Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இஸ்லாத்தில் பெற்றோரின் சிறப்பு 

இஸ்லாத்தில் பெற்றோரின் சிறப்பு

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இஸ்லாம் பெற்றோர் தொடர்பில் அதிக முக்கியத்துவமும் சிறப்பும் அளித்து இருக்கின்றது. ஆல் குர்அனும் நபிமொழிகளும் இதனைத் தெளிவாக எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் ஒரு தடவை,

‘பெற்றோர்களுக்கு உதவி செய்யும் பிள்ளைகளுக்கு (எனது) வாழ்த்து உண்டாகட்டும் அவருடைய வயதை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக. ஆமீன்’ என்றும் (ஆதாரம் – புஹாரி),

மற்றொரு சந்தரப்பத்தில், ‘பெற்றோரின் பிரியத்தில் தான் அல்லாஹ்வின் பிரியமும் இருக்கிறது. பெற்றோரின் கோபத்தில் தான் அல்லாஹ்வின் கோபமும் இருக்கிறது’ என்றும் (ஆதாரம் – திர்மிதி),

அத்தோடு

‘பெற்றோரை (மனம் நோகச் செய்து) அழுது கண்ணீர் வடிக்கச் செய்வது பெரும் பாவம் ஆகும் – தண்டனைக்குரியதாகும் என்றும் (அதாரம் – புஹாரி) அன்னார் கூறியுள்ளார்கள்.

மேலும் அல் குர்ஆனில் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும்  அடுத்தபடியாக முன்னுரிமை கொடுக்கபடுவது பெற்றோர்களுக்கு தான். அத்தகைய பெற்றோரின் பொருத்தம் இல்லாமல் சுவனத்தின் வாசல் திறக்கபடாது .

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் மனிதர் ஒருவர் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் மீது தாய் – தந்தையருக்குரிய உரிமைகள் என்ன? எனக்கேட்டார். அதற்கு அன்னார், ‘தாய் தந்தையரே உம்முடைய சுவனம் ஆவார்கள். அவர்களே உம்முடைய நரகமும் ஆவார்கள்’ என்று கூறியதாக அபூ உமாமா (ரலி) அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் : இப்னு மாஜா)

இந்த நபி மொழிகளும் பெற்றோரின் சிறப்பையும் மகத்துவத்தையும் எடுத்துக் காட்டக்கூடியதாக உள்ளன. அதனால் அவர்கள் உண்மையான மன மகிழ்ச்சி மிக்கவர்களாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அது ஒவ்வொரு பிள்ளையினதும் பொறுப்பு என்பதை இந்நபி மொழிகள் தெளிவுபடுத்திக்கொண்டிருக்கின்றன.

மேலும் நபி (ஸல்) அவர்களிடம் மனிதரொருவர் ஒருமுறை வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! என் அழகிய நட்புக்கு மனிதர்களில் அதிக தகுதியுடையவர் யார்?’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘உன் தாய்’ என்று கூறினார்கள். அதன் பின்னர் ‘யார்?’ என அம்மனிதர் கேட்டார். அப்போதும் அன்னார் ‘உன் தாய்’ என்றார்கள். அதனைத் தொடர்ந்து அம்மனிதர் மீண்டும் மூன்றாவது தடவையாகவும் ‘யார்?’ எனக் கேட்டார். அதற்கும் அன்னார் ‘உன் தாயே!’ என்றார்கள். எனினும் அம்மனிதர் நான்காவது தடவையாக ‘யார்?’ என வினவினார். அப்போது ‘உனது தந்தை’ என்றார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.(ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

இவை இவ்வாறிருக்க நபி (ஸல்) அவர்கள், இறந்து விட்ட தம் பெற்றோருக்காகப் பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டிய பணிகளையும் கூட சொல்லி வைத்துள்ளார்கள். இதன்படி பெற்றோர் விவகாரத்தில் இஸ்லாம் எவ்வளவு தூரம் கரிசனை காட்டியுள்ளது என்பது நன்கு தெளிவாகின்றது.

ஒருமுறை மனிதர் ஒருவர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘எனது பெற்றோர் இறந்து விட்டால் அவர்களுக்கு உபகாரம் செய்தல் என்று ஒரு விடயம் உள்ளதா?’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்’ எனக் கூறிவிட்டு பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டார்கள். ‘அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தல்,  அவர்களுக்காகப் பாவமன்னிப்பு கோருதல்,  அவர்கள் செய்துகொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுதல், அவர்கள் மூலமான உறவுகளைச் சேர்த்து நடத்தல், அவர்களது நண்பர்களைக் கெளரவப்படுத்தல் என்று கூறினார்கள். (ஆதாரம் : அபூதாவுத்)

என்றாலும் அல்-குர் ஆனும், ஸுன்னாவும் பெற்றோருக்கு அளித்துள்ள இந்த மகத்துவத்தையும், சிறப்பையும் இன்றைய கால கட்டத்தில் அறியாதவர்களாகவே பெரும்பாலானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அறிந்திருக்கும் சிலரோ அவற்றைப் பொருட்படுத்தாது நடந்து கொள்ளுகின்றனர். இதனை அவர்களது நடத்தைகளும், செயற்பாடுகளும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இதேவேளை யமன் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்த போது ‘யமன் நாட்டில் உமக்கு உறவினர்கள் எவராவது இருக்கின்றாரா?’ என நபிகளார் வினவினார்கள். அப்போது அந்நபர் ‘ஆம்.  எனக்கு பெற்றோர் இருக்கின்றனர்’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘நீர் இங்கு வருவதற்கு அவர்கள் அனுமதி வழங்கினாரா?’ எனக்கேட்டார். அச்சமயம் அந்நபர், ‘இல்லை. நான் அனுமதி கேட்கவில்லையே!’  என்றார். அப்படியென்றால் நீர் திரும்பிச் செல்லும். இங்கு வரவென அவர்களிடம் (பெற்றோர்) அனுமதி கேளும். அவர்கள் அனுமதி அளித்தால் இங்கு வந்து இறைவழியில் பணியாற்றுதலில் கலந்துகொள்ளலாம். இல்லையெனில் அவர்களுக்குச் சேவை புரிந்த வண்ணம் இருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வீராக! எனக் கூறி அனுப்பியதாக அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் : அபூதாவூத்)

மேற்சொன்ன நபி மொழிகளைப் பொதுவாக எடுத்து பார்த்தால் பெற்றோருக்கு பணிவிடை செய்வதானது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல்களில் ஒன்றாக விளங்குவதைக் காணக்கூடியதாகவுள்ளது. அதேநேரம் அது இறைவழியில் போராடுதல், ஹிஜ்ரத் செய்தல் போன்ற நற்காரியங்களை விடவும் மேலான ஒன்றாகவும் விளங்குகின்றது. நபி (ஸல்) அவர்கள், ‘வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ, அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் சுவனம் செல்லாமல் போய் விட்ட மனிதன் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக. ‘ என்று சபித்துள்ளார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

ஆகவே பெற்றோருக்கு இஸ்லாம் அளித்துள்ள சிறப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அதற்கேற்ப செயற்படுவது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். அதன் ஊடாக இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அன்பையும் கருணையையும் பெற்றுக்கொள்ளலாம். TK

இஸ்லாம் பெற்றோர் தொடர்பில் அதிக முக்கியத்துவமும் சிறப்பும் அளித்து இருக்கின்றது. ஆல் குர்அனும் நபிமொழிகளும் இதனைத் தெளிவாக எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் ஒரு தடவை, ‘பெற்றோர்களுக்கு உதவி செய்யும் பிள்ளைகளுக்கு…

இஸ்லாம் பெற்றோர் தொடர்பில் அதிக முக்கியத்துவமும் சிறப்பும் அளித்து இருக்கின்றது. ஆல் குர்அனும் நபிமொழிகளும் இதனைத் தெளிவாக எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் ஒரு தடவை, ‘பெற்றோர்களுக்கு உதவி செய்யும் பிள்ளைகளுக்கு…