ஏமாற்றத்தால் எங்கியிருந்தோம் இனியாவது மாற்றத்தை சிந்திப்போம்……

  • 15

விடியாத மூஞ்யோடு கேள்விப்படும் தீ பரபரப்பான நகர்வுகள், ஊர்க்காவலுக்கு இளைஞர்களால் தயார்படுத்தி வைக்கப்பட்ட கல்லுகள் உத்தியோகபூர்வமற்ற இளைஞர் இராணுவ நிர்வாகம், சிந்தனைக்குள் அடங்காத WhatsApp தகவல்கள் என கலவர பூமி காலம் கழிந்து ஓரளவு சமூகத்திற்கு முனைந்துள்ளோம். இது புதிதாக இடம்பெற்ற ஒரு நிகழ்வு அல்ல, திட்டமிடப்படாமல் நகர்த்திய காரியமல்ல. அனைத்துவித தயார்படுத்தல் களோடும் களமிறக்கப்பட்டிருக்கும் இனவாதத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்ற பக்குவத் தன்மை இன்னும் எமது சமூகத்தில் துளிர் கூட விடவில்லை

இன வாத நடவடிக்கைகள் திகன, குருநாகல், அழுத்கம புதிது என்றால் என்னை திக்குமுக்காட வைப்பதில் ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் பல இனவாத களம் கண்டவர்கள் நாம் நூற்றாண்டு விழாவையும் அனுப்பி வைத்தவர்கள் நாம்

“ஒரு முஃமின் இரண்டு முறை ஒரே புற்றில் தீண்டப்பட மாட்டான்” என்பது நபி வாக்கு என்றால் நாம் எத்தனை முறை தீண்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். என்றால் சற்றாவது யோசிப்பதுண்டா????

எம்மை தலைமையேற்று நடாத்தும் தலைமைத்துவங்களில் எவ்வெவ்விடங்களில் ஓட்டை காணப்படுகின்றது???? கலவரங்களின்போது தலைமைகள் ஏன் மௌனம் காக்கிறார்கள்???? மௌனம் காக்கும் தலைமைகளை மக்கள் இன்னும் நம்பிக் கொண்டிருப்பதன் பின்னணி என்ன???? மாற்றம் கோரும் மாற்றார்களின் கொள்கைகளில் ஏற்பட்ட தவறுகளா??? அல்லது அவர்களின் கொள்கை மக்களுக்கு சென்று அடைவதில் ஏற்பட்ட வழிமுறை சிக்கலா??? என இன்னும் இன்னும் நாம் நின்று நிதானித்து காய் நகர்த்த வேண்டிய இடங்களும் சந்தர்ப்பங்களும் ஏராளம் ஏராளம்.

சிறுபான்மை சமூகம் என்று அறியப்படும் ஒரு சமூகம் எதிர்ப்புப் தயார்ப்படுத்தல்களோடு எந் நேரமும் முழிப்பாக முயற்சியோடு, தேசபிமானத்தோடு இருக்க வேண்டிய சமூகம் என அறியப்படுத்தல் நன்று. அவ்வாறானதொரு சமூக ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாகப் பொறிமுறைக்குள் உருவாக்கப்பட்டிருப்பது மிக அத்தியாவசியமானதாகும். ஒழுங்கமைக்கப்பட்ட பெருமை கொள்வது மிக அவசியமாகும் அதி முக்கியத்துவமானதாககும். சாதாரண சதிகளைக் கூட அறிந்து சமூக மட்டத்தில் தெளிவு படுத்த முடியாமல் தவித்து, நடந்த பின் நடப்பவையெண்ணி கைசேதப்படுவதும், கலக்கப்படுவதும், கலங்குவதும் ஒரு கண்ணிய சமூகத்திற்கும் ரசூலுல்லாஹ்வின் முன்மாதிரியை பின்பற்றும் எமக்கு அழகல்ல.

எனவே முற்பதர்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் என்பது சித்தாந்தங்களை கட்டமைக்கப்பட்டு எமக்கப்பால் பரந்து விரிந்திருக்கும் பாரிய ஒளியை சுவாசிக்க பறக்கும் விடுதலைப் பறவைகளாக கணியப் போகும் காலத்தை நாம்  எம்மிலிருந்து தொடங்குவோம். முயற்சி திரு வினையாக்கும்…….

 

NAFEES NALEER
IRFANI
SEUSL
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

 

விடியாத மூஞ்யோடு கேள்விப்படும் தீ பரபரப்பான நகர்வுகள், ஊர்க்காவலுக்கு இளைஞர்களால் தயார்படுத்தி வைக்கப்பட்ட கல்லுகள் உத்தியோகபூர்வமற்ற இளைஞர் இராணுவ நிர்வாகம், சிந்தனைக்குள் அடங்காத WhatsApp தகவல்கள் என கலவர பூமி காலம் கழிந்து ஓரளவு…

விடியாத மூஞ்யோடு கேள்விப்படும் தீ பரபரப்பான நகர்வுகள், ஊர்க்காவலுக்கு இளைஞர்களால் தயார்படுத்தி வைக்கப்பட்ட கல்லுகள் உத்தியோகபூர்வமற்ற இளைஞர் இராணுவ நிர்வாகம், சிந்தனைக்குள் அடங்காத WhatsApp தகவல்கள் என கலவர பூமி காலம் கழிந்து ஓரளவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *