Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இந்து சமூத்திரத்தின் கண்ணீர் துளி இலங்கை - மங்கள சமர வீர - Youth Ceylon

இந்து சமூத்திரத்தின் கண்ணீர் துளி இலங்கை – மங்கள சமர வீர

  • 12

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரமடையும்போது ஆசியாவில் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாக காணப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலையை நினைவுகூறும் முகமாக இன்று (25.07.2021) இடம்பெற்ற ஊடகவியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், இலங்கை வரலாற்றின் திருப்புமுனையொன்றாக கறுப்பு ஜூலையை இனங்காண முடியும் என்று தெரிவித்தார்.

அன்று ஆசியாவில் முன்னணியில் திகழ்ந்து இந்து சமுத்திரத்தின் முத்து என பெயர் பெற்ற இலங்கை இன்று இந்து சமுத்திரத்தின் கண்ணீர் துளியாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.

அன்று எமக்கு பின்னால் இருந்த நாடுகள் இன்று இலத்திரணியல் பொருளாதாரத்தில் காலடி வைத்து முன்னேறிச் சென்று விட்டது. பாராக்கிரம யுகம் முதல் ரஷ்யா, எகிப்து போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் இலங்கை கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டது. இவ்வாறு முன்னணியில் இருந்த நாடு இன்று எமக்குப் பின்னர் சுதந்திரமடைந்த நாடுகளிடம் கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்தார்.

இலங்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27.07.2021) ஒரு பில்லியன் டொலர் கடன் கொடுக்க வேண்டியுள்ளது. அது 2011 ஆம் ஆண்டு பெற்ற கடனாகும். மேலும் டிசம்பர் ஆகும்போது 1.3 பில்லியன் கடன் வழங்க வேண்டியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு எமது வருமானம் 600 பில்லியன் டொலரினால் குறைவடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் எதிர்பார்க்காத அளவு அதிகமாக கடந்த ஆண்டு பணம் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரமடையும்போது ஆசியாவில் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாக காணப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலையை நினைவுகூறும் முகமாக இன்று (25.07.2021)…

இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரமடையும்போது ஆசியாவில் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாக காணப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலையை நினைவுகூறும் முகமாக இன்று (25.07.2021)…