Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
உலகத்தாருடன் மீளவும் எம்மை தொடர்புபடுத்திய கொரோனா! 

உலகத்தாருடன் மீளவும் எம்மை தொடர்புபடுத்திய கொரோனா!

  • 5

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கணிதம், மருத்துவம், புவியியல், வணிகம், கலை, பொருளாதாரம், விஞ்ஞானம் உட்பட பல துறைகளிலும் எமது மக்கள் ஆரம்ப காலத்தில் முன்னோடிகளாக இருந்த போதிலும், கூட பிற்காலங்களில் ஏதோ ஒரு காரணத்தால் அவற்றிலிருந்து மக்கள் தூரமாக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளனர் என்பது தெளிவான ஒரு விடயம். பல நூறு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்தத் தூரப்படுத்தல் வெற்றியளித்ததன் பயனாக உலகம் பரந்து, விரிந்து இறைவனின் அருள்களைத் தேடி பிரபஞ்சத்தில் பறந்து கொண்டிருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இன்று Covid-19எம்மை உலகத்துடன் சேர்த்து வைத்துள்ளது. ஆரம்பத்தில் கூடாதவை என்று எதுவெல்லாம் பட்டியலிடப்பட்டதோ அவை இன்று அத்தியாவசியப் பொருட்களாக மாறி வீடுகளுக்கும், பாடசாலைகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், வணக்கத் தலங்களுக்கும், ஏனைய எல்லா இடங்களுக்கும் இன்றியமையாதவையாக மாறியுள்ளன.

நோயைக் கண்டு பிடிக்கவோ அதற்கான உபகரணங்களைக் கண்டு பிடிக்கவோ எம்மிடம் எந்தவிதத் தொழில்நுட்பங்களும் இல்லாத நிலையில்  அவர்கள் தரும் ஊசியை விரும்பியோ விரும்பாமலோ ஏற்ற வேண்டிய நிலைதான் பல நூறு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த  அந்தத் தூரவாக்கலின்  பெறுபேறு.

தலையிலிருந்து கால்வரை, காலை எழும்பியது முதல் உறங்கப் போகும் வரை இரவல் தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு எமது முன்னோர்களது இறந்தகால கண்டுபிடிப்புக்களை பேசிப் பேசி மார்தட்டிக் கொண்டு  காலத்தைக் கடத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால் கொரோனாவிலும் உலகம் இன்னும் பல படிகள் முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது.

நாம் வந்திருக்கும் பாதையை ஒரு முறை மீட்டுப் பார்த்துக் கொள்வோம். ஏன் தூரவாகினோம் என்ற காரணத்தைப் பார்ப்போம். ஒவ்வொன்றுக்கும் கொடுக்க வேண்டிய பெறுமானங்களை கொடுப்போம். மாணவச் செல்வங்களையாவது உலகத்துடன் பயணிக்க வைப்போம். நாளைய உலகின் சவால்களை வெற்றி கொள்வதில் அவர்களும் பங்காளிகளாக இருக்கட்டும். பார்வையாளர்களாக மாத்திரம் இருக்காமல் பார்த்துக் கொள்வோம்.

ஹரீஸ் சாலிஹ்

கணிதம், மருத்துவம், புவியியல், வணிகம், கலை, பொருளாதாரம், விஞ்ஞானம் உட்பட பல துறைகளிலும் எமது மக்கள் ஆரம்ப காலத்தில் முன்னோடிகளாக இருந்த போதிலும், கூட பிற்காலங்களில் ஏதோ ஒரு காரணத்தால் அவற்றிலிருந்து மக்கள் தூரமாக்கப்பட்டுக்…

கணிதம், மருத்துவம், புவியியல், வணிகம், கலை, பொருளாதாரம், விஞ்ஞானம் உட்பட பல துறைகளிலும் எமது மக்கள் ஆரம்ப காலத்தில் முன்னோடிகளாக இருந்த போதிலும், கூட பிற்காலங்களில் ஏதோ ஒரு காரணத்தால் அவற்றிலிருந்து மக்கள் தூரமாக்கப்பட்டுக்…