Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பெற்றோர் கூட வரமால் ஒரு திருமணமா? 

பெற்றோர் கூட வரமால் ஒரு திருமணமா?

  • 17

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

திருப்பு முனை
பாகம் 6

மதிய உணவை முடித்து விட்டு வரும் போது லீனா.

எங்க சரி வெளிய கொஞ்சம் பெய்த்துட்டு ஊட்டுக்கு போமா?”

“ஏலா ஏலா எனக்கு இப்ப நெரயா வேல இரிக்கி இன்னொரு நாளக்கி பாப்பம்.”

“நா ஒஙல்ட ஒன்டு கேக்கவா.”

“ம்ம். என்னா?”

“இல்ல. நீங்க ஏன் எனயோட பேசுறிங்களே இல்ல?”

“பேசுறேன் தானே”

“இல்லயே நீங்க தேவக்கி மட்டும் தான் பேசுறீங்க. மத்தபடி எஙல்குள்ள எந்த ஒரு பேச்சும் இல்லயே. ஒஙல்கு என்னா புடிக்கும் என்னா புடிக்காதுன்டு சரி எனக்கு தெரியா.”

“அதெல்லாம் நீங்க தெரிஞ்சி கொள்ளனும். பேசுறதுக்கு என்ன தான் இரிக்கி லீனா”

அவள் முகமே வாடியது. பதில் ஏதும் பேசவில்லை. ‘என்னடா இது பேசுறதுக்கு எவ்வளவோ இரிக்கி. ஆனா இவர்க்கு மட்டும் பேச ஒன்டுமில்லயா.’ என்று   மனதுக்குள் கேட்டு கொண்டாள்.

வீட்டுக்கு வந்ததும், அவள்.

“ஊட்டுக்கு ஒரு கோல் எடுத்து தாரீங்களா. கொஞ்சம் பேசனும் என்றாள் லீனா.”

“Night கு பேசுங்க. போன்ல charge இல்ல.”

“ம்ம் சரி.” என்றாள்.

ஆனாலும் அவன் போன் full charge ஆகி இருப்பதை அவள் அறியாமல் இல்லை. அவன் வெளியில் சென்று வருவதாக கூறி சென்று விட்டான். ஷரீப்பை பற்றி சிந்தித்தபடியே அவள்  வீட்டு வேலைகளில் மூழ்கி போனாள்.

‘ஏன் இவர் யாரோடயும் தனிய பேச எனக்கு  உடுரல்ல? ஏன் எங்கயும் தனிய கூட்டிட்டு போராரில்ல? ஏன் இவர்ட உம்மா வாப்பா எஙட wedding கு சரி வரல்ல. அந்தளவுக்கு அவங்க இவரோட பேசாம இரிக்க என்ன நடந்திச்சி? மதினி ஏன் அன்டக்கி  அவங்கட ஊட்டுக்கு போன time நா பாவம்டு சொன்னா? அவ அப்படி சொல்ல என்ன காரணம்?’

ஏதோ நடந்திரிக்கி அத ஏன் எனக்கிட்ட எல்லாரும் மறக்கிறாங்க? இத நா எப்படி கண்டு புடிக்கிர? உண்மயிலயே இவர்ட 1st divorce கு என்ன காரணம். ஒரு வேல அத தான் எனக்கிட்ட மறக்கிறாங்களோ?

லீனாவுக்கு தலையே சுற்றியது. எல்லாமே அவளுக்கு மர்மமாக இருந்தது. எல்லா வேலைகளையும் முடித்து விட்டு அஸர் தொழுதவள் அப்படியே முஸல்லாவில் தலையை வைத்து அழுதாள். அவளுக்கு எதுவுமே புரியவில்லை.

‘யா அல்லாஹ்! என்ன சுத்தி என்னதான் நடக்குது. ஏன் இவர் இப்படி இருக்கிறாரு. கொஞ்சம் சரி எரக்கமில்லாம? எனக்கு பயமா இரிக்கி அல்லாஹ் ஒன்டுமே வெளங்குது இல்ல. ஊட்லயும் ஒன்டும் சொல்ல ஏலா. அவங்க கவல படுவாங்க. நா என்ன செய்ய ரப்பே.’ என்று லீனா மண்டியிட்டு அழுதாள். திடீரென அவள் மனதில் ஏதோ தோன்ற cupboard ஐ திறந்து லாட்ச்சியில் உள்ள file ஐ எடுத்து மறைத்து வைத்தாள்.

ஏனெனில் அந்த file உள்ள லாட்ச்சியை அவன் லீனாவுக்கு திறக்க வேண்டாம் என்றிருந்தான். அதனால் அவள் இதுவரை அதை திறக்க நினைத்ததும் இல்லை. ஆனால் இன்று அவளுக்குள் பொறி தட்டியது. அதற்குள் அப்படி என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டுமென்று. அவனும் வீட்டில் இல்லாதது அவளுக்கு வாய்ப்பாக போனது. தனது அறைக் கதவை மூடி விட்டு அந்த file ஐ நோட்டமிட்டாள். நிறைய தாள்கள் இருந்தது. ஒவ்வொன்றாய் பார்த்து கொண்டிருந்தவளின் கண்ணில் அவனது விவாகரத்து பத்திரம் தென்பட்டது. சட்டென்று அதை எடுத்து படித்தவளுக்கு அதிர்ச்சி காத்து கொண்டிருந்தது.

தொடரும்.
Noor Shahidha.
SEUSL.
Badulla.

திருப்பு முனை பாகம் 6 மதிய உணவை முடித்து விட்டு வரும் போது லீனா. எங்க சரி வெளிய கொஞ்சம் பெய்த்துட்டு ஊட்டுக்கு போமா?” “ஏலா ஏலா எனக்கு இப்ப நெரயா வேல இரிக்கி…

திருப்பு முனை பாகம் 6 மதிய உணவை முடித்து விட்டு வரும் போது லீனா. எங்க சரி வெளிய கொஞ்சம் பெய்த்துட்டு ஊட்டுக்கு போமா?” “ஏலா ஏலா எனக்கு இப்ப நெரயா வேல இரிக்கி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *