Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இறப்பவர்களில் ¼ முஸ்லிம்கள் கவனமாக இருங்கள் - டாக்டர் அன்வர் ஹம்தானி - Youth Ceylon

இறப்பவர்களில் ¼ முஸ்லிம்கள் கவனமாக இருங்கள் – டாக்டர் அன்வர் ஹம்தானி

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இனத்தைக் குறித்து கேள்வி எழுப்பினால் இனவாதம் பேசுவதாக எம்மீது குற்றச்சாட்டுக்கள் வரலாம். வைத்தியர் அன்வர் ஹம்தானி இருப்பதனால் கேட்கிறேன். மரணங்களின் எண்ணிக்கை 4000 கடந்துள்ள நிலையில், சுமார் 1300 (1355) உடல்கள் ஒட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு முஸ்லிம்களுடைய உடல்களா உள்ளது? என்று ஊடகவியாளர் சதுர அல்விஸ் டாக்டர் அன்வர் ஹம்தானியிடம் கேள்வி எழுப்பினார்.

குறித்த கேள்விக்கு டாக்டர் பதிலளிக்கையில்,

இல்லை அங்கு அனைத்து மதங்களுடைய உடல்களும் உள்ளன. அதில் 1273 உடல்கள் முஸ்லிம்களுடையது.

அவ்வாறெனின் உயிரிழப்பவர்களில் ¼ மேற்பட்டோர் முஸ்லிம்களுடையது. இனவிகிதசார (8% -12%) அடிப்படையை பார்த்தால் இதனை விட வித்தியசமானது. இதற்கான (முஸ்லிகளின் மரண அதிகரிப்பிற்கு) காரணம் என்ன? என்று சதுர கேள்வி எழுப்பினார்.

மரணித்தவர்களில் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள். அவ்வாறு தடுப்பூசி பெறாமல் இருக்க மதம், சமூகக் காரணிகளை கூறலாம். நானும் முஸ்லிம் எங்கும் அவ்வாறு தடைகள் இல்லை. அவை அவர்கள் தாமாக மன நினைப்பிற்கு ஏற்ப உருவாக்கியவை அவ்வாறெனில் வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுப்பதும் நல்லதல்ல. அவ்வாறெனில் நெஞ்சுவலி ஏற்பட்டால் மரணிக்க வேண்டும். உபதேசங்களை பின்பற்றாமல் இருப்பது ஏன்? அது தான் காரணம் என்று டாக்டர் தெரிவித்தார்.

உண்மையில் எமது சகோதர பிரிவை பாதுகாக்க வேண்டும் என்பதால் இவை கேட்கிறேன். உண்மையில் தடுப்பூசியில் பன்றி எண்ணெய் கலப்புகள் உள்ளடங்கப்பட்டுள்ளதா?

இவ்வாறு சிந்திப்போம் முஸ்லிம் ஒருவர் வைத்தியசாலைக்கு வந்தால் முஸ்லிம் ஒருவருடைய இரத்தமா வழங்கப்படுகின்றது. இல்லை இரத்த வங்கியால் பெற்ற மனித இரத்தமே வழங்கப்படுகின்றது.

இதனைத்தான் உணர்ந்து கொள்ள வேண்டும். அல்லாவிடின் இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுங்கள். பயப்படத்தேவையில்லை. அதிலும் எது நல்லது என்று கேட்கிறார்கள். கிடைப்பதைப் பெற்றுக் கொள்வதே நல்லது.

உலகில் தடுப்பூசி பெறாத பெரும்பாலனோர் உள்ளனர். கடந்த இருவாரங்களில் நாம் தடுப்பூசி  வழங்குவதில் முதலிடத்தில் உள்ளோம். அவ்வாறு வழங்கியும் பெற்றுக் கொள்ளாவிடின் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் பொறுப்பெற்றுக் கொள்ள வேண்டும். என்று தெரிவித்தார். LNN Staff

 

இனத்தைக் குறித்து கேள்வி எழுப்பினால் இனவாதம் பேசுவதாக எம்மீது குற்றச்சாட்டுக்கள் வரலாம். வைத்தியர் அன்வர் ஹம்தானி இருப்பதனால் கேட்கிறேன். மரணங்களின் எண்ணிக்கை 4000 கடந்துள்ள நிலையில், சுமார் 1300 (1355) உடல்கள் ஒட்டமாவடியில் அடக்கம்…

இனத்தைக் குறித்து கேள்வி எழுப்பினால் இனவாதம் பேசுவதாக எம்மீது குற்றச்சாட்டுக்கள் வரலாம். வைத்தியர் அன்வர் ஹம்தானி இருப்பதனால் கேட்கிறேன். மரணங்களின் எண்ணிக்கை 4000 கடந்துள்ள நிலையில், சுமார் 1300 (1355) உடல்கள் ஒட்டமாவடியில் அடக்கம்…