Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
உயிர் கொள்ளும் கொரோனாவும் மக்களின் அலட்சிய போக்கும் 

உயிர் கொள்ளும் கொரோனாவும் மக்களின் அலட்சிய போக்கும்

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
  1. 2020 ம்  ஆண்டின் ஆரம்பம்.
  2. கொரோனாவின்  ஆரம்பம்.
  3. கொரோனா என்றால் என்ன?
  4. வைரஸ் பரவும் விதம்.
  5. வைரஸ் யாரை தாக்கும்.
  6. கொரோனாவில் இருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறுவது?
  7. வைரஸ் ஓர் இஸ்லாமிய பார்வை.

2020 ம்  ஆண்டின் ஆரம்பம்.

ஒவ்வொரு புத்தாண்டையும் மக்கள் எதிர்பார்த்து பல திட்டங்களை வகுத்து செயற்பட்டு கொண்டிருக்கும் போது இறைவனின் திட்டம் வேறுவிதமாக இருக்கின்றது.

2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவில் காட்டு தீ பரவியது. 2019 செப்டம்பரில் இருந்து 2020 மார்ச் வரையில் 18.6 மில்லியன் ஹெக்டயர் (46 மில்லியன் ஏக்கர்) நிலம் தீக்கிறையானது. 34 உயிர் பலி 5900 கட்டிடங்கள் (2779 வீடுகள் உட்பட) ஒருபில்லியன் மிருகங்கள் மொத்தமாக தீக்கிறயானது.

ஜனவரி ஆரம்பத்தில் அமெரிக்கா ஈரான் இராணுவ தளபதி “சுலைமானியை” ஐ தமது பாதுகாப்பு கருதி திட்டமிட்டு கொலை செய்தனர். இதற்கு பதிலடியாக ஈராகில் இருக்கும் அமெரிக்கா தளங்களை இலக்கு வைத்து ஈரான் ஏவுகனைத் தாக்குதல்களை  செய்தது. இரண்டு நாடுகளுமே அணு ஆயுதங்களை தன்னகத்தே வைத்துகொண்டு நான் தான் பெரியவன் என்று மாரடித்து கொண்டிருக்கும் தருணத்தில் இப்படி ஒரு பிரச்சினை முடிவுக்கு வந்தது.

வெனிஸ் நகரம் வெள்ளத்தால் மூழ்கியது. ஜனவரியில் இருந்து தொடர்ந்து 2 மாத காலமாக வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானது. இதனால் மொத்தமாக ஒரு பில்லியன் யூரோவிற்கும் (850 மில்லியன்) அதிகமாக சேதம் ஏட்பட்டுள்ளதாக அந்த நகரத்தின் மேயர்தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் 4 ஆந் திகதி பெய்ரூட்டில் ஏட்பட்ட களஞ்சிய சாலை வெடிப்பில் சுமார் 200 பேர் இறந்தனர். 5,000 பேர் காயமடைத்தனர். லெபனான் நாட்டு அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு ஈடு கொடுக்க முடியாமல் இராஜினாமா செய்துகொண்டது.

ஏலவே ஏட்பட்ட பாதிப்புக்கள், பிரச்சினைகள், எச்சரிக்கைகளுக்கு ஏதோ ஒரு வகையில் தீர்வு கண்டுபிடித்துவிட்டார்கள்.

கொரோனாவின்  ஆரம்பம்.

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் உள்ள வன விலங்குகள் விற்கும் சந்தையில் இருந்து பரவிய covid – 19 எனும் வைரஸின் தாக்கம் சீனாவையும் தாண்டி 192 நாடுகளை தாக்கியுள்ளது.

2020.10.13 இல் இருந்து இதுவரையில் 38,123,964 பேர் நோயினால் பாதிக்கபட்டவர்களாகவும், 1,086,654 உயிரிழப்புக்களும்,  28,647,219 பேர் நிவாரணமளிக்கபட்டவர்களாகவும் புள்ளிவிபரவியல் குறிப்பிடுகின்றது.

இதில் 69,260 பேர் ஆபத்தான நிலையில் 29,733,873 பேர் வைதியசாலையில் நிவாரணம் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவதற்கு நாட்டு அரசாங்கங்களும்  உலக சுகாதார அமைப்பும் சேர்ந்து, உயிர் ஆபத்தை குறைத்து கொள்ளும் நோக்கில் பாடா படுகின்றனர்.

கொரோனா என்றால் என்ன?

கொரோனா எனும் வைரஸ் குடும்பத்தில் இருந்து உருவான ஒரு வைரஸ்தான் Covid – 19 ஆகும். Covid – 19 என்பதன் விரிவாக்கம் என்னவென்றால் (co – corona, vi-virus, d– disease, 19– discovered in 2019 கொரோனா வைரஸ் 2019 இல் கண்டுபிடிக்கப்பட்டது)  என்பதாகும்.

ஏலவே, பரவி பல உயிர் பலிகளை ஏட்படுத்திய SARS, MERS வைரஸ்களும் இந்த கொரோனா குடும்பத்தை சேர்ந்ததாகும். இதற்கு முன்னர் 6 வைரஸ்கள் இந்த குடும்பத்தில் கண்டுபிடிக்கபட்டன. இது 7 ஆவது வைரஸ் ஆகும்.

கொரோனா வைரஸ் பொதுவாக விலங்குகளை தாக்கக்கூடியதாகவே இருந்து வந்தது. மனிதர்களை தற்போதுதான் தாக்குகின்றது.

சீனாவின் வூ நகரத்தின் ஹுனான் (Hunan) என்ற வன விலங்குகள் விற்கும் இறைச்சி சந்தையில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியுள்ளதாக சீனா கூறியுள்ளது. சமீபகாலமாக சீனர்களிடையே வௌவால் மற்றும் பாம்புக் கறி சாப்பிடுவது அதிகரித்து வந்துள்ளது. இதை ஆராய்ந்து பார்த்ததில் காட்டில் பிடித்து வந்த வௌவால்களிடையே இந்த வைரஸ் இருந்து வந்துள்ளது. இதை உண்ட மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

வைரஸ் பரவும் விதம்.

இவ் வைரஸ் தொடுகை மூலமும், எச்சில் மூலமும் பரவுகின்றது. வைரஸ்  தொற்றுள்ள ஒரு மனிதரை நாம் சந்தித்து அவருடன் கைலாகு செய்து பேசிவிட்டு சென்று, அதேநிலையில் கைகளை ஒழுங்கான முறையில் கழுவாமல் உணவு உட்கொள்ளும் போது வைரஸ் எமது உடம்பினுள் செல்கின்றது. உடம்பினுள் சென்ற வைரஸ் முதலில் தொண்டையில் 3 நாட்களுக்கு மேலாக தங்கியிருந்து, சுவாச கால்வாயில் தடித்த சளியை உருவாக்கி அந்த சளியை உறைய வைப்பதன் மூலம் சுவாச பாதையை அடைக்கின்றது. பின்னர் வைரஸ் எமது உடம்பில் இருக்கும் எமது DNA, RNA ஆகியவற்றுடன் வளர்ச்சியடைந்து எமது உடம்பில் உள்ள கலங்களை அழிக்கின்றது.

வைரஸ் யாரை தாக்கும்.

இந்த வகை வைரஸ் பொதுவாக விலங்குகளை தாக்கும் இயல்பை கொண்டவையாகும். அண்மை காலமாக மனிதர்களை தாக்குகின்றது. இதில் இறந்தவர்களின்  விகிதாசாரத்தை பார்க்கும் போது அதிகமானவர்கள் வயதானவர்களும் சிறுவர்களுமே ஆவார்கள். அதாவது நோய்வாய்பட்டவர்கள் உடம்பில் நோய் எதகர்ப்புச் சக்தி குறைந்தவர்களாவர். பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பர். இறந்தவர்களில் 59.6% விகித மானவர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

கொரோனாவில் இருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறுவது?

இந்த வைரஸ், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களைதான் தாக்கும் என்ற விடயம் நாம் அறிந்ததே. ஆகையால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அன்றாட உணவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக கொய்யாப்பழம், எலுமிச்சைப்பழம், அன்னாசிப்பழம், தோடம்பழம் ஆகியவற்றை வழமையான உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன் பச்சை காய் கறிகளை சாப்பிட வேண்டும். கீரை வகைகளை அன்றாட உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் உணவை நன்றாக சமைத்து சாப்பிடவேண்டும். சில காலத்துக்கு முன்னர் H1N1 எனும் பன்றிக்காய்ச்சல் பரவியது எல்லோரும் அறிந்ததே அந்த நோய்க்கு தடுப்பாக நிலவேம்பு கசாயம் குடிக்கும்படி அறிவிக்கப்பட்டது அதே போன்று இந்த வைரஸ் பரவும் போதும் நிலவேம்பை குடிக்கும் படி அறிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பொது இடங்களுக்கு செல்லாமல் வீட்டிலே இருந்து கொள்வதன் மூலம் நோய் பரவுவதை வெகுவாக குறைத்துக்கொள்ள முடியும். அத்தியவசிய தேவைக்காக வெளியே சென்றால் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

வெளியில் சென்று வந்ததும் கைகளை நன்று கழுவிக்கொள்ளவேண்டும். ஏனென்றால், வைரஸ் எமது உடம்பில் வேறு எங்காவது பட்டால் அதனால் பற்றி பிடித்து கொள்ள முடியாது. அதே போல் எமது உள்ளங் கையிலோ, விரல்களிலோ பட்டால் அதற்கு பற்றிபிடித்துக்கொள்ள இயலுமாக இருக்கும். அதோடு நாம் உணவு உண்ணும்போது வைரஸ் உடம்பினுள் செல்ல இலகுவாக இருக்கும். இதை தடுக்கும் முகமாகதான் கைகளை கழுவுமாறும், ஒரு நாளுக்கு குறைந்தது 2 தடவைகள் குளித்து கொள்ளுமாறும் வைதியர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

வைரஸ்  ஓர் இஸ்லாமிய பார்வை

இஸ்லாம் மனித வாழ்வின் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வை கொண்டுள்ளது. ஒரு முஸ்லிம் தான் எதிர்நோக்கக்கூடிய எல்லா பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டே தீர்வு தேட வேண்டும்.

“ونزلنا عليك الكتاب نبينا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين”

“மேலும் இவ்வேதத்தை, ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம் (அன்–நஹ்ல் 89)”

தொற்று நோய்களுக்கு முகம் கொடுப்பது என்பது முஸ்லிம்களுக்கு புதிய விடயமல்ல, மிகவும் தீவிரமான தொற்று நோய்கள் வரும்போது அதனை எவ்வாறு முகம் கொடுப்பது என்பது பற்றிய வழிக்காட்டுதல்களை இஸ்லாம் ஏற்கனவே வழங்கியுள்ளது. நபி (ஸல்) அவர்களின் காளத்தில் கோரோனா வைரஸ் இல்லை என்றாலும் அவர்களுடைய காலத்திலும் தொற்று நோய்கள் இருக்கத்தான் செய்தன.

நபி (ஸல்) கூறினார்கள் “நீங்கள் இருக்கும் ஒரு தேசத்தில் தொற்று நோய் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால் அதிலிருந்து ஓடாதீர்கள் அது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பரவுவதாக கேள்விபட்டால் அந்த பிரதேசதுக்குள் நுழைய வேண்டாம்” (புஹாரி).

மிகவும் கொடிய தொற்று நோயை எதிர்கொள்ளும் ஒரு நபரின் இயல்பான மனநிலை அதை விட்டும் தூர ஓடுவதாகும். இருப்பினும் ஓடக்கூடாது என்பதனை ஹதீஸ் தெளிவாக குறிப்பிடுகிறது.

இஸ்லாம் தனிமைப்படுத்தலை மாத்திரம் ஊக்குவிக்கவில்லை, மாறாக நோய் பரவுவதைத் தடுக்கும் அடிப்படை சுகாதாரம் பற்றியும் நுனுக்கமாகவும் விரிவாகவும் வழிகாட்டுகிறது.

“நபி (ஸல்) அவர்கள் தும்மும்போதெல்லாம் தனது கையால் அல்லது ஒரு துணியால் வாயை மூடிக்கொள்வார்கள்”

வுழு, குளிப்பது, கைகளை கழுவுவது மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் அனைத்தும் இஸ்லாத்தின் வலுவான அம்சங்கள். “சுத்தம் ஈமானின் பாதி” ஆகவே நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அடிப்படையை இஸ்லாம் முன் வைக்கிறது.

நபி (ஸல்) கூறினார்கள் “அல்லாஹ் எந்த நோயையும் அதற்குறிய நிவாராணியை அருளாமல் இறக்குவதில்லை” (புஹாரி)

Shahim M.I.M
B.A Reading in SEUSL.

2020 ம்  ஆண்டின் ஆரம்பம். கொரோனாவின்  ஆரம்பம். கொரோனா என்றால் என்ன? வைரஸ் பரவும் விதம். வைரஸ் யாரை தாக்கும். கொரோனாவில் இருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறுவது? வைரஸ் ஓர் இஸ்லாமிய பார்வை. 2020…

2020 ம்  ஆண்டின் ஆரம்பம். கொரோனாவின்  ஆரம்பம். கொரோனா என்றால் என்ன? வைரஸ் பரவும் விதம். வைரஸ் யாரை தாக்கும். கொரோனாவில் இருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறுவது? வைரஸ் ஓர் இஸ்லாமிய பார்வை. 2020…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *