Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இஸ்லாத்தில் தீவிரவாதம் எங்கிருந்து? எதுவரை? 

இஸ்லாத்தில் தீவிரவாதம் எங்கிருந்து? எதுவரை?

  • 133

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இஸ்லாம் அமைதியின் மார்க்கம், சமாதானத்தின் தூது, சாந்தியின் பிறப்பிடம் என்றுதான் இஸ்லாத்தை நம் முன்னோர் அறிந்திருந்தனர். இஸ்லாம் எங்கெல்லாம் வியாபிக்கின்றதோ அங்கெல்லாம் அமைதி குடிகொள்ளும், சமாதானம் நிலைபெறும், மக்களின் வாழ்க்கை சுபிட்சத்தை நோக்கி நடைபோடும். இதைத்தான் நபிகளாரின் காலத்தைத் தொடர்ந்து வந்த இஸ்லாமிய கிலாபத் இன்றுவரை பாடமாய் எமக்கு கற்பிக்கின்றது. உலகில் அட்டூழியங்களும் அராஜகங்களும் தலைவிரித்தாடிய காலம் இஸ்லாத்தின் வருகை முழு உலக மக்களையும் மகிழ்வித்தது. செங்கம்பளம் விரித்து இஸ்லாத்தை வரவேற்றனர். அதனால்தான் உலக வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய நிலப்பரப்பை இஸ்லாத்தால் தனதாக்க முடிந்தது.

இவ்வாறு உலகில் அமைதியைப் பரப்பி, சமாதானத்தை நிலைநாட்டி உலக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திய இஸ்லாத்திற்கு தீவிரவாதப் பட்டம் எங்கிருந்து வந்தது? அதன் பின்னணி என்ன? என்ற கேள்விகள் எம் முன்னால் எழுந்துள்ளது. அதற்கான விடையாக இந்த ஆக்கம் அமையப் பெறும்.

உலகில் வாழ்கின்ற மனித கோடிகள் பல இன மத குழுக்களாக பிரிந்து வாழ்கின்றனர். அவர்களுக்கென்று தனித்துவமான கலாச்சாரங்களும் நடைமுறைகளும் பழக்கவழக்கங்களும் உண்டு. அவர்களை வழிநடத்துவதற்கு தலைமை பீடங்களும் உள்ளது. கிறிஸ்தவ உலகின் தலைமையிடம் எதுவென்று கேட்டால் வத்திக்கான் என்பீர்கள். கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தலைவர் யார் என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லுவீர்கள் பாப்பரசர் என்று.

மூன்று பேர் ஒரு பயணத்தை மேற்கொண்டாலும் அதில் ஒருவரை தலைவராக, பொறுப்பாளராக, வழிகாட்டியாக நியமிக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம். இன்று உலகில் 57 பெரும்பான்மை முஸ்லிம் நாடுகள், கோடான கோடி முஸ்லிம்கள். இவர்களின் தலைமை பீடம் எங்கு உள்ளது? இவர்களின் தலைவர் யார்? உங்களிடம் தான் கேட்கிறேன். விடை உள்ளதா?

இஸ்லாத்தில் தீவிரவாதம் என்று சொல்லிவிட்டு எதை எதையோ பேசுகிறாரே என்று நினைக்க வேண்டாம்.

முதலாம் உலகப் போரும் உஸ்மானிய கிலாபத்தும்

உலகையே மிகப்பெரிய அழிவிற்கும் நாசத்திற்கும் உட்படுத்திய முதலாம் உலகப் போரின் பின்னணி என்ன? முதலாம் உலகப்போரின் தேவை என்ன? ஏன் நடந்தது? முதலாம் உலகப்போரை யார் முன்னெடுத்தார்கள்? யாருக்கு எதிராய் முன்னெடுத்தார்கள்? யார் லாபம் அடைந்தார்கள்? என்ற கேள்விகளுக்கான விடையை அடுத்து நாம் பார்ப்போம்.

வரலாறு என்பது ஒரு சமூகத்தின் ஆணிவேர். உண்மையில் உண்மையான வரலாறு எமது வரலாற்றுப் புத்தகங்களில் வருவதில்லை. மறைக்கப்படுகின்றது; மறுக்கப்படுகின்றது; மொத்தத்தில் அவைகள் அழிக்கப்பட்டு அவர்களுக்கு சார்பாய் வரலாறு வரையப்படுகின்றது. ஆனால் தேடலுள்ளவர்கள், நுணுக்கமானவர்கள், நுட்பமானவர்கள் அந்த வரலாறுகளை கண்டு கொள்கின்றார்கள். இது போன்று உண்மை மறைக்கப்பட்ட வரலாறுதான் முதலாம் உலக மகா யுத்தத்திற்கும் உண்டு.

உண்மையில் ஐரோப்பிய உலகின் எழுச்சி முதலாம் உலக மகா யுத்தத்தில் மிகப்பெரிய தாக்கம் செலுத்தியுள்ளது. அறிவியல் ரீதியாக, தொழில்நுட்பரீதியாக, கைத் தொழில் ரீதியாக அங்கு ஏற்பட்ட எழுச்சி இந்த உலகத்தின் மிகச் சிறந்தவர்களாக அவர்களை எண்ணம் கொள்ளச் செய்தது. இந்த உலகத்தையே தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும், இந்த உலகத்தையே நாம் ஆள வேண்டும், அடிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் மேலோங்கியது. அதற்கான வரைபையும் திட்டங்களையும் மிகக் கச்சிதமாக மேற்கொண்டார்கள். இவ்வாறு ஒரு நாசகார கனவுடன் புறப்பட்ட இவர்களுக்கு உலகில் வேரூன்றி இருந்த உஸ்மானிய கிலாபத் மிகப்பெரும் தடையாக இருந்தது. ஐரோப்பிய உலகின் துருக்கி தொடக்கம் மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, ஆசியா என உலகின் பெரும்பான்மையான பிரதேசங்களை உஸ்மானிய கிலாபத் நிர்வாகித்து வந்தது. ஆகவே இஸ்லாமிய கிலாபத்தை மீறி இவர்களால் தமது நாசகார கனவுகளை நனவாக்க முடியாது என உணர்ந்தனர். ஆகவே உஸ்மானிய கிலாபத் உள்ளவரை அவர்களின் கனவுகள் கானல்நீராகவே அமையும் என்பதை அறிந்து இஸ்லாமிய கிலாபத்தை இல்லாமல் செய்வதற்கான திட்டங்களை வகுத்தார்கள்.

உஸ்மானிய கிலாபத்தின் வீழ்ச்சியில் தான் ஐரோப்பா உலகின் உண்மையான எழுச்சி தங்கியுள்ளதாக நம்பினர். ஆகவே உலகில் மிகப்பெரும் சாம்ராஜ்யமாக விளங்கிய உஸ்மானிய கிலாபத்தின் வீழ்த்த அவர்கள் மேற்கொண்ட திட்டமே முதலாம் உலகப் போர் ஆகும். இந்த முதலாம் உலகப் போரின் பிரதான நோக்கம் உஸ்மானிய கிலாபத்தை இல்லாமல் செய்வதாகும். இஸ்லாமிய உலகின் நிலப்பரப்புக்களை தமக்கு மத்தியில் பங்கீடு செய்து கொள்ளல் அடுத்த திட்டம் ஆகும். இது தொடர்பாக பிரித்தானியா பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் வெளிச்சத்துக்கு வந்தது நினைவு கூரத்தக்கதாகும்.

இவ்வாறு மிகப்பெரிய திட்டத்துடன் உஸ்மானிய கிலாபத்தை அளிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட முதலாம் உலகப்போரை எதிர்கொள்ள திராணியற்றவர்களாக உலகின் மிகப்பெரிய வல்லரசாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட உஸ்மானிய கிலாபத் அன்று காணப்பட்டது. சரியான திட்டமிடல் இன்மை, தூரநோக்கின்மை, இராணுவ பலவீனம், தூய இஸ்லாத்தை விட்டு தூர சென்றமை போன்ற காரணிகள் இஸ்லாமிய கிலாபத்தை உலக அரங்கில் பலவீனப்படுத்தியது.

நாம் ஐரோப்பியர்களிடம் இருந்தும் பிரித்தானியாவிடம் இருந்தும் படிக்க வேண்டிய பாடங்கள் ஏராளம். உளவியல் ரீதியாக உஸ்மானிய கிலாபத்தை பலவீனமடையச் செய்து தங்களிடம் சரணடைவதில் பிரித்தானியா வெற்றி கண்டது. இஸ்லாமிய கிலாபத் பிரித்தானியாவிடம் ஒப்பந்தங்கள் மேற்கொள்வோம் என கூறி உடன்பட்டது. இவ்வாறு உஸ்மானிய கிலாஃபத்தை பிரித்தானியா ஆக்கிரமித்தாலும் எந்த உடனடி நடவடிக்கைகளையும் அது மேற்கொள்ளவில்லை. உஸ்மானிய கிலாபத்தை இல்லாமல் செய்யவில்லை, கலிபாவை கொலை செய்யவில்லை. அனைத்தும் வெளி உலகுக்கு வழமை போன்று தான் இருந்தது அன்று.

தூரநோக்குடன் மிகத் திட்டமிட்ட அடிப்படையில் பிரித்தானியா செயற்பட்டது. ஏனென்றால் கிலாஃபா அரசு என்பது கோடான கோடி முஸ்லிம்களின் உயிரிலும் மேலானது, அதற்கு ஏதும் ஆபத்து என்றால் அவர்கள் உயிரையும் துச்சமாக மதித்து கிலாபத்தை மீட்க, காக்க போராடுவார்கள் என்பதை பிரித்தானியா நன்கு அறிந்து வைத்திருந்தது .

பிரித்தானியா மிகப்பெரிய திட்டங்களை வகுத்து உஸ்மானிய கிலாபத்தின் அதன் பிரதேசங்களில் செயற்படுத்தியது. முஸ்லிம் உலகில் கிலாஃபத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்தல். கிலாஃபத் தலைமைத்துவத்தில் மக்களிற்கு இருந்த நம்பிக்கையை நீக்குதல். அதன்மீது மக்களை வெறுப்படையச் செய்தல். மூளை சலவை செய்யப்பட்ட முஸ்லிம்களை உருவாக்கி அவர்களை கிலாபத்துக்கு எதிராக செயற்பட வைத்தல்.

துருக்கியில் தேசியவாதத்தையும் அரபுலகில் அரபியர்கள் என்ற மேலாதிக்கத்தையும் உயிர்ப்பித்தல். இவர்களுக்கு துணை நிற்பவர்களுக்கு, இவர்களின் திட்டங்களை மிகக் கச்சிதமாய் மேற்கொள்கின்றவர்களுக்கு இலவசமான ஊடக அனுசரணை வழங்கல்.

மக்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கை அதிகப்படுத்தல். அவர்களின் கருத்துக்களை அவசரமாகவும் விரைவாகவும் மக்கள் மயப்படுத்தல். இறுதியில் முஸ்லிம்களின் மிகப்பெரிய எதிர்ப்பின்றி பெயர்தாங்கி முஸ்லிம்கள் மூலமாகவே உஸ்மானிய கிலாபத்தை வீழ்த்தல் என்பதை நோக்கி பிரித்தானியாவின் எட்டுகள் நகர்ந்தன.

பிரித்தானியாவை அதன் செயற்பாடுகளை ஆதரித்து அதற்கு துணை போகின்றவர்கள் அனைவரும் சமாதான விரும்பிகள், மிகச் சிறந்த மனிதர்கள் என போற்றப்படுவார்கள். அவர்களின் அநியாயங்களை, அட்டூழியங்களை பார்த்து பொறுக்க முடியாதவர்கள் அதைத் தட்டிக் கேட்கும் போது அவர்களை மிகப்பெரும் பயங்கரவாதிகளாகவும் உலகின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் அச்சுறுத்தல் மிக்கவர்களாகவும் சித்தரிப்பார்கள். அவர்களே உலகின் மிகப்பெரிய பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என தம்பட்டம் அடிப்பார்கள்.

ஏனெனில் உலகம் எனும் கப்பலில் மாலுமி அவர்கள் தான். நினைத்த திசையில் உலகை செலுத்துகிறார்கள். உலகின் பொருளாதாரம் கல்வி அரசியல் ஊடகம் என அனைத்தும் அவர்கள் கைவசம்.

பலஸ்தீன பயங்கரவாதம்

உலகின் நாடோடிகளாக வாழ்ந்த யூதர்கள் உஸ்மானிய பேரரசிடம் பலஸ்தீனில் வாழ இடம் கோறுகின்றார்கள். ஆனால் யூதர்களின் உள் நோக்கத்தை அறிந்த அவர்கள் முழுமையாக அவர்களின் கோரிக்கையை நிராகரித்ததுடன் மிகக் கடுமையாக எச்சரித்தும் விட்டார்கள். ஆதலால் யூதர்களின் பலஸ்தீன பூமியில் அவர்களின் தாயகத்தை அமைக்கும் கனவு பலிக்கவில்லை. உஸ்மானிய பேரரசு நிலைக்கும் வரை தங்களால் பலஸ்தீன பூமியில் தாயகத்தை அமைக்க முடியாது என உணர்ந்தார்கள். எனவே உஸ்மானிய கிலாபத்தினை அழித்தொழிப்பதே அவர்களின் முதல் பணியாக மாறியது. இதனால் யூதர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு முழுமையான ஆதரவை வழங்கினார்கள். பின்னால் நின்று பிரிட்டிஷ் அரசை வழி நடத்தியவர்கள் இவர்கள் என்றால் அது மிகையல்ல. ஆகவே உஸ்மானிய கிலாபத் விழுந்ததைத் தொடர்ந்து பலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசுக்கு சொந்தமானது. தற்பொழுது பிரிட்டிஷ் அரசின் ஆதரவுடன் யூதர்கள் பலஸ்தீனில் தமது தாயகத்தை உருவாக்கினார்கள். பலஸ்தீனில் அந்நாட்டின் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்த பலஸ்தீனர்கள் இரண்டாம்பட்ச குடிகளாக கணிக்கப்பட்டனர், அடிமைப்படுத்தப்பட்டனர், மிகமோசமாக அடக்கப்பட்டனர். இவை அனைத்தையும் பொறுக்க முடியாது இதற்கெதிராக பலஸ்தீன மக்கள் குரல் எழுப்பிய போது அவர்களை இஸ்ரேலும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் தீவிரவாதி என்றார்கள். இதுதான் பலஸ்தீனில் இஸ்லாமிய தீவிரவாதம்?

அடுத்து, இந்த ஆக்கத்தின் மிக முக்கியமான தலைப்பை நோக்கி.

ஐரோப்பிய உலகம், அமெரிக்கா, யூதர்கள் இவர்கள் இன்று உலக அரங்கில் மிக முக்கியமானவர்கள். இவர்களின் நலனுக்காக, இவர்களின் இருப்பை, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள். இவர்களை எதிர்ப்பவர்களை, இவர்களுக்கு எதிராக கருத்துக்கள், கோஷங்களை வெளியிடுகின்றவர்களை இவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள். அதுதொடர்பாக இவர்களின் திட்டங்கள் மிக விசாலமானது.

முதலில் தாங்களை எதிர்ப்பவர்களை, தங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றவர்களை, தட்டிக் கேட்பவர்களை விலை கொடுத்து வாங்க நினைப்பார்கள். அவர்கள் உடன்பட்டால் செல்வச் செழிப்பாக வாழ்வார்கள். மிகச் சிறந்தவர்களாக பெயர் பெறுவார்கள்.

உடன்படவில்லை என்றால் அவர்களை மிரட்டுவார்கள்; பயமுறுத்துவார்கள். உளவியல் போர் தொடுப்பார்கள். அவர்களை எப்படியாவது அடிபணிய வைக்க வேண்டும் என்பதே ஒரே நோக்கம். இதுதான் உஸ்மானிய கிலாபத்தில் நடந்தேறியது. அவர்கள் சரணடைந்ததன் பின்னால் கைவரிசையைக் காட்டினார்கள். அதனை மிகத் தெளிவாக பார்த்துவிட்டோம் ஆரம்ப வரிகளில்.

இவைகள் அனைத்துமே சரிவராவிட்டால் விலை கொடுத்து வாங்க முடியாது போனால், மிரட்டி அடிபணிய வைக்க முடியாது போனால், அடுத்ததாக நேரடியான போரில் குதிப்பார்கள். முழுநாட்டையும் தரைமட்டமாக்குவார்கள். தன் எதிரிகளை பகிரங்கமாக கொடூரமாக தண்டிப்பார்கள். ஏனெனில் தம்மைப் பற்றிய பயத்தை அனைவர் உள்ளங்களிலும் விதைப்பதும் தமது செல்வாக்கை தக்க வைப்பதுமே அவர்களின் நோக்கம். தங்களை எதிர்ப்பவர்களை இதன் மூலம் எச்சரிப்பார்கள்.

ஈராக்கில் இஸ்லாமிய பயங்கரவாதம்

அமெரிக்காவின் உற்ற நண்பனாக இருந்தவர் ஈராக்கின் ஜனாதிபதி சதாம் உசேன். பின்னாட்களில் அமெரிக்காவை எதிர்த்த ஒரே காரணத்தால் என்ன நடந்தது?
ஈராக்கில் உலகுக்கு அச்சுறுத்தலான அணுகுண்டு இருப்பதாகவும் அவற்றை இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் கூறிக்கொண்டு ஐ நா சபையின், உலக அரங்கின் அனைத்து எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது ஈராக்கிற்கு படையெடுத்தனர். ஈராக்கை முழுயையாக தரைமட்டமாக்கினர். பொருளாதாரத்தை சூறையாடினர். சொல்ல முடியாத அட்டூழியங்கள் அனைத்தையும் செய்து முடித்தார்கள். சதாம் உசேனை தூக்கிவிட்டு தமது ஆதிக்கத்தை மீண்டும் ஒரு முறை நிலை நிறுத்தினார். தமக்குத் தேவையானவர்களை ஆட்சியில் அமர்த்தினார்கள். இவை அனைத்தையும் செய்துவிட்டு இப்போது சொல்கிறார்கள் “ஈராக்கில் ஒன்றும் இல்லையாம்”

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் அமெரிக்கா கண்டு அச்சம்.

இதுதான் நடக்கிறது உலக அரங்கில். இரும்பு ரஷ்யாவை உருக்க நினைத்தார்கள். அதற்காக ஆப்கானிஸ்தானை பயன்படுத்தினார்கள். முழு ரஷ்யாவையும் துண்டுதுண்டாக சிதறடித்தார். தமது இலக்கை திட்டமிட்ட வகையில் அடைந்தார்கள். பின்னர் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க முனைந்தார்கள். ஆப்கான் மக்கள் இதை எதிர்த்ததால் உலகில் முதல்தர பயங்கரவாதியாக மாறினார்கள்.

செல்வச் செழிப்பில் வாழ்ந்த லிபியா, அதன் தலைவர் கடாபிக்கு என்ன நடந்தது?

அமைதியின் பூங்காவனம் சிரியா அதற்கு என்ன நடந்தது?

அரபுலகில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியை தமக்குத் தேவை போல் பயன்படுத்திக்கொண்டார்கள் இந்தக் குள்ள நரிகள். அதற்கு எம்மவர்களும் அறியாமையால் வால் பிடித்து திரிந்தார்கள் அரபுலகில் மக்கள் எழுச்சி என்று. அதன் விளைவை அந்த நாட்டு மக்கள் இன்றுவரை அனுபவிக்கிறார்கள். வறுமையின் உச்சம் தலைவிரித்தாடுகிறது அங்கே.

இஸ்லாமோஃபோபியா, இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதின் பின்னால் இருப்பவர்கள் யூதர்கள் என்பதில் சந்தேகமில்லை. பூவுலகிலிருந்து இஸ்லாத்தை துடைத்தெறிவதே இவர்களின் ஒரே நோக்கம். அது வரை உலகில் இஸ்லாமோபோபியா தொடரும்.

எகிப்தில் என்ன நடந்தது?

எகிப்தின் சர்வதிகாரி ஹுஸ்னி முபாரக் மக்கள் எழுச்சியின் ஊடாக தூக்கி எறியப்பட்டான். ஐரோப்பாவின் உயிர்நாடி “ஜனநாயகத்தின் ஊடாக” இக்வான்கள் அங்கு ஆட்சி பீடம் ஏறினார். விட்டுவிட்டார்களா இவர்கள்?

இஹ்வான்களின் பின்னணியை, தலைமைகளை மோப்பம் பிடித்து தேடினார்கள். பின் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேற்றப்பட்டது அமெரிக்கா இஸ்ரேலின் அனுசரணையுடன். இக்வான்கள் தேடித்தேடி வேட்டையாடப்பட்டனர். பின் அமெரிக்காவின் அடிமை, இஸ்ரேலின் செல்லப்பிராணி அப்துல் பதாஹ் அஸ் ஸிஸி ஜனாதிபதியானார்.

உஸ்மானிய கிலாபத் திட்டமிட்டு வீழ்த்தப்பட்ட தன் பின்னால் துருக்கி மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இஸ்லாமிய பின்புலத்தில் ஆட்சிக்கு வரும் அனைவரும் இராணுவத்தினால் ஆட்சி கவிழ்ப்பு மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைப்பதே அந்நாட்டின் வரலாறு. இந்தப் பின்னணியில் அர்துகான் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து துருக்கியில் ஒரு தசாப்தத்தை கடக்கின்றது. இவர்களுடைய ஆட்சி ஐரோப்பாவுக்கு பெறும் தலையணையாய் இருக்கின்றது. ஏனென்றால் இவர்களின் பின்புலத்தில் இஸ்லாம் வேரூன்றியுள்ளது. அண்மையில் அர்துகானின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான இராணுவ சதி முயற்சி நடந்தது. என்றாலும் மக்கள் எழுச்சியால் அது முறியடிக்கப்பட்டது. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனதாய் நிலை மாறியது.

இஸ்லாத்தில் பயங்கரவாதம் தீவிரவாதம் குறித்து பேசுவது என்றால் இவற்றையெல்லாம் சொல்லித்தான் ஆக வேண்டும்; நீங்களும் படித்தான் தீர வேண்டும்.

நாம் வரலாற்றை படிப்பது வருங்காலத்தை மிக அழகாக நம் கரங்களால் வரைவதற்கு தான் என்பதனை மனதில் மிக ஆழத்தில் விதையுங்கள். வேர்விட்டு வளரட்டும் நாளைய தலைமுறை கிளை பரப்பும் இந்த உம்மத் கனி பறிக்கட்டும் இன்ஷா அல்லாஹ்.

சரி இனி நேசம் கலந்த உங்கள் வாசிப்பை தொடருங்கள்.

இஸ்லாத்தில் தீவிரவாதம் – ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் இஸ்லாத்திற்கு எதிராய் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

இவர்களின் இஸ்லாத்திற்கு எதிராக திட்டமிடப்பட்ட செயற்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற செயற்திட்டங்கள் தொடர்பாக பார்த்தோம். தற்பொழுது நாம் இதுவரை பார்க்காத இதைவிட மிகப் பயங்கரமான அவர்களின் திட்டம் தொடர்பாக பார்க்கப்போகிறோம். அவர்களின் அந்தத் திட்டத்தில் எம் மத்தியில் இருக்கும் நல்லவர்களும் வல்லவர்களும் அறியாமையில் சிக்குகிறார்கள் அவர்களின் வலையில் வீழ்ந்து விடுகிறார்கள் என்றால் பாருங்களேன்.

இஸ்லாத்திற்கும் முஸ்லிம் உலகுக்கும் நடக்கும் அநியாயங்களை அட்டூழியங்களை கொடுமைகளை கண்டு அவற்றை சகிக்கமுடியாமல் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவற்றுக்கு எதிராய் கொதித்தெழும்புன்றவர்கள் எம் மத்தியில் இருக்கின்றனர். இவர்கள் இந்த சமூகத்தை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்ல வேண்டும் கஷ்டங்களில் துன்பங்களில் இருந்து மீட்டெடுக்கவேண்டும் இஸ்லாத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதித்திட்டங்களை துடைத்தெறிய வேண்டும். இஸ்லாத்தின் எதிரிகளை துவேசம் செய்ய வேண்டும். முஸ்லிம் உம்மாவை பாதுகாக்க வேண்டும் என்ற மிக உயர்ந்த நோக்கை கொண்டு செயற்படுகின்றனர். இன்னுமொரு வார்த்தையில் சொல்வதென்றால் இவர்கள் உணர்வுபூர்வமானவர்கள். உணர்வுரீதியாக வெகுசீக்கிரம் ஈர்க்கப்பட்டு விடுவார்கள்

உலகளாவிய முஸ்லிம் உம்மாவில் இவ்வாறானதோர் குழு இயங்குவதும் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு மிக ஆபத்து நிறைந்தது. ஏனென்றால் இவர்களின் உணர்வுகளுக்கு பின்னால் வேகமும் துணிவும் நிறைந்தே உள்ளது. ஆகவே இவர்களின் பின்னால் மக்கள் அணிதிரளவும் கை கோர்க்கவும் சவால்களை வெற்றி கொள்ளவும் மிக எளிதில் துணிந்து விடுவார்கள். ஆகவே இத்தகையவர்களை அமெரிக்காவும் யூதர்களும் மிக பயங்கரமாக கருதுகின்றனர்.

ஆகவே இஸ்லாமிய உலகில் இத்தகைய உணர்வு உள்ளவர்களை கண்டு கொள்ளவும் அவர்களை அடையாளப்படுத்தவும் அவர்களை ஒன்று கூட்டவும் அவர்களின் ஊடாகவே தமது ஏஜென்ட்களை முன்னெடுக்கவும் நடைமுறைப்படுத்தவும் தனியான திட்டம் இருக்கின்றது இவர்களிடம். எம்மில் இருக்கும் சிலர் இஸ்லாத்திற்காக என்ற போர்வையில் இவர்களின் வலையில் சிக்குகின்றனர் அந்த அளவுக்கு மூளைச் சலவை நடைபெறுகிறது அங்கே.

இப்போது புரியும் உங்களுக்கு இந்த ஐ எஸ் ஐ எஸ் யாரென்று. ஈராக்கில் பத்து வருடத்துக்கு மேல் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு. முழு ஈராக்கும் தரைமட்டமாக்கப்படுகின்றது. பின் ஈராக்கில் எந்த ஆயுதங்களும் இல்லையாம் என்று அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படுகிறது.

அடுத்தநாள் உலகின் மிகப்பெரிய பயங்கரவாதம் ஐஎஸ்ஐஎஸ் ஈராக்கில் தோற்றம் பெறுகின்றது. அதைக் கண்டு அமெரிக்கா ஜனாதிபதி அச்சமாம் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தி.

இதுதான் இஸ்லாமிய பயங்கரவாதம். தொடர்கிறது உலகில்.

உண்மையில் இஸ்லாமோஃபோபியா மிகப் பெரியதோர் சதித்திட்டம் அதற்காய் கோடிக் கணக்கான டொலர்கள் செலவழிக்கப்படுகிறது.

ஆகவே இஸ்லாத்தில் தீவிரவாதம் என்பது முஸ்லீம்களுக்கு மத்தியில் தீவிரவாதம் என்பது இல்லை. இவை அனைத்தும் இஸ்லாத்திற்கெதிராக அதன் வளர்ச்சிக்கு எதிராய் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரியதோர் சதித்திட்டம் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். ஆயினும் இதை அனைத்தையும் தாண்டி இஸ்லாம் வேர் விட்டு கிளை பரப்பிக் கொண்டுதான் இருக்கிறது.

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்

ஏப்ரல் 21 தாக்குதல் முழு இலங்கையும் அதிர வைத்துள்ளது. இத்தாக்குதலில் மிக அதிகமாய் உளரீதியாக பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே. வரலாற்றில் முஸ்லீம்கள் அமைதியானவர்கள் சார்ந்தமானவர்கள் தேசப்பற்று மிக்கவர்கள் என்று வர்ணிக்க பட்டுள்ளனர். இதுவே இன்று வரை இலங்கை முஸ்லிம்களின் வரலாறு ஆகும்.

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் எங்கிருந்து? தமிழ் விடுதலை புலிகள் அழிக்கப்பட்டு யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டது. அதற்குப்பின்னால் இந்த நாட்டில் அமைதி நிலவும் பிரச்சினைகள் அனைத்தும் சுமுகமாக தீர்க்கப்பட்டு சுபிட்சத்தை நோக்கி நாடு செல்லும் என நாம் அனைவரும் எதிர்பார்த்தோம்.

இந்நாட்டின் பெரும்பான்மை பேரினவாதிகள் பொறுத்தவரையில் தமிழர்களை இந்த நாட்டில் அடக்கி விட்டோம். அடிமைப் படுத்தி விட்டோம் அடுத்து இருப்பது முஸ்லிம்கள்தான் அவர்களையும் அடக்க வேண்டும். அடிமை படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் உள்ளங்களில் விஷமாய் நிரம்பியது. முஸ்லிம்களுக்கு எதிரான மிக மோசமான கருத்துக்கள் பேரினவாத மத குருக்களால் பகிரங்கமாக பேசப்பட்டது. இது தொடர்பில் எந்த சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அனுராதபுரத்தில் ஸியாரம் உடைப்பு தம்புள்ளை பள்ளிவாயல் உடைக்கப்பட்டது அனைத்துமே நடந்தேறியது. அரசாங்கம் மறைமுக ஆதரவு வழங்குகின்றதா? என்ற கேள்வி பாமரர்களையும் சிந்திக்க வைத்தது. அரச படைகள் வேடிக்கை பார்த்தது சட்டம் சாக்கடைக்கு சென்றது. இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்தது.

முஸ்லிம் சமூகத்தில் உணர்ச்சிவசப்பட்ட சில இளைஞர்கள் இனி அரசையும் நம்பிப் பயனில்லை சட்டமும் நமக்கில்லை பாதுகாப்பு படையும் எனக்கு எதிராகவே உள்ளது ஜமியத்துல் உலமாவும் இஸ்லாமிய இயக்கங்களும் இனித் தேவையில்லை. நாம் இந்த உம்மத்தை பாதுகாப்போம் அதற்காய் ஒன்றுபடுவோம் என்று உணர்ச்சிவசப்பட்டு உள்ளதனை எம்மால் உணரமுடிகின்றது. இதன் பின்னால் தான் அளுத்கமை திகனை அசம்பாவிதங்கள் அரங்கேறியது. ஆகவே இவை அனைத்தையும் பார்த்து விட்டு என்ன செய்வது என சிந்தித்த இவர்களுக்கு வன்முறை கலாச்சாரமே வழியாகத் தெரிந்தது. முல்லை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என நினைத்துள்ளார்கள்.

இஸ்லாத்திற்கெதிரான சர்வதேச திட்டமிடல் வலையமைப்பு இவர்களை மிகச்சரியாக இனம் கண்டு அடையாளப்படுத்தியுள்ளது. இவர்களை மூளைச்சலவை செய்து இவர்களை கொண்டே தமது ஏஜென்டாக்களை மேற்கொண்டுள்ளனர். அப்பாவிகளான இவ்விளைஞர்கள் இவர்களின் வழியில் சிக்கியுள்ளனர். ஏனென்றால் இவர்கள் அறிவை விட உணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுப்பவர்கள்.

இஸ்லாமோஃபோபியாவும் அரசியலும்

சில சிங்கள அரசியல்வாதிகள் தமது சுயநல அரசியலுக்காக இஸ்லாமோபோபியாவை முன்னெடுக்கின்றனர். விடுதலை புலிகள் இருக்கும் காலம் அவர்களை வைத்து வாக்குவங்கியை நிரப்பினார்கள். தற்பொழுது விடுதலைப் புலிகள் இல்லை அந்த இடத்தை இஸ்லாமோஃபோபியாவை வைத்து நிரப்ப நினைக்கின்றனர். இஸ்லாமோஃபோபியா உலகளாவிய ரீதியான திட்டமாக இருந்தாலும் இலங்கையில் சில மதவாதிகளும் அரசியல்வாதிகளும் தமது சுயநலத்துக்காய் அவற்றை முன்னெடுக்கின்றனர்.

இஸ்லாமோஃபோபியா அதனை இலங்கையில் முன்னெடுப்பதன் நோக்கம் குறித்து சமூகம் தெளிவு பெற வேண்டும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இல்லையேன்றால் வருங்கால வளமான இலங்கை கேள்விக்குறியே.

நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பகிர்வும் (share) இந்த சமூகத்தை மூடியிருக்கும் அறியாமை இருளை அகற்றி அக ஒளியேற்றி வையகம் ஒளிர வழி செய்கிறது என்பதே நன்றியுணர்வோடு நினைவு கூறுகின்றேன். ஜஸாக்கல்லாஹ் ஹைரன் இதுவரை நீங்கள் வழங்குகின்ற முழுமையான ஓத்துழைப்பிற்கு.

அஷ்ஷேக் ஸஹீம் கமால் (இர்பானி)
BA(SEUSL),dip in counseling (NISD)
Counselor
Mercy Education campus,
Founder
Students’ Research Forum
South Eastern University of Sri Lanka.

இஸ்லாம் அமைதியின் மார்க்கம், சமாதானத்தின் தூது, சாந்தியின் பிறப்பிடம் என்றுதான் இஸ்லாத்தை நம் முன்னோர் அறிந்திருந்தனர். இஸ்லாம் எங்கெல்லாம் வியாபிக்கின்றதோ அங்கெல்லாம் அமைதி குடிகொள்ளும், சமாதானம் நிலைபெறும், மக்களின் வாழ்க்கை சுபிட்சத்தை நோக்கி நடைபோடும்.…

இஸ்லாம் அமைதியின் மார்க்கம், சமாதானத்தின் தூது, சாந்தியின் பிறப்பிடம் என்றுதான் இஸ்லாத்தை நம் முன்னோர் அறிந்திருந்தனர். இஸ்லாம் எங்கெல்லாம் வியாபிக்கின்றதோ அங்கெல்லாம் அமைதி குடிகொள்ளும், சமாதானம் நிலைபெறும், மக்களின் வாழ்க்கை சுபிட்சத்தை நோக்கி நடைபோடும்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *