Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
உதய கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை தோற்கடிப்பு 

உதய கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை தோற்கடிப்பு

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக, வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் 91 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும் அதனை எதிர்த்து 152 வாக்குகளும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கு எரிபொருளின் விலைகளை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என்பதனையும் எதிர்க்கட்சியினர் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (20) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாரேனும் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர வேண்டுமென்றால் குற்றச்சாட்டுகள் இருக்கவேண்டும். ஆனால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இல்லை. இதனால்தான் நான் ஆரம்பத்திலேயே இதனை சிறுபிள்ளையின் கடிதம் போன்றது என்றேன் என்றார்.

முதலாவது குற்றச்சாட்டில் நான் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். எரிபொருள் விலை அதிகரிப்பை அமைச்சர் செய்ததில்லை. அடுத்தக் குற்றச்சாட்டில் அடிப்படை முறைமையை பின்பற்றவில்லை என்று கூறியுள்ளனர்.

ஆனால் அவர்கள் அரசியலமைப்பை சரியாக படிக்கவில்லை என்றே கூற வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து எரிபொருள் விலை குறைப்பின் நன்மையை மக்களுக்கு வழங்குவதாக கூறியதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் நான் எங்கேயும் அப்படி கூறியதில்லை.

நாங்கள் 21 மாதங்களின் பின்னரே எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளோம்.

நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தவர்களால் இதுவரையில் எரிபொருள் விலையேற்றத்தை தவிர்க்க மாற்று வழியை முன்வைக்கவில்லை. இதனால் அரசாங்கத்திற்கும் விலை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என்பதனையும் எதிர்க்கட்சியினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக, வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் 91 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன்போது இடம்பெற்ற வாக்கெடுப்பில்…

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக, வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் 91 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன்போது இடம்பெற்ற வாக்கெடுப்பில்…