இது புதினமான புதுவகை யுத்தம்!

  • 8

நான் ஒன்றும்
பெரிதாய் ஒன்றும்
படிக்கவில்லை படித்தவைகள்
யாவும் எனக்குப்
பிடித்தவையல்ல!

நான் பிடித்துப்
படித்தவைகள் யாவும்
இவ்வுலகில் நிலைத்திடப்
போவதில்லை ஏனோ!

வயது போனாலும்
வரண்டு போய்
உள்ளது இருண்டு
போன வாழ்க்கை
இன்று!

நடை பிணமாய்
வாழ்ந்து நாதியற்று
கிடக்கும் பூமியில்
நறுமணங்கள் பூசி
நடப்பதில் என்ன
பயன் நமக்கு!

எங்கு போனாலும்
அங்கு வலம்
வருகின்றது ஏழ்மையான
குரோதங்கள், வெறிபிடித்து
வாழும் வாழ்க்கையில்
மதம் பிடித்து
ஆடும் மானிடர்
நடுவில் நான்
என்னவோ!

என்னையும் மிகவிரைவில்
இந்த நாகரிகம்
கொன்று விடக்கூடும்
அன்றாவது நான்
நடைபிணமாய் நடிக்காது
இருக்க வேண்டும்!

புதுமைகள் படைக்க
இளமை(முதுமை) தேவையில்லை
இந்த புதினமான
உலகில் புத்திசாலியாய்
வாழ்ந்தாலே போதும்
என்பதை யார்
அறிவார்!

பயந்து வாழ்ந்து
கொண்டிருந்தால் அடியோடு
அழிந்து கொண்டுதான்
கிடக்க வேண்டும்
ஆசை எண்ணங்கள்!

அகிம்சையாய் கேட்டுப்
பாருங்கள் அது
அட்டகாசம் என்பார்,
அடித்து கேட்டுப்
பாருங்கள் இவன்
அடியோடு அழிந்து
போகட்டும் என்பார்!

வித்தியாசமாய் விந்தையான
உலகில் யோசிக்க
தெரிந்த மானிடர்களுக்கு
சுத்தமாய் சுவாசிக்க
கூட தெரியாது
இந்த ஈனப்
பிறவியில்!

பொத்துவில் அஜ்மல்கான்
வியூகம் வெளியீட்டு மையம்

நான் ஒன்றும் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை படித்தவைகள் யாவும் எனக்குப் பிடித்தவையல்ல! நான் பிடித்துப் படித்தவைகள் யாவும் இவ்வுலகில் நிலைத்திடப் போவதில்லை ஏனோ! வயது போனாலும் வரண்டு போய் உள்ளது இருண்டு போன வாழ்க்கை…

நான் ஒன்றும் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை படித்தவைகள் யாவும் எனக்குப் பிடித்தவையல்ல! நான் பிடித்துப் படித்தவைகள் யாவும் இவ்வுலகில் நிலைத்திடப் போவதில்லை ஏனோ! வயது போனாலும் வரண்டு போய் உள்ளது இருண்டு போன வாழ்க்கை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *