என் நிலையிலும் அல்லாஹ்வை சார்த்திருக்கவும்

  • 7

இவ்வுலக வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான். சிலருக்கு தாய் இல்லை, சிலருக்கு தந்தை இல்லை, சிலருக்கு இருவரும் இல்லை, சிலருக்கு திருமணமாகவில்லை, சிலருக்கு திருமண வாழ்வில் நிம்மதி இல்லை, சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லை, சிலருக்கு சரியான வேலை அமைவதில்லை, சிலருக்கு ஊனமுற்ற குழந்தை, சிலருக்கு திருமண உறவு பிரிந்து விவாகரத்தான நிலை, சிலருக்கு குடும்ப உறவுகளால் சிக்கல், சிலருக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நிலை சரியில்லை, சிலருக்கு நிம்மதியே இல்லை, நிலை இன்னும் எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம், சொல்ல முடியாத சோகங்களை மனதில் சுமந்து கொண்டு, வெளியில் சிரித்து உள்ளே அழுபவர்கள் நம்மில் இல்லாமல் இல்லை. அல்லாஹ்விடமே உங்கள் கவலைகளை முறையிடுங்கள்.

அவனை நம்பியவர்களை அவன் கை விட்டதாக சரித்திரமே இல்லை, நாம் ஏந்திய கைகளை வெறும் கைகளாக அனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான். நாம் நினைக்கிறோம், நமக்கு மட்டும் தான் கவலை இருக்கிறதென்று , இல்லை எல்லோருக்கும் ஒவ்வொரு வகையில் சோதனை உள்ளது. நம் அல்லாஹ், நம் மீது அளவில்லா அன்பு கொண்டவன். அவன் எது செய்தாலும் நமக்கு நன்மையானதாக இருக்கும்.

நம்மிடம் இருந்து ஒன்றை அது உறவாக இருந்தாலும், உடமைகளாக இருந்தாலும் நீக்கினால் அதற்கு பகரமாக அதைவிடச் சிறந்த ஒன்றை வழங்காமல் இருக்கவே மாட்டான். அல்லாஹ் யார் மீது அதிக அன்பு வைத்துள்ளானோ அவர்களையே அதிகம் சோதிப்பான். சோதனைகள் அதிகமாகும் போது அந்த தூயவனை அதிகமதிகமாக நெருங்க வேண்டும். அவனிடமே முழுமையாக நம்மையும் நம் கவலைகளையும் ஒப்படைத்து விடவேண்டும். சுஜூதில் அதிகமதிகமாக பிரார்த்தனை செய்ய வேண்டும். நிச்சயமாக துன்பத்திற்கு பின்னால் பெரியதொரு இன்பத்தை அல்லாஹ் வழங்கியே தீருவான். ஒரு அடியான் அல்லாஹ்விடத்தில் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான். என்நிலையிலும் அல்லாஹ்வை சார்ந்திருங்கள். வெற்றியடைவீர்கள். இன்ஷா_அல்லாஹ்!

Faslan Hashim
BA ®
South Eastern University of Sri Lanka.

இவ்வுலக வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான். சிலருக்கு தாய் இல்லை, சிலருக்கு தந்தை இல்லை, சிலருக்கு இருவரும் இல்லை, சிலருக்கு திருமணமாகவில்லை, சிலருக்கு திருமண வாழ்வில் நிம்மதி இல்லை, சிலருக்கு குழந்தை…

இவ்வுலக வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான். சிலருக்கு தாய் இல்லை, சிலருக்கு தந்தை இல்லை, சிலருக்கு இருவரும் இல்லை, சிலருக்கு திருமணமாகவில்லை, சிலருக்கு திருமண வாழ்வில் நிம்மதி இல்லை, சிலருக்கு குழந்தை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *