Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இலங்கையில் முதலீடு செய்வதற்கு இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு 

இலங்கையில் முதலீடு செய்வதற்கு இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

  • 6

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நா.தனுஜா

ஆசியாவின் சொர்க்கமாக விளங்கக்கூடிய இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுக்கும் அதேவேளை, இரு நாடுகளும் ஒன்றிணைந்து கொவிட் – 19 நெருக்கடிக்குப் பின்னர் காணப்படும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் நிலுக கதுருகமுவ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை முதலீட்டுச்சபை, இலங்கை வர்த்தகப்பேரவை மற்றும் கொழும்புப் பங்குச்சந்தை ஆகியவற்றின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் திங்கட்கிழமை ஆரம்பமான இலங்கை முதலீட்டுப்பேரவை மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. இதில் கலந்துகொண்டு இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் காணப்படும் நிலவரத்தைக் காண்பிப்பதற்கும் புதிய வாய்ப்புக்கள் தொடர்பில் வெளிப்படுத்துவதற்கும் இது மிகவும் பொருத்தமான தருணம் என்று நினைக்கின்றேன். ஏனெனில் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து இலங்கை மற்றும் இந்தியா உள்ளடங்கலாக உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளினதும் முன்னுரிமைக்குரிய விடயமாக இப்போது ‘பொருளாதார மீட்சி’ மாறியிருக்கின்றது.

இந்தியா – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதற்கு அண்மையிலான காலப்பகுதியில் (2000 ஆம் ஆண்டு) 658 மில்லியன் அமெரிக்கடொலர்களாகக் காணப்பட்ட வர்த்தகம், கடந்த 2020 ஆம் ஆண்டாகும்போது 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருக்கின்றது என்பதை சுங்கத்திணைக்களத்தின் தரவுகள் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. அடுத்ததாக இலங்கையின் மூன்றாவது பெரிய ஏற்றுமதிச்சந்தையாக இந்தியா விளங்குகின்றது. மேலும் இலங்கையில் அதிகளவான முதலீடுகளைச்செய்யும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் உள்ளடங்குகின்றது.

பெற்றோலியம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பாடல் சேவைகள், சுற்றுலாத்துறை, வங்கி நடவடிக்கைகள், டயர் உற்பத்தி, சீமெந்து உற்பத்தி, வீடமைப்பு, கண்ணாடி உற்பத்தி ஆகிய பல்வேறு துறைகளிலும் இந்தியாவினால் இலங்கையில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. தாஜ்சமுத்ரா நட்சத்திர ஹோட்டல், அம்புஜா சீமெந்து, ஐ.ஓ.சி பெற்றோலியம் உள்ளடங்கலாக இந்தியாவின் பாரிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட பல்வேறு செயற்திட்டங்கள் மற்றும் உற்பத்திகள் இலங்கையில் உள்ளன.

இலங்கை முதலீட்டுச்சபையின் தரவுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் இந்திய முதலீட்டுத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுதல் என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அவசியம் என்பதை அரசாங்கம் நன்கு உணர்ந்திருப்பதுடன் அதற்கேற்ற வசதிகளையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அதன்மூலம் பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குக் காணப்படுகின்றது. இலங்கையிலுள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்தி இந்திய வணிகர்களும் முதலீட்டாளர்களும் தமது வணிகவாய்ப்புக்களை விருத்திசெய்துகொள்வதுடன் அதிகளவான வருமானத்தை ஈட்டிக்கொள்ளக்கூடிய தருணம் இதுவாகும் என்றார்.

நா.தனுஜா ஆசியாவின் சொர்க்கமாக விளங்கக்கூடிய இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுக்கும் அதேவேளை, இரு நாடுகளும் ஒன்றிணைந்து கொவிட் – 19 நெருக்கடிக்குப் பின்னர் காணப்படும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று…

நா.தனுஜா ஆசியாவின் சொர்க்கமாக விளங்கக்கூடிய இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுக்கும் அதேவேளை, இரு நாடுகளும் ஒன்றிணைந்து கொவிட் – 19 நெருக்கடிக்குப் பின்னர் காணப்படும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று…