Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இலங்கை ரூபாவின் பெறுமதியை குறைக்குமாறு வங்கிகளிடம் கோரவில்லை - Youth Ceylon

இலங்கை ரூபாவின் பெறுமதியை குறைக்குமாறு வங்கிகளிடம் கோரவில்லை

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உடனடியாகச் செயற்படும் விதத்தில் இலங்கை ரூபாவை மதிப்புக் குறைக்குமாறு உரிமம்பெற்ற வங்கிகளிடம் உத்தியோகபூர்வமாக கோரப்பட்டுள்ளதாக பரப்பப்பட்டு வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உடனடியாகச் செயற்படும் விதத்தில் இலங்கை ரூபாவை மதிப்புக் குறைக்குமாறு உரிமம்பெற்ற வங்கிகள் உத்தியோகபூர்வமாக கோரப்பட்டுள்ளன என்ற செய்திகள் பரப்பப்பட்டுவருவதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளது.

அத்தகைய செய்திகள் எவ்விதத்திலேனும் அடிப்படையற்றவை என பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுவதுடன் செலாவணி வீதத்தினை நிர்ணயிப்பதன் மீதான இலங்கை மத்திய வங்கியின் நிலைக்கு அல்லது தொழிற்பாட்டுரீதியான ஏற்பாடுகளுக்கு இலங்கை மத்திய வங்கி எந்தவித மாற்றத்தினையும் மேற்கொள்ளவில்லை.

சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் ஊடாகவும் பரப்பப்பட்டு வருகின்ற தவறானதும் தவறாக வழிநடத்துகின்றதுமான தகவல்களை நம்பவேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி விடுக்கும் ஏதேனும் உத்தியோகபூர்வ அறிக்கை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், பிரதி ஆளுநர் அல்லது பெயர் மற்றும் பதவி மூலம் அடையாளப்படுத்தப்படுகின்ற இலங்கை மத்திய வங்கியின் எவரேனும் வேறு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் மூலமே வழங்கப்படும். என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

[pdfjs-viewer url=”https%3A%2F%2Fyouthceylon.com%2Fwp-content%2Fuploads%2F2021%2F08%2FLicensed-Banks-Have-not-Been-Asked-to-Devalue-the-Sri-Lanka-Rupee-CBSL-1.pdf” viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]

 

உடனடியாகச் செயற்படும் விதத்தில் இலங்கை ரூபாவை மதிப்புக் குறைக்குமாறு உரிமம்பெற்ற வங்கிகளிடம் உத்தியோகபூர்வமாக கோரப்பட்டுள்ளதாக பரப்பப்பட்டு வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மத்திய…

உடனடியாகச் செயற்படும் விதத்தில் இலங்கை ரூபாவை மதிப்புக் குறைக்குமாறு உரிமம்பெற்ற வங்கிகளிடம் உத்தியோகபூர்வமாக கோரப்பட்டுள்ளதாக பரப்பப்பட்டு வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மத்திய…