Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இன்றைய பெஷன் 

இன்றைய பெஷன்

  • 21

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இரவெல்லாம் விழித்திருந்து
எவனோ ஒருவருடன்
காதலென்ற பெயரில்
கைத்தொலைபேசியில்
கண்டதையெல்லாம் கதைப்பதே
இன்றைய பெஷன்

காலங்கள் கடக்கிறது
நாகரீகம் வளர்கிறது
காதலென்ற நாசத்தைத் தேடி
இளசுகள்நாம் விரைகின்றோம்

இருபது வருடமாய் கட்டிக்காத்த கற்பை
இரண்டுமாத பழக்கத்தில்
இலகுவாக இழக்கின்றோம்
இதுதான் இன்றைய பெஷன்

சாத்தானின் சதியினால்
இளமனசு துடிதுடிக்க
எவனையோ கண்டதும்
ஹோர்மோன்கள் கொதிகொதிக்க
காதலென்ற தீயினிலே
குளிர்காய ஆசைப்பட்டு
நரகத்துத் தீயினை
மனம்மறந்து போகின்றோம்

விழிகளிலே கவர்ச்சி
விதவிதமான செல்ஃபி
எவனோ ஒருவனுக்கு
உடம்பெல்லாம் காட்சி
வீட்டாருக்கு தெரியாமல்
விடியவிடிய பேச்சு
இதுதான் இன்றைய பெஷன்

நமதிந்த இழிச்செயல்
யாருக்கும் தெரியாமலிருக்கலாம்
படைத்த இறைவனுக்கு தெரியுமே!
திசைமாறிய எமது
திருட்டுத்தனமான செயல்கள்
சிறிதும் சிந்தாமல்
இறைவனின் கணக்கிலிருக்கும்

இன்றைய பெஷனிது
காதலென்ற பெயர்சூடி
வாலிபத்தை வலைவீசி
நமைசிக்கவைக்கும் பெஷனிது
சீரழிந்த பெஷனிது

மார்க்கம் மறந்து
ஒழுக்கம் இழந்து
பெற்றோரின் நம்பிக்கையை
குழிதோன்றிப் புதைத்து
ஹராத்தை நோக்கி
நமை நகர்த்துகின்ற
பெஷனிது

காதலென்ற பெயர் கொண்ட
இன்றைய பெஷனிது

RUSTHA SALAM
South Eastern university of Sri Lanka

இரவெல்லாம் விழித்திருந்து எவனோ ஒருவருடன் காதலென்ற பெயரில் கைத்தொலைபேசியில் கண்டதையெல்லாம் கதைப்பதே இன்றைய பெஷன் காலங்கள் கடக்கிறது நாகரீகம் வளர்கிறது காதலென்ற நாசத்தைத் தேடி இளசுகள்நாம் விரைகின்றோம் இருபது வருடமாய் கட்டிக்காத்த கற்பை இரண்டுமாத…

இரவெல்லாம் விழித்திருந்து எவனோ ஒருவருடன் காதலென்ற பெயரில் கைத்தொலைபேசியில் கண்டதையெல்லாம் கதைப்பதே இன்றைய பெஷன் காலங்கள் கடக்கிறது நாகரீகம் வளர்கிறது காதலென்ற நாசத்தைத் தேடி இளசுகள்நாம் விரைகின்றோம் இருபது வருடமாய் கட்டிக்காத்த கற்பை இரண்டுமாத…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *