Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இன்றும் நாளையும் தபால் நிலையம், பொருளாதார மத்திய நிலையம் திறப்பு - Youth Ceylon

இன்றும் நாளையும் தபால் நிலையம், பொருளாதார மத்திய நிலையம் திறப்பு

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தபால் நிலையம்

நாடு முழுவதுமுள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் இன்றும் நாளையும் (01,02/09/2021) திறக்கப்படவுள்ளன.

ஒகஸ்ட் மாதத்திற்காக வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுப்பதற்கு வசதியாகவே இன்றும் நாளையும் தபால் நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அஞ்சல் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தலால் நாடு முழுவதுமுள்ள தபால் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்நிலையில் பொதுமக்களுக்கான நிவாரண உதவி நிதி, வயது முதிர்ந்தோருக்கான கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்காகவே இந்த இரண்டு தினங்களிலும் நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. கொடுப்பனவுகளை தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அஞ்சல் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள வரும் நபர்கள் முழுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தபால் நிலையங்களுக்கு வருகை தருமாறும் அஞ்சல் தலைமையகம் சம்பந்தப்பட்ட மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

பொருளாதார மத்திய நிலையம்

நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று (01) மற்றும் நாளை (02) திறக்கப்படுமென விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மொத்த விற்பனைக்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடளாவிய ரீதியிலான கொவிட்-19 தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் தங்களது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கும், மொத்த விற்பனையாளர்கள் நடமாடும் விற்பனையின் பொருட்டு விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தபால் நிலையம் நாடு முழுவதுமுள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் இன்றும் நாளையும் (01,02/09/2021) திறக்கப்படவுள்ளன. ஒகஸ்ட் மாதத்திற்காக வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுப்பதற்கு வசதியாகவே இன்றும்…

தபால் நிலையம் நாடு முழுவதுமுள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் இன்றும் நாளையும் (01,02/09/2021) திறக்கப்படவுள்ளன. ஒகஸ்ட் மாதத்திற்காக வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுப்பதற்கு வசதியாகவே இன்றும்…