞ்சிவிட்டது. உணவுக்குழி எச்சில் ஊறி ஒரு வாரமாகிறது முப்பொழுதும் எலக்கஞ்சி எல எலயா பக்குவம்பாத்து பறிச்சு எடுப்பா பச்சத்தண்ணி வேகவைக்க பாத்திரத்தை சுமக்குது கரிபிடிச்ச மூனுகல்லு அத சுத்திவர பட்டினியா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *