Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம் - Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம்

  • 12

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

2021 ஏப்ரல் 21ஆம் திகதி பாராளுமன்றத்தின் சபா மண்டபம் மற்றும் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அடுத்த வாரம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களிடம் கையளிப்பதற்கு நேற்றையதினம் (28.06.2021) கூடிய அக்குழு தீர்மானித்தது.

கௌரவ பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களின் தலைமையில் இக்குழு கூடியதாக பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக தெரிவித்தார்.

அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வல்ல, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், ஆர்.எம்.ரஞ்சித் மத்துமபண்டார, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாகச் செயற்படுகின்றனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி ஏற்பட்டது போன்று குழுப்பமான சூழ்நிலை மீண்டும் பாராளுமன்றத்தில் ஏற்படாதிருப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை பரிந்துரைப்பதற்காக கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

இதற்கமைய இதுபோன்ற சம்பவங்களினால் ஒட்டுமொத்த பாராளுமன்றத்திலும் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து விரிவாக ஆராய்ந்த இக்குழு, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான நீண்டகால மற்றும் குறுகியகால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளது. இது தொடர்பான முழுமையான அறிக்கையை சபாநாயகரிடம் கையளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2021 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்றது என்ன?

பாராளுமன்றத்தில் 2021 ஏப்ரல் 21ஆம் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஏட்டிக்குப் போட்டியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சபைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது. இதன்போது சபாநாயகர் சபை நடவடிக்கைகளை 10நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை ஆளும் கட்சியின் எம்.பியொருவர் மீது எதிர்க்கட்சியினர் சிலர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென்று சபை முதல்வர் தினேஸ் குணவர்தன சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக கவனம் செலுத்திய சபாநாயகர் இந்த விடயம் தொடர்பாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 07 பேரைக் கொண்ட விசேட குழுவொன்றை அமைத்து நடவடிக்கையெடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. LNN Staff

2021 ஏப்ரல் 21ஆம் திகதி பாராளுமன்றத்தின் சபா மண்டபம் மற்றும் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அடுத்த…

2021 ஏப்ரல் 21ஆம் திகதி பாராளுமன்றத்தின் சபா மண்டபம் மற்றும் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அடுத்த…