Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஐக்கியம் 

ஐக்கியம்

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மனித நரம்பினுள்
புனிதமாய் நீந்திடும்
ஐக்கியமெனும் குருதி
வாக்கியமாகி வழியாகியது
நல்வழி மார்க்கமான
இஸ்லாமெனும் சுவர்க்கத்திலே

கரத்தோடு கரமாய்
சிரம் தாழ்த்தாது
மரமாய் உயர்ந்தெழ
வீரு கொண்டு
வேராய் பரந்திடின்
வேற்றுமை நீங்கி
ஒற்றுமை ஓங்கும்

ஒரே இறைவனெனும்
ஓரிறை கொள்கையும்
கிளைகளாய் பிரிந்து
குழைந்து போயிற்று
தன்னிச்சை இயக்கத்தில்
தயக்கத்தோடு சகோதரத்துவமும்

தந்தை சொல்லை மந்தையாக்கும் தமயனும்
உற்றாரை வேற்றாராய்
வெறுத்திடும் வீம்பும்
நண்பனே பகைவனாக்கும் நவீன ஞாலமும்
நாற்றக் குழியில்
ஏற்றம் கொள்கிறது

வேடிக்கை காண
விளையாட்டு பொம்மைகளாய்
மனிதமின்றிய மாமிசங்களை
கூலிக்கு ஆளமர்த்தி
வேலியே பயிரை
மேய்கிறது இங்கு

ஓரணி ஓர்குரலென
ஓங்க வேண்டும்
ஒற்றுமை தீபமாய்
ஒளிர வேண்டும்
சிற்சில சண்டைகள்
சருகாய் போக
சமாதானம் எங்கும்
சத்தியமாகிட வேண்டும்

மனித குலத்தின்
மந்திர உலகத்தில்
இயந்திரம் ஆனாலும்
இயல்பினை உணர்ந்து
ஐக்கியம் கொண்டால்
இம்மையும் கடந்து
மறுமையும் மிளிர்ந்திடும்

கவிச்சாரல் சாரா
புளிச்சாக்குளம்

மனித நரம்பினுள் புனிதமாய் நீந்திடும் ஐக்கியமெனும் குருதி வாக்கியமாகி வழியாகியது நல்வழி மார்க்கமான இஸ்லாமெனும் சுவர்க்கத்திலே கரத்தோடு கரமாய் சிரம் தாழ்த்தாது மரமாய் உயர்ந்தெழ வீரு கொண்டு வேராய் பரந்திடின் வேற்றுமை நீங்கி ஒற்றுமை…

மனித நரம்பினுள் புனிதமாய் நீந்திடும் ஐக்கியமெனும் குருதி வாக்கியமாகி வழியாகியது நல்வழி மார்க்கமான இஸ்லாமெனும் சுவர்க்கத்திலே கரத்தோடு கரமாய் சிரம் தாழ்த்தாது மரமாய் உயர்ந்தெழ வீரு கொண்டு வேராய் பரந்திடின் வேற்றுமை நீங்கி ஒற்றுமை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *