Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஈரானுக்கு சரியான பதிலடி கொடுத்த இஸ்ரேல்!… வரிசையாக ஏவுகணைகளை வீசி தாக்குதல்! 

ஈரானுக்கு சரியான பதிலடி கொடுத்த இஸ்ரேல்!… வரிசையாக ஏவுகணைகளை வீசி தாக்குதல்!

  • 2

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

Israel launches missiles: ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணத்தில் வரிசையாக ஏவுகணை வீசி இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்திய காட்சிகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலியப் படைகள் கடந்த சில மாதம் முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. அங்கு உள்ள ஓடுபாதைகளை சேதப்படுத்தியதாகவும், இரண்டு குடியிருப்புகள் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியது.

ஈரானிய இராணுவத் தளபதிகள் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரக வளாகத்திற்குள் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டுவது பாதுகாப்பானது என்று நினைத்து அங்கே கூட்டம் நடத்திக் கொண்டு இருந்தனர். , சர்வதேச விதிமுறைகளின் படி தூதரகங்களை தாக்க கூடாது. இதனால் அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. ஆனால் சர்வதேச யுஎன் விதிகளை மீறி தூதரக வளாகத்தின் மீது வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டது. இதில் ஏழு ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளின் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி கொல்லப்பட்டார். இவர் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த தளபதி ஆவார்.

இந்த தாக்குதலுக்குத்தான் தற்போது ஈரான் பதிலடி கொடுத்தது. 200 ஏவுகணைகளை டிரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் மீது ஈரான் ஏவி உள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்ட ஈரானிய ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இதனை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து தாக்கியதாகவும் கூறியது.

Israel carried out strikes on Iran, explosions were reportedly heard in the cities of Tehran, Isfahan, and Shiraz according to media reports. Explosions were also reported in Syria an Iraq, media reported.

An explosion in Iran’s Isfahan was heard near the airport and the 8th… pic.twitter.com/XgwafZ8e1q

— Sputnik (@SputnikInt) April 19, 2024

இந்தநிலையில் ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணத்தில் வரிசையாக ஏவுகணை வீசி இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்திய காட்சிகள் பதிவாகியுள்ளன. ஈரானுக்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார். – ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் இஸ்பஹானில் வெடித்ததை உறுதிப்படுத்துகின்றன – ஈரானிய வான்வெளியின் முக்கிய பகுதிகள் மூடப்பட்டு உள்ளன. இந்த பதிலடி மோசமாக இருக்கும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமோ என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது.

தெஹ்ரான், இஸ்பஹான் மற்றும் ஷிராஸ் நகரங்களில் வெடிப்புகள் கேட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சிரியா மற்றும் ஈராக்கிலும் குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் இஸ்பஹானில் வெடிக்கும் சத்தம் விமான நிலையம் மற்றும் 8வது ராணுவ விமானப்படை தளம் அருகே கேட்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானிய வான் பாதுகாப்புப் படைகள் இஸ்பஹான் நகரின் மீது வானத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலை முறியடித்ததாக மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிலடி தாக்குதலை தொடர்ந்து ஈரானிய அதிகாரிகள் தெஹ்ரான், இஸ்பஹான் மற்றும் ஷிராஸ் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களை தற்காலிகமாக ரத்து செய்தனர்.

Readmore: வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு செல்ல இலவச வாகனம்..!! இந்த நம்பருக்கு ஒரு ஃபோன் பண்ணா போதும்..!!

The post ஈரானுக்கு சரியான பதிலடி கொடுத்த இஸ்ரேல்!… வரிசையாக ஏவுகணைகளை வீசி தாக்குதல்! appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” Israel launches missiles: ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணத்தில் வரிசையாக ஏவுகணை வீசி இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்திய காட்சிகள் பதிவாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 1ம் தேதி…

[[{“value”:” Israel launches missiles: ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணத்தில் வரிசையாக ஏவுகணை வீசி இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்திய காட்சிகள் பதிவாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 1ம் தேதி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *