Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இறை படைப்புக்கள் தனக்காக வாழ்வதில்லை! 

இறை படைப்புக்கள் தனக்காக வாழ்வதில்லை!

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நீரும், நிலமும், மலையும், காடும் இயற்கை தந்துள்ள காப்பரண்கள். வானுயர்ந்த சோலைகள், படரும் கொடிகள், ஓங்கி வளரும் மரங்கள், பசுமை செடிகள், கண்கவரும் மலர்கள் யாவும் இயற்கையெனும் இறைவன் அருள்கள். சுற்றுச் சூழலை அழகுபடுத்தி மணம் கமழச் செய்யும் வண்ணங்கள். இவை யாவுமே தனக்காக வாழ்வதில்லை. இயற்கையில் எதுவும் தனக்காக வாழ்ந்ததில்லை. சுயநலன்கள் அதற்கில்லை. பிறர் நலன் பேணுவதே இயற்கையில் காணப்படும் இறைவன் படைப்புக்களின் இயல்பm

கடல் வளம் ஒரு நாட்டை தலைநிமிர்ந்து வாழ வாரி வழங்குகிறது. ஆனால் அது ஒரு குஞ்சு மீனைக் கூட சாப்பிடுவதில்லை. முத்து, பவளம், முக்கனிகள் அனைத்துமே யாருக்காக? வகை வகையான கனிகள் தரும் மரங்கள், வியர்வை போக்கும் அதன் நிழல்கள் யாருக்காக? எல்லாமே பிறர் நலன்களுக்காக. ஆனால் மரங்கள் பழங்களை சாப்பிடுவதில்லையே.

உதய சூரியனின் பார்வையில் உலகம் விழிக்கிறது. தரணி வெளுக்கிறது. மனிதன் இயங்கத் துவங்குகிறான். சூரியன் ஒருபோதும் தனக்காக உதிப்பதில்லையே. சந்திரன் தரும் குளிர்ச்சி மனதுக்கு இதமாக இருக்கிறது. நட்சத்திரங்களின் பேரழகு இணைந்த உள்ளங்களை பிரியவிடாது பாதுகாக்கிறது. இவை யாவும் தனக்காக வாழ்வதில்லையே.

ஒவ்வொரு பூக்களும் வெவ்வேறு வாசம் தருகிறது. அனுபவிப்பது யார்? பூக்களா? நாங்களா?

விலங்குகள் மனித வாழ்விற்கு ஆதாரமாக உள்ளன. அதனை நாம் ரசிக்கின்றோம். அதில் சவாரி செய்கின்றோம். பால், வெண்ணெய் மோர் என்று அதனை உறிஞ்சி சுவைக்கின்றோம்.

கூதலுக்கு கம்பளி, காலுக்கு பாதணி, ஆனந்தமாய் உட்கார்ந்து உரையாட விரிப்பு, என மற்றவர்களின் நலனுக்காக அது வாழ்கிறது. ஆனால் மடிமீது நிறைந்து வழியும் பாலை பசு சுவைப்பதில்லை.

இயற்கையெனும் இறைவன் படைப்புக்கள் யாவம் பிறருக்காகவே உள்ளன.

நமது சுற்றுச் சூழலில் காணப்படும் இயற்கை அரண்கள் எனும் இறைவன் படைப்புக்கள் எமக்கு ஒரு முக்கியமான பாடத்தை சொல்லித் தருகின்றன. மனிதா நீ உனக்காக மட்டும் வாழாதே. பிறர் மீது கருணை காட்டும் சகோதரனாக வாழப்பழகு. மற்றவர்கள் உன்னை ஒரு அருளாகப் பார்க்கட்டும். உன் தோழமை அடுத்தவரின் துயர் துடைப்பதற்கு வழியாக அமையட்டும். இது இறை படைப்புகள் சதாவும் பிறருக்காக கொடுப்பதன் மூலம் எமக்கு கற்றுத்தரும் பாடங்கள்.

மனச் சுமைகளுடன் வரும் ஒரு சகோதரனை தேற்றுவது நமது இயல்பாக இருக்கட்டும். அவனது கவலைகளுக்கு காது கொடுப்போம். அவனது கஷ்டத்தை நீக்குவதற்கு உடந்தையாக இருப்போம்.

தப்பும் தவறும் வாழ்வில் சகஜம். கூடிப் பழுகும் உற்றார் உறவினர்கள் மத்தியில் அது அதிகம். எனவே மன்னிப்பு கேட்டால் மறுபேச்சு இல்லாமல் மன்னிப்போம். மன்னிப்பு கேட்காமலே மன்னித்து விட பழகுவோம். மன்னிக்க தெரிந்த உள்ளம் மனிதர்களுள் மாணிக்கம்.

தேவையுடையவன் எப்போதும் வாய்திறந்து கேட்பதில்லை. சிலர் தன்னடக்கம் காரணமாக கேட்கவே மாட்டார்கள். தேவையுடையவன் வந்தால் உதவுவோம். தன்னடக்கம் கொண்ட உயர்ந்த உள்ளங்களை தேடிக் கொடுப்போம். கொடுப்பதால் செல்வம் குறைவதில்லை என்பதை நம்புவோம்.

ஆயிரம் இருந்தாலும் எல்லாம் அழிந்து விடும். மலர்ந்துள்ள யாவுமே ஒரு நொடியில் வாடிவிடும். வாடாமல் அழியாமல் இருப்பது நாம் செய்யும் புன்னியங்கள் மட்டுமே.

நன்மை செய்வோம். வாடும் உள்ளங்களை பூரிக்க வைப்போம். வளமாக வாழ அதுவே வழி. கொடுப்பது ஒரு துளியாக இருந்தாலும் உள்ளத்தில் அது வாழும். இறுதிவரை பயன் தரும். பிரிந்த உள்ளங்களை சேர்க்கும். இணைந்த உள்ளங்களில் குளிர்ச்சியை தரும். யாருமற்ற நேரத்தில் கைகொடுக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும்.

மடி நிறைய இருந்தால் தான் கொடுக்க முடியும் என்பதில்லை. இருப்பதை கொடுப்போம். இருப்பதை கொடுப்பதால் கிடைக்கும் இன்பம் கொடுத்தவன் மட்டும் அனுபவிக்க முடியுமான உணர்வாகும்.

நன்மைமையை விதைப்போம். நல்லுள்ளங்களை சம்பாதிப்பேம். இன்பம் காணுவோம். ஈருலகிலும் பயன்பெறுவோம். அது தான் அர்த்தமுள்ள வாழ்கை. இது இறைவன் படைப்பான இயற்கை தரும் பாடம். அது மனதில் நிறைந்த உணர்வையும் திருப்தியையும் தருகிறது. வாழும்போதே மனநிறைவையும் வாழ்வுக்குப் பிறரது மங்கா புகழையும் தருகிறது.

பிறருக்காக வாழும் உள்ளங்கள் என்றும் நலமாக, வளமாக வாழப் பிராத்திக்கின்றோம்.

முஹம்மத் பகீஹுத்தீன்

நீரும், நிலமும், மலையும், காடும் இயற்கை தந்துள்ள காப்பரண்கள். வானுயர்ந்த சோலைகள், படரும் கொடிகள், ஓங்கி வளரும் மரங்கள், பசுமை செடிகள், கண்கவரும் மலர்கள் யாவும் இயற்கையெனும் இறைவன் அருள்கள். சுற்றுச் சூழலை அழகுபடுத்தி…

நீரும், நிலமும், மலையும், காடும் இயற்கை தந்துள்ள காப்பரண்கள். வானுயர்ந்த சோலைகள், படரும் கொடிகள், ஓங்கி வளரும் மரங்கள், பசுமை செடிகள், கண்கவரும் மலர்கள் யாவும் இயற்கையெனும் இறைவன் அருள்கள். சுற்றுச் சூழலை அழகுபடுத்தி…