Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
உண்மையான காதல் 

உண்மையான காதல்

  • 4

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
திருமணம் முடித்தவர்களுக்கும் முடிக்க இருப்பவர்களுக்கும் சமர்ப்பணம்.

“இன்று எத்தனையோ கணவன் மனைவிமார்களை பார்த்தால் ஏதோ கடமைக்கு திருமணம் முடித்தாற்போல் வாழ்கிறார்கள். ” ஆசை அறுபது நாள்! மோகம் முப்பது நாள் என்பதுபோல் ஆரம்பத்தில் இனிக்கும் கணவன் – மனைவி உறவுகள் பிற்காலத்தில் விரிசல் காணுகிறது. ஏன்?

எந்த ஒரு பொருளும் நம் கையில் இருக்கும்போது அதன் அருமை நமக்கு தெரிவதில்லை. அது பிரிந்த பின்னர்தான் நாம் அதனை இழந்துவிட்டதாக உணர்கிறோம். மனிதன் அவ்வாறுதான் படைக்கப்பட்டுள்ளான். அவனது மனம் ஒரு குரங்கு என்பர். ஏனெனில் அது அங்கும் இங்கும் தாவி தாவி இருக்கும் என்பதால். அதேபோன்றுதான், ஒரு மனைவியும். இருக்கும்போது அவளது அன்பு, அவளது பரிவு, அவள் படும் கஷ்டங்கள் எதுவும் பலருக்கு புரிவதில்லை. அவள் இறந்த பின்னர்தான் அவளது அருமை தெரிகிறது.

வெறும் கற்பனையாக சினிமாக்களில் காட்சிப்படுத்தப்படும் காதலன், காதலி, கணவன், மனைவிகள் அன்பை, பரிமாறும் காட்சிகளை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் நபி(ஸல்) அவர்கள் குடும்ப வாழ்க்கையில் எவ்வாறு வாழ்ந்தார்கள்? எப்படியெல்லாம் சொன்னார்கள் என்று அறிந்திருக்கிறோம்? இல்லை என்பதே உண்மை.

“எனவே கணவன் மனைவிக்கிடையில் அன்பை ஏற்படுத்த நமக்கு விளங்கும் வார்த்தையான (romance) எப்படியெல்லாம் நபி(ஸல்) கூறியுள்ளார்கள் என்று பார்ப்போம்.”

“உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் நற்பண்பால் மிகச் சிறந்தவரே” (திர்மதி)

“இறைவனின் திருப்தியை மட்டுமே நாடி நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் நற்கூலி வழங்கப்படுவீர்கள். உங்களது மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் உணவு உட்பட”(புஹாரி)

“மனைவியின் முகத்தை புன்முறுவலுடன் பார்த்தல் எவ்வளவு அழகான ஒரு முறை” (ஸஹீஹ் அத் திர்மிதி 1956)

“நம்மில் பலர் செய்வதற்கு வெட்கப்படுவது மனைவிக்கு உணவை ஊட்டி விடுவது.இது இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்தும் அல்லவா!!!” (புஹாரி / முஸ்லிம்)

“அவள் வாய்வைத்து குடித்த பகுதியில் இருந்து நாம் அருந்துவது.” (முஸ்லிம் )

ஆயிஷா (ரலி) நபி(ஸல்) அவர்கள் வாய்வைத்த இடத்தில் வாய்வைத்து குடிப்பார்கள், சாப்பிடுவார்கள். இதுவல்லவா? உண்மையான அன்பை எடுத்துக் காட்டுவது.

“கொஞ்ச நேரம் மனைவியின் மடியில் சாய்வதில் என்ன தயக்கம்!! “உங்களை குழந்தை போல எண்ணுவாள்.” (புஹாரி / முஸ்லிம் )

ஒவ்வொரு பெண்ணும் சிறு குழந்தை போல் காணப்படுவாள். எனவே அவளை மகிழ்விப்பது, அவளுடன் கொஞ்சி குழாவுவதில் என்ன குறை ஏற்படும் அது அவளுக்கு பணம் கொடுத்தாலும் வராத சந்தோஷத்தை ஏற்படுத்தும். வீட்டு வேலைகளில் அவளுக்கு துனையாக இருப்பது. (அல் அதபுல் முப்ரத் 4996 )

அவள் மட்டுமா உனக்காக அலங்கரித்து இருக்க வேண்டும் அவளுக்காக நாமும் அலங்கரித்து மணம் பூசிக்கொள்ளவேண்டும். அவளுக்கு விருப்பமான பெயர்களைக் கொண்டு அவளை அழைப்பது. நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா ரழியை (அய்ஷ்) என்று செல்ல பெயர் கொண்டு அழைப்பார்கள்.’ (புஹாரி / முஸ்லிம் )

‘அவளிடம் குறையைக் கண்டால், காணதவன் போல நடந்து கொள்வது. ஏனெனில் பரிபூரணத்தை நீ தேடினால் நேசத்தை தேடவில்லை என்று பொருள் ஏனெனில் குறைகளை காதலிப்பதில் மறைந்து இருக்கிறது நேசத்தின் அற்புதம்.’

‘இயற்கையிலே பெண்களுக்கு காணப்படுவது தான் பிடிவாதம் எனவே பிடிவாதத்தை சகித்துக் கொள்ளல். புரிந்துணர்வை அதிகரிக்கும்’.

அதிகமான ஆண்கள் தவறு செய்யும் ஒரு விடயம் தான் சமைத்த சாப்பாட்டில் குறைசொல்வது இது இன்னும் அதிகமான கவலைகளை ஏற்படுத்த காரணமாக அமையும் எனவே அவள் சமைத்த சாப்பாட்டை குறை கூறாமல் இருப்பது. (புஹாரி )

ஏன் கணவன் மனைவிக்கிடையில் நன்றிபாராட்டக்கூடாதா? பரிசுகளை பரிமாறக்கூடாதா? இதுவெல்லாம் மறந்து வாழ்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயம்.

நாம் வெளியில் செல்லும் போது அவளை முத்தமிடுவது. வீட்டிற்குள் நுழையும்போதும் முத்தமிடல் நபி ஸல் வுழுவுடன் இருக்கும் போதே முத்தமிட்டுசெல்வார் எவ்வளவு அழகான வாழ்க்கை வாழ்ந்துள்ளார் என்பதை பார்க்கலாம். (அபூ தாவூத் )

அவளுக்காக நேரத்தை ஒதுக்குதல், அன்பு வார்த்தைகளை பரிமாறுதல், வெளிஇடங்களுக்கு அழைத்துச்செல்லுதல் வாழ்க்கை அழகானது. எப்படி வாழ்தல் என்பதிலே தங்கியுள்ளது.’

“இவை எல்லாம் எவ்வளவு அழகான கருத்துக்கள். நபிகள் ஸல் அவர்களின் அழகிய வழிமுறைகள். “அன்னவர்கள் தம் மனைவியரிடத்திலே எவ்வளவு அன்போடும் கண்ணியத்தோடும் பரிவோடும் பொறுப்போடும் நடந்துக்கொண்டார்கள் என்பதை சரித்திரத்தை வாசித்தால் நன்கு புரியும். அவர்கள் உயிரோடு வாழ்ந்தபோதும் உயிர் நீத்த மனைவிகளுக்கும் அழியாத தாஜ்மஹால்கள் கட்டினார்கள். அதனால்தான் அவை இன்றும் வரலாறுகளில் பேசப்படுகின்றன.

“இருபத்தி ஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மீது அவர்கள் கொண்ட காதலுக்கு நிகர் எதுவுமில்லை.”

அவர்களின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலத்திற்கு பின்பும் அன்னையாரின் நினைவிலே அவர்கள் வாழ்ந்தார்கள் என்றால் மனைவியை உண்மையாக எந்தளவுக்கு அவர்கள் காதலித்து உள்ளார்கள் என்பது விளங்கும். இதில் ஒரு அபூர்வ விடயம் என்னவென்றால் அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களோ நபிஸல் அவர்களை விட வயதில் மூத்தவர்களாக இருந்தார்கள். திருமணத்தின் போது நபிஸல் அவர்களுக்கு வயது 25 அன்னையருக்கோ வயது 40. உண்மையான காதலுக்கு வயதெல்லை இல்லை என்பதை இந்த பரிசுத்த தம்பதிகள் நிரூபித்துள்ளார்கள்.

“தன் பரிசுத்த மனைவி மீது நபிஸல் அவர்கள் தங்களின் உண்மையான காதலை வைத்திருந்ததற்கு இந்த சான்றே போதுமானது.”

‘அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்’: “நான் கதீஜாவை பார்த்ததில்லை. ஆனால், கதீஜாவின் மீது பொறாமை கொண்டது போல் வேறு யார் மீதும் பொறாமை கொண்டதில்லை. இதற்கு காரணம் என்ன? நபிஸல் அவர்கள் அடிக்கடி கதீஜாவை நினைத்துக் கொண்டு இருந்ததனால் தான். ஒருமுறை இதுபற்றி நபிஸல் அவர்களிடம் மனம் வருந்தும்படி பேசினேன். எனினும், “இறைவன் கதீஜாவின் அன்பை என் மனதில் பதிய வைத்து விட்டான்” என்று நபிஸல் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) ஸுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட தூய காதல்.
‘இவ்வாறு ஒவ்வொரு தம்பதிகளும் வாழ்ந்தாலே விவாகரத்துகள் இல்லாமல் போய்விடும்.:

“எனவே செயற்படுங்கள். தாமதம் வேண்டாம். உலகத்திலே Mini சுவர்க்கத்தை வாழலாம்”.

Faslan Hashim
Islahiyya Arabic collage ®
South Eastern University of Sri Lanka.
BA ®

திருமணம் முடித்தவர்களுக்கும் முடிக்க இருப்பவர்களுக்கும் சமர்ப்பணம். “இன்று எத்தனையோ கணவன் மனைவிமார்களை பார்த்தால் ஏதோ கடமைக்கு திருமணம் முடித்தாற்போல் வாழ்கிறார்கள். ” ஆசை அறுபது நாள்! மோகம் முப்பது நாள் என்பதுபோல் ஆரம்பத்தில் இனிக்கும்…

திருமணம் முடித்தவர்களுக்கும் முடிக்க இருப்பவர்களுக்கும் சமர்ப்பணம். “இன்று எத்தனையோ கணவன் மனைவிமார்களை பார்த்தால் ஏதோ கடமைக்கு திருமணம் முடித்தாற்போல் வாழ்கிறார்கள். ” ஆசை அறுபது நாள்! மோகம் முப்பது நாள் என்பதுபோல் ஆரம்பத்தில் இனிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *