Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இரு வார்த்தைகளுள் பல அர்த்தம்.... பளபளக்கும் வாழ்வுக்காக.... (Multiple meaning within two words .... to a glow life) 

இரு வார்த்தைகளுள் பல அர்த்தம்…. பளபளக்கும் வாழ்வுக்காக…. (Multiple meaning within two words …. to a glow life)

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மனிதன் தன் எண்ணங்களுக்கு பல வண்ணங்களைக் கொடுத்து உயிர்பித்துக்கொண்டிருக்கிறான் என்பது இயல்பு.அவன் கொண்டுள்ள எதிர்பார்ப்புக்கள் என்பது தன்வாழ்க்கையை சுவாரஷ்யமிக்கதாக மாற்றுவதற்கு இன்றியமையாததொன்றாகும்.ஆனால் சிலவேளை அவனது “எதிர்பார்ப்புக்கள்” எதிர்மறையாக அமைகின்றபோதோ,அல்லது எதிர்மறையான எதிர்பார்ப்புக்களில் அவன் மாட்டிக்கொள்கின்றபோதோ, சிக்கல்கள் வர ஆரம்பிக்கின்றன. அதனால் அவனுக்கு கவலையும் சஞ்சலமும் விரக்தியுடன் கூடிய தாழ்வுமனப்பான்மையும் ஏற்படுகின்றன.சிலவேளை அவனுக்கு எண்ணிலடங்கா துயரங்கள் ஆட்கொண்டு ஒரு கட்டத்தில் விலையிட முடியா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியிடும் நிலையும் இல்லாமலில்லை.

மேலும் அவனது வாழ்க்கை இலட்சியங்கள் உடைந்து உருக்குலைந்து போவதற்கும் எதிர்மறையான எதிர்பார்ப்புக்கள் காரணமாக அமைந்து விடுகின்றது. அதேபோலவே “ஒப்பீடுகளும்” அவ்வாறே. சிலவேளை அவைகளும் கூட தவறாக அமைகின்றபோது வாழ்க்கை வீழ்ச்சிக்கு புடம் போடுகின்றது. ஆனால் இன்னொரு புறத்தில் சீரான நேரான எதிர்பார்ப்புகள் மற்றும் ஒப்பீடுகள் ஒரு இலட்சிய மனிதனது வாழ்க்கை பயணத்தை நேர்ப்படுத்தி உச்சத்தை அடைவதற்கு துணைபுரிகின்றன.

ஆக, எதிர்பார்ப்புக்களும் ஒப்பீடுகளும் சமச்சீரான நேர்மறையான எண்ணங்களால் தோற்றுவிக்கப்பட்டு அவை செயல்களில் பிரதிபலிப்பதன் மூலம் வாழ்க்கை பயணம் சீரும் சிறப்புடனும் அமைகின்றபோது அவை இரண்டினதும் அடைவுகளும் அர்த்தங்களும் அதுவாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எடுத்துக்காட்டாக உதாரணங்களை எண்ணிக்கையின்றி உதிரலாம். ஆனால் எதிர்பார்ப்பு மற்றும் ஒப்பீடு என்பவற்றை நான் ஒரு குறிப்பிட்ட அளவில் எல்லைப்படுத்திவிட விரும்பவில்லை மாறாக அவை இரண்டுக்கும் ஆயிரக்கணக்கான அர்த்தங்கள் இருக்கின்றன.ஏன் வெற்றிகளையும் தோல்விகளையும் நிர்ணயிப்பதாய் கூட அமைகிறது. என்பதை கூறவும் நிரூபிக்கவுமே இங்கு முனைகின்றேன்.

ஆக, எம் வாழ்க்கைப் பயணத்தில் இவ்விரண்டு வார்த்தைகளுக்கு எவ்வளவு அதிகம்! முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்பதை ஒரு கணப்பொழுது சிந்திக்கின்ற பொழுதே இதன் பெறுமதியைதெளிவாக புரிந்து கொள்ள முடியும் ஆனால் அவை நேர்மறையாகவும் சீரானதாகவும் சமச்சீரானதாகவும் இருக்கின்றபோதே அவ்விரண்டு வார்த்தைகளின் அடைவு எம்மை வந்துசேருகின்றன.அப்போதுதான் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து அதன் மூலமாக நம்மை முன்னேற்றிக்கொள்ள முடியும். என்கின்ற சிந்தனைத்துளியோடு நானும் நீங்களும் எமது வாழ்வில் சிகரம் தொடுவதற்கு வல்லோனை பிராத்திக்கின்றேன்.
(ஜஷாக்கல்லாஹூஹைரன்)

இதன் தொடர்ச்சி விரைவில்……
சல்ஜி லபீர்
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

மனிதன் தன் எண்ணங்களுக்கு பல வண்ணங்களைக் கொடுத்து உயிர்பித்துக்கொண்டிருக்கிறான் என்பது இயல்பு.அவன் கொண்டுள்ள எதிர்பார்ப்புக்கள் என்பது தன்வாழ்க்கையை சுவாரஷ்யமிக்கதாக மாற்றுவதற்கு இன்றியமையாததொன்றாகும்.ஆனால் சிலவேளை அவனது “எதிர்பார்ப்புக்கள்” எதிர்மறையாக அமைகின்றபோதோ,அல்லது எதிர்மறையான எதிர்பார்ப்புக்களில் அவன் மாட்டிக்கொள்கின்றபோதோ,…

மனிதன் தன் எண்ணங்களுக்கு பல வண்ணங்களைக் கொடுத்து உயிர்பித்துக்கொண்டிருக்கிறான் என்பது இயல்பு.அவன் கொண்டுள்ள எதிர்பார்ப்புக்கள் என்பது தன்வாழ்க்கையை சுவாரஷ்யமிக்கதாக மாற்றுவதற்கு இன்றியமையாததொன்றாகும்.ஆனால் சிலவேளை அவனது “எதிர்பார்ப்புக்கள்” எதிர்மறையாக அமைகின்றபோதோ,அல்லது எதிர்மறையான எதிர்பார்ப்புக்களில் அவன் மாட்டிக்கொள்கின்றபோதோ,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *