Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
உணர்ந்து வாழ்.... 

உணர்ந்து வாழ்….

  • 18

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நம்மை விட ஏதோ ஒரு வகையில் சிறந்தவர்கள் என்னும் பக்குவம் இருந்தால் போதும் சந்திக்கும் எல்லா மனிதர்களிடம் இருந்தும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். எந்த நிலையிலும் உனது மனதிடத்தை நீ இழந்து விடாதே உனக்கு நீ உண்மையாக இரு நீ ஒரு தனித்துவமான மனிதன் உனக்கென்று இவ்வுலகில் ஒரு பெறுமதி இருக்கின்றது, அதை நீ உணர்ந்துகொள்.

உனக்கு இறைவன் என்ன பலன்களை நன்மைகளை வைத்திருக்கின்றான் என்பதைத் தேடு, மாறாக உன் பலவீனங்களை நினைத்து வருத்தம் கொள்ளாதே. நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே உன்னை நீ நேசி. சகலரிடமும் அன்பாக இரு. நற்குணங்களைக் கொண்டு உன்னை நீ அழகாக்கிக் கொள். வாழ்க்கையை அழகாக வாழ். உனது வாழ்க்கை எனும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை நீயே உன் சக்தியையும் படைத்தவனின் அருளையும் கொண்டு செதுக்கு.

நீ வாழும் வாழ்க்கை கோடிக் கணக்கானவர்களின் கனவு வாழ்க்கை என்பதை உணர்ந்தால் போதும் வாழ்வின் ஒரு வினாடியையும் வீணாக செலவு செய்ய மாட்டாய். எல்லாவற்றிற்கும் முறையிட்டுக்கொண்டும் முரண்பட்டுக்கொண்டும்  இருக்காதே மனதில் நிம்மதி இருக்காது. மாறாக வாழ்வின் சின்ன சின்ன அருள்களைக் கூட இரசரித்து அதற்காக நன்றி உணர்வோடு  வாழ். வாழும் நாட்கள் அழகாக நகரும் . கொஞ்சம் நீ இருக்கும் வட்டத்தை விட்டு வெளியே வந்து பார் எத்தனை போராட்டம் எத்தனை ஏமாற்றம், எதிர்ப்பு  இன்னும் எத்தனை எத்தனையோ பழிவாங்கல், பொய், பொறாமை, துரோகம் என்று பல போராட்டத்தின் மத்தியில் பலர் வாழ்க்கையை  நகர்த்திக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது தெரியும்.

உனக்கு எதிலும் இறைவன் குறை வைக்கவில்லை இதுவரை கிடைத்த, நடந்த அனைத்துமே மிகச் சரியாக வே அமைந்துள்ளது. இனி கிடைக்க இருப்பதும் நடக்க இருப்பதும் மிக மிக சரியாக அமையும் . நல்ல தே செய்; நல்லதையே பெறுவாய். மலர்ந்த முகத்துடன் இரு, மகிழ்ந்த மனதுடன் இரு நற்பண்புகள் நிறைந்த செயல்களை செய் எங்கு சென்றாலும் வரவேற்கப்படுவாய் எதை செய்தாலும் வெற்றி பெறுவாய். உன் வாழ்க்கை உனக்கு கிடைத்த  விலை மதிப்பில்லாத செத்து அதன் பெறுமதியை உணர்ந்து செலவு செய்.

 Jaazira Junaideen
UOC,FOT

நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நம்மை விட ஏதோ ஒரு வகையில் சிறந்தவர்கள் என்னும் பக்குவம் இருந்தால் போதும் சந்திக்கும் எல்லா மனிதர்களிடம் இருந்தும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். எந்த நிலையிலும் உனது மனதிடத்தை நீ…

நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நம்மை விட ஏதோ ஒரு வகையில் சிறந்தவர்கள் என்னும் பக்குவம் இருந்தால் போதும் சந்திக்கும் எல்லா மனிதர்களிடம் இருந்தும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். எந்த நிலையிலும் உனது மனதிடத்தை நீ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *