Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இன்று முதல் மாகாணப் பயணக்கட்டுப்பாட்டில் தளர்வு - Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store

இன்று முதல் மாகாணப் பயணக்கட்டுப்பாட்டில் தளர்வு

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

லோரன்ஸ் செல்வநாயகம்

அரச, தனியார் பேருந்துகளுடன் புகையிரத சேவையும் இடம்பெறும் – திலும் அமுனுகம 

நாட்டில் பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளை கருத்திற்கொண்டு முறையாக இன்று (14.07.2021) முதல் மாகாணங்களுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து சேவைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ரயில் சேவைகளும் பஸ் போக்குவரத்து சேவைகளும் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களிலும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பஸ் மற்றும் ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. அத்தியாவசிய சேவைகளை கவனத்திற்கொண்டு அத்தகைய மட்டுப்படுத்தப்பட்ட ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து சேவைகள் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் நடத்தப்படவுள்ளன.

காலையில் கடமைக்கு செல்வோருக்கு சில ரயில் சேவைகள் அதேபோன்று மாலையில் அவர்கள் வீடு திரும்புவதற்காக சில ரயில் சேவைகள் என ரயில் சேவைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று மாகாணங்களுக்கு இடையில் அரசாங்க ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிக்கும் தனியார்துறை ஊழியர்கள் ஆகியோரை கவனத்திற்கொண்டு கொரோனா வைரஸ் தொடர்பில் நடைமுறையிலுள்ள வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி அந்த சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பஸ் மற்றும் ரயில்களில் பயணிப்போர் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருப்பது முக்கியமாகும். உதாரணமாக துறைமுகம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் போன்ற அத்தியாவசிய கடமைகளுக்காக வருவோர் அன்றைய தினத்தில் கடமைக்கு வருவதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தை கைவசம் வைத்திருப்பதும் முக்கியமாகும். அவ்வாறானவர்கள் பயணிப்பதற்காகவே இன்று முதல் சில பஸ் மற்றும் ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக மாகாணங்களுக்கிடையில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள பயணத்தடை கடந்த 10ஆம் திகதியிலிருந்து மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாணங்களுக்கிடையே பயணிக்க மணமக்களுக்கு அனுமதி – அஜித் ரோஹண

திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் பயணக்கட்டுப்பாட்டின்போது, அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகளின் போது, திருமண நிகழ்வுகளை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களை கருத்திற் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோரின் பெற்றோர்களும் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும்.

அது தொடர்பில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிடம் தெளிவுப்படுத்துமாறும் பொலிஸ் பேச்சாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம் அரச, தனியார் பேருந்துகளுடன் புகையிரத சேவையும் இடம்பெறும் – திலும் அமுனுகம  நாட்டில் பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளை கருத்திற்கொண்டு முறையாக இன்று (14.07.2021) முதல் மாகாணங்களுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்ட…

லோரன்ஸ் செல்வநாயகம் அரச, தனியார் பேருந்துகளுடன் புகையிரத சேவையும் இடம்பெறும் – திலும் அமுனுகம  நாட்டில் பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளை கருத்திற்கொண்டு முறையாக இன்று (14.07.2021) முதல் மாகாணங்களுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்ட…