ஈத் முபாரக் வாழ்த்துக்கள்

  • 8

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ரமழான் பல சோதனைகளுடன் எம்மை வந்தடைந்து பல படிப்பினைகளை நமக்கு கற்றுதந்து தற்போது விடைபெற்றுச் சென்றுள்ளது.

நாம் இறையச்சமுள்ள அடியார்களாக மாறுவதற்கு பல படிப்பினைகளை இந்த ரமழான் நமக்கு கற்பித்துவிட்டு தற்போது விடைபெற்று சென்றுள்ளது. குறிப்பாக நாம் நோன்பு, இரவுத் தொழுகை, குர்ஆன் திலாவத் என்பவற்றின் ஊடாக இறையச்சமுள்ள அடியார்களாக மாறுவதற்கு இவற்றை ரமழானில் தொடராக செய்து வந்தோம். இறைவனுக்கும் அடியானுக்கும் இடையிலான உறவை அதிகரிக்கும் இந்நல்லமல்களை ரமழான் அல்லாத காலங்களிலும் ஸூன்னத்தான முறையில் செய்வதற்கு முயற்சி எடுப்போம்.

பல்லின மக்கள் வாழும் நாடொன்றுல் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் சமுக வாழ்வுக்கும் பல பாடங்களை ரமழான் கற்பித்துவிட்டு விடைபெற்றுள்ளது. குறிப்பாக நமக்கு இலங்கையில் வாழும் சகோதர இனமக்கள் இந்த ரமழானில் நம்மை நோக்கி தாக்கிய போது திருப்பித் தாக்காமல் பொறுமையுடன் இருந்து அவர்களின் வெஸாக் பண்டிகையை கொண்டாட உதவி செய்தோம்.

அவ்வாறே இறுதிப் பகுதியில் முஸ்லிம்களில் மூவருக்கு பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்தபோது அனைத்து பாரளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை கட்சி பேதமின்றி முஸ்லிம் சமுகத்தின் நலனுக்காக விட்டுக் கொடுத்து ரமழானில் உலகிற்கே நமது ஒற்றுமையை நிரூபித்தோம்.

இதனால் சோதனைகளுடனும் பயத்துடனும் நம்மை நோக்கி வந்த ரமழான் இறுதியாக நமக்கு இறையச்சம், பொறுமை, இனமதபேதமின்றி உதவுதல், ஓற்றுமை என பல படிப்பினைகளை கற்பித்து விடை பெறுகின்றது. கற்ற பாடங்களை  நமது வாழ்வில் நடைமுறைப்படுத்தி இம்மை மறுமையில் வெற்றிபெற முயற்சிப்போம்.

உங்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்!
ஈத் முபாரக்!
ஈத் முபாரக்!
ஈத் முபாரக்!
தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!

Ibnuasad

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ரமழான் பல சோதனைகளுடன் எம்மை வந்தடைந்து பல படிப்பினைகளை நமக்கு கற்றுதந்து தற்போது விடைபெற்றுச் சென்றுள்ளது. நாம்…

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ரமழான் பல சோதனைகளுடன் எம்மை வந்தடைந்து பல படிப்பினைகளை நமக்கு கற்றுதந்து தற்போது விடைபெற்றுச் சென்றுள்ளது. நாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *