Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
எண்ணெய் விலையேற்றம் பொதுஜன பெரமுனவை இழிவுபடுத்தவா? 

எண்ணெய் விலையேற்றம் பொதுஜன பெரமுனவை இழிவுபடுத்தவா?

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அரசாங்கத்தின் எண்ணெய் விலையேற்றம் குறித்து அதிருப்தியை பொதுஜன பெரமுனா வௌியிடுள்ளது. மேலும் எரிசக்தி அமைச்சரை தனது பதவியை ராஜினாமா செய்யுமாறு கோரியுள்ளது.

கொரோனா நெருக்கடியை எதிர்கொண்டு நாட்டு மக்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் எரிபொருள் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அரசு விலையேற்றியது குறித்து பொதுஜன பெரமுனா கவலை கொண்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி. சாகரா கரியவாசம் ஒரு அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

மக்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ள காலத்திலும், ஜனாதிபதியின் தலைமையில் மக்கள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதும், நாட்டின் அபிவிருத்திக்கு உறுதியளித்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், பொதுஜன பெரமுன கட்சி மற்றும் அதன் தலைவர்களையும் வேண்டுமென்றே இழிவுபடுத்தும் நிலைமை உருவாக்கப்பட்டு வருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மக்கள் கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ளும் ஒரு நேரத்தில், எரிபொருள் விலையை அதிகரித்தமை குறித்து அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும், அத்தகைய சூழ்நிலையை உருவாக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்ட பிறகு அவர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேற்றைய ஊடகவியாளர் சந்திப்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை இணைக்குழு எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கியதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று (11.06.2021) நண்பகல் வௌியாகியிருந்த ஊடக அறிக்கையில் விலை அதிகரிப்பு இடம்பெறும் என்றாலும் நாட்டில் நிலவும் கொரோனா நிலமை காரணமாக குறித்த திகதியை முன்னரே அறிவிக்க முடியாது எனவும் அவ்வாறு முன்னரே தெரிவித்தால் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசை இருக்கும் எனவும் அவர் மேலும் அவர் தெரிவித்தார்.

என்றாலும் நேற்றிரவு விலையை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது. LNN Staff

அரசாங்கத்தின் எண்ணெய் விலையேற்றம் குறித்து அதிருப்தியை பொதுஜன பெரமுனா வௌியிடுள்ளது. மேலும் எரிசக்தி அமைச்சரை தனது பதவியை ராஜினாமா செய்யுமாறு கோரியுள்ளது. கொரோனா நெருக்கடியை எதிர்கொண்டு நாட்டு மக்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும்…

அரசாங்கத்தின் எண்ணெய் விலையேற்றம் குறித்து அதிருப்தியை பொதுஜன பெரமுனா வௌியிடுள்ளது. மேலும் எரிசக்தி அமைச்சரை தனது பதவியை ராஜினாமா செய்யுமாறு கோரியுள்ளது. கொரோனா நெருக்கடியை எதிர்கொண்டு நாட்டு மக்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும்…