இஸ்லாமிய புது வருடம் இன்று – ஹிஜ்ரி 1443 

  • 8

இஸ்லாமிய புதுவருடமான ஹிஜ்ரி 1443 வருடத்தின் முதலாம் மாதமான முஹர்ரம் மாதம் இன்று (10) ஆரம்பமாகின்றது.

ஹிஜ்ரி 1443 முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று (09) மாலை மஃரிப் தொழுகைக்குப் பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால் துல் ஹிஜ்ஜா (துல் ஹஜ் மாதத்தை) மாதத்தை இன்று செவ்வாய்க்கிழமை முப்பதாக பூர்த்தி செய்து இன்று 10ஆம் திகதி மாலை புனித முஹர்ரம் மாதத்திற்கான முதல் நாள் ஆரம்பமாவதாக பிறைக் குழு ஏகமனதாக தீர்மானித்து உத்தியோகபூர்வமாக இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு அறிவித்துள்ளது.

இதில், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிறைபார்க்கும் மாநாட்டில் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை அங்கத்தவர்கள், பிறைக்குழு அங்கத்தவர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் அலா அஹமட் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், ஏனைய பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், பெரிய பள்ளிவாசலின் நிருவாக சபை உறுப்பினர் தௌபீக் உள்ளிட்ட பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி தஸ்லீம் பிறை தொடர்பான அறிவித்தலை வழங்கினார்.

இஸ்லாமிய புதுவருடமான ஹிஜ்ரி 1443 வருடத்தின் முதலாம் மாதமான முஹர்ரம் மாதம் இன்று (10) ஆரம்பமாகின்றது. ஹிஜ்ரி 1443 முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று (09) மாலை மஃரிப் தொழுகைக்குப் பிறகு…

இஸ்லாமிய புதுவருடமான ஹிஜ்ரி 1443 வருடத்தின் முதலாம் மாதமான முஹர்ரம் மாதம் இன்று (10) ஆரம்பமாகின்றது. ஹிஜ்ரி 1443 முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று (09) மாலை மஃரிப் தொழுகைக்குப் பிறகு…