Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
எமது ஊர் நிர்வாகம் எங்கே? 

எமது ஊர் நிர்வாகம் எங்கே?

  • 21

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஊர் நிர்வாக சபைகள் களத்தில் நின்று வேலை செய்ய வேண்டிய தருணம் இது. பல பகுதிகளில் இந்நிகழ்வுகள் சிறப்பாக நடைப்பெறுகின்றது அல்ஹம்துலில்லாஹ். இன்னும் பல பகுதிகளில் ஊர் மக்களுடன் இணைந்து ஊர் நிர்வாக சபையும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றது.

இந்த கொடூர நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்னும் நிர்வாக சபைகள், இளைஞர் அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள், உளவள சேவைகள் ஆலோசனை குழுக்களின் தேவைப்பாடுகள் எம்மில் அதிகமாக காணப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் எம்மில் எம்மாத்திரம் உள்ளது.

உணவு தேவைகள் அதிகமாக காணப்படுவதுடன். பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனை நிவர்த்தி செய்ய என்ன மாற்று வழி எம்மிடம் உள்ளது?

அவசர தேவைகள் நிமித்தம் மருந்து வகைகள், மருத்துவர்களை பெற்றுக்கொள்ள வேண்டும் அதற்கான ஏற்பாடுகள் எம்மில் என்ன இருக்கின்றது?

எமது பிரதேசங்களுக்கு இந்த நோய் வர மாட்டாது என்ற அகங்காரமா? அல்லது அலட்சிய போக்கா? அல்லது எம்மிடம் அது உள்ளது. இது உள்ளது. என்ற மமதையா?

பல பிரதேசங்களில் இளைஞர் அமைப்புக்கள் பல முன்னேற்றகரமான சேவைகளை களத்தில் இருந்து இரவு பகல் மழை வெயில் பாராது செய்து வருகின்றார்கள் அல்ஹம்துலில்லாஹ். அதே போல் இன்னும் பல பகுதிகளில் இளைஞர்கள் வீண் விளையாட்டுக்களிலும் அரட்டைகளிலும் அரச, ஊர் சட்டங்களை மதிக்காமலும் ஊதாரிகளாக உலா வருகின்றார்கள்.

அதேபோல் இன்னும் பல பகுதிகளில் கஞ்சா, அபின், சாராயம், தூள், மாவா என்று பல வகையான கூத்துக்களுடன் இன்னும் சிலர் இவைகளை கண்காணிப்பது யார்? தத்தமது பிரதேசங்களை பாதுகாப்பது யாருடைய பொறுப்பு?

எமது சிறந்த தலைமைத்துவங்கள் , சமூக ஆர்வலர்கள் தற்போது களத்தில் உள்ளார்களா? பேசும் தலைமத்துவங்கள் எமக்கு வேண்டாம். களத்தில் நின்று வேலை செய்யும் தலைமைகள் தான் நமக்கு வேண்டும். அல்லாஹ்வின் கோபம் எமது பிரதேசங்களுக்கு வரும் முன் எமது பிரதேசங்களை சிறந்த தலைமைத்துவம் கொண்டு காப்போம்.

யார் இந்த ஏற்பாடுகளை செய்வது? விரையுங்கள் எமது செயற்பாடுகளை இப்போதே ஆரம்பிப்போம். சிறந்த தலைமைத்துவங்களை கொண்ட சிறந்த பிரதேசங்களை உருவாக்குவதற்கு.

Nafees Naleer (Irfani)
BA.(R)….(SEUSL)
Diploma in counseling….(R)
Editor of veyooham media center.

Monetize your website traffic with yX Media

ஊர் நிர்வாக சபைகள் களத்தில் நின்று வேலை செய்ய வேண்டிய தருணம் இது. பல பகுதிகளில் இந்நிகழ்வுகள் சிறப்பாக நடைப்பெறுகின்றது அல்ஹம்துலில்லாஹ். இன்னும் பல பகுதிகளில் ஊர் மக்களுடன் இணைந்து ஊர் நிர்வாக சபையும்…

ஊர் நிர்வாக சபைகள் களத்தில் நின்று வேலை செய்ய வேண்டிய தருணம் இது. பல பகுதிகளில் இந்நிகழ்வுகள் சிறப்பாக நடைப்பெறுகின்றது அல்ஹம்துலில்லாஹ். இன்னும் பல பகுதிகளில் ஊர் மக்களுடன் இணைந்து ஊர் நிர்வாக சபையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *