Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இனிமை 

இனிமை

  • 12

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நீண்ட நாள் வரண்ட பூமிக்கு
எதிர்பாராமல் வரும் மழை இனிமை

இரவுத் தொழிலாளி நிலவுக்கு
அமாவாசையின் மடியில் உறக்கம் இனிமை

வெயில் மழையில் நனைந்த வானுக்கு
மருந்தாக வரும் வானவில் இனிமை

பட்டினியில் பதறிய மண்ணுக்கு
மரணம் தரும் உணவு இனிமை

கண்பார்வையற்ற குருடிக்கு
கற்பனை தரும் உலகம் இனிமை

மரித்துப் போன உறவினர்
கனவுலகில் நடமாடும் பொழுது இனிமை

தூண்டிலில் சிக்கிய மீனுக்கு
அதிஷ்டத்தில் தப்பிய நிகழ்வு இனிமை

நீண்ட நாள் பின்னர் ரெயில் பயணம்
ஜன்னலோரத்தில் கிடைக்கும் இருக்கை இனிமை

அளவு மீறிய தனவானுக்கு
சாமத்தில் இருநிமிட நித்திரை இனிமை

உணவின்றி தவிக்கும் ஏழைக்கு
எங்கிருந்தாலும் கிடைக்கும் சாதம் இனிமை

வேதனையில் வாழும் மனிதனுக்கு
எதிர்பாராமல் கிடைக்கும் சந்தோஷம் இனிமை

இனிமை! இனிமை !
எல்லாமே இனிமை!
துன்பத்தில் கைகொடுக்கும்
சிறு இன்பமும் இனிமை!

இன்பத்திலே தேடாதே இனிமை
அது முழுமை இல்லாத இனிமை
உன் வேதனையுள் நீ காணும் இனிமை
உன் வாழ்நாளில் மறவாத இனிமை

Rustha  Salam

நீண்ட நாள் வரண்ட பூமிக்கு எதிர்பாராமல் வரும் மழை இனிமை இரவுத் தொழிலாளி நிலவுக்கு அமாவாசையின் மடியில் உறக்கம் இனிமை வெயில் மழையில் நனைந்த வானுக்கு மருந்தாக வரும் வானவில் இனிமை பட்டினியில் பதறிய…

நீண்ட நாள் வரண்ட பூமிக்கு எதிர்பாராமல் வரும் மழை இனிமை இரவுத் தொழிலாளி நிலவுக்கு அமாவாசையின் மடியில் உறக்கம் இனிமை வெயில் மழையில் நனைந்த வானுக்கு மருந்தாக வரும் வானவில் இனிமை பட்டினியில் பதறிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *