ஒளிக் கீற்று

  • 27

அது ஒரு அழகிய கிராமம். நான்கு திசைகளில் ஓரு அழகான அருவியும், மறுபுரம் பார்தால் பச்சைப் பசேல் என்ற வயல் வெளியும், மற்றைய பக்கம் பார்த்தால் வாழைத் தோட்டமும், மறுபுரத்திலே பாடசாலையும், அழகான நான்கு மதங்களும் அடங்கிய வணக்கஸ் தளங்களும் காணப்படும் கிராமம் அது.

அவ்வூரிலே ஓரு வழக்கம் காணப்பட்டது. “பொம்பள புள்ளகள படிக்க வெச்சா தலக்கி மேல பெய்துடுவாங்க”

“என்னதான் படிச்சி செய்யப் போராளுவள்; கூட படிக்க வெச்சா அவங்கள புடிக்க ஏழாம பொயிடும்”

என்ற ஒரு கொள்கை காணப்பட்டது. அப்போது ஊரிலே வயலில் வேளாண்மை அறுக்கும் பஸீர் மாமாவின் மகள் பல்கீஸ் சின்னப் பிள்ளையா விளையாடிக் கொன்டிருக்கின்ற பொழுதே சொல்வாள்.

“நான் ஒரு டாக்டரா வந்து எல்லோருக்கும் என் கையால் மருந்து கொடுக்கனும்”

என்று கூறுவாள்.

இப்படியாகக் கூறும் போயெல்லாம் பெரியார்கள் எல்லோரும் குடும்பாத்தார்கள் எல்லோரும் எள்ளி நகையாடுகள் என்று கூறுவாள் வாப்பாவிடமும், உம்மாவிடமும்; பல்கீஸின் ஆசையைக் கேட்கும் போதெல்லாம் ராஹுமாவான பல்கீஸின் உம்மாவான இவள் இவ்வாறு கூறுவாள்.

“ஏய் நாங்க எப்புடி இவள டொக்டராக்குவோம்? இவள எப்புடி முன்னேத்துவோம்”

என்று கூறிய வண்ணமே இருப்பாள். அப்போதெல்லாம் பஸீர் கூறூவார்.

“ரஹீமா நீ சும்மா இறி ஏம் புள்ளேட ஆசய என்ன செஞ்சாவது அல்லாஹ்ட ஒதவியோட முன்னேத்துவைன்”

என்று கூறுவான்.

அப்படியே காலங்கள் உருண்டோடியது ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்ணூறறூ நாண்காம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பெருபேற்றில் நூற்றி எழுபத்தி மூன்று புள்ளிகளைப் பெற்று அல் ஹிக்மா பாடசாலையிலே சிறந்த பெறுபேற்றைப் பெற்றாள் பல்கீஸ். அப்போது பாடசாலை அதிபர் மஹ்மூத் கூறினார்.

“பஸீர் எங்கட ஊர்ல ஐந்தாஔம் ஆண்டு வரைக்கும் தான் பாடசலை இரிகிது. நீங்க ஒகட தஙகச்சி வீட்ல அட்டாளச்சேனைக்கு சரி அணுப்பி ஒரு சிறந்த பெண்ணாக எங்கட ஊருக்கு ஆக்கி கொண்டு வாங்க”

என்று அவர கூறினார்.

பஸீரும் சரி என்று கூறி விட்டு; பாடசாலையிலிருந்து தேவையான ஆவணங்களை எல்லாம் எடுததுக் கொண்டு வரும் வழியில் பஸீரின் மூத்த சகோதரி முணீரா இப்படிச் சொன்னாள்.

“என்ன பஸீர் பல்கீஸப் படிக்க வெச்சி பெரிய ஆள் ஆக்கப் போரியாமே? ஊர்ல எல்லாரும் சொல்ராங்க. நாங்க எல்லாரும் படிச்சா பணக்கார வாழ்க்க வாழ்ரோம் பேசாம நாளைய்ல இருந்து மகள எங்க வீட்டுக்கு வேளக்கி அணுப்பு”

என்றாள்.

ஏனென்றால் முணீரா குடும்பத்திலே பணம் படைத்தவள். அதனால் தான் பஸீரின் மகளை தனது வீட்டுக்கு வேலைக்கு அழைத்தாள். ஆனால் பஸீர் மௌனமாகத் திரும்பிய படி வீட்டுக்கு வந்தான். அதன் பிறகு அடுத்த வீட்டு சலீனாவிடம் தான் அந்தப் பகுதிக்கே தொலைபேசி காணப்பட்டது. ரஹீமா சென்று சலுனா வீட்டுக் கதவைத் தட்டினாள்.

“அஸ்ஸலாமு அலைக்கும் சலீனா” என்று மூன்று முறை கூறுனாள்

“வ அலொக்கும் உஸ்ஸலாம் யாரு ஆ வாங்க வாஙாக ரஹீமா தாத்தா ஒகட மகள் மாஷா அல்லாஹ் என்டு ஸ்கொலஷிப்ல பாஸ் பன்னிடாமே எனக்கு சரியான சந்தோசம்; நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கிறேன். என்ன விஷயம் ரஹிமா தாத்தா எங்கட ஊட்டுக்கு வந்திகிறிக?”

என்று கேட்க.

“அது வந்து சலீனா பஸீர் நானாட தங்கச்சி ஸப்ராவோட கொஞ்சம் பேசனும்”

என்று சொல்ல சலீனாவும் இலக்கங்களை அழுத்திக் கொடுக்க ரஹுமா எல்லா விபரங்களையும் உரையாட ஸப்ராவிடமிருந்து சிறந்த பதில் கிடைத்தது. பல்கீஸ் ஸப்ராவின் வீட்டுக்கு சென்று; ஸப்ராவிற்கு துணையாகவும் கல்வியில் கவனமாகவும் இருந்தாள். ஸப்ராவும் இரக்கமாகவே இருந்தாள். இப்படியாக காலங்கள் கழிய தரம் பத்து சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின. அப்போது பல்கீஸின் உற்ற தோழிகளான ரியானவும், பேகமும் ஸப்ராவின் வீட்டுக்கு வந்து,

“மாமி இன்டகி ஓ லெவல் ரிஸல்ட் வந்திருக்ககி நாங்க பல்கீஸ ஸ்கூலுக்கு கூட்டிப்போகவா”

என்று கேட்க ஸப்ராவும் அணுமதி கொடுக்கப் பாடசாலைக்கு சென்றார்கள் மூவரும். பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளின் வரிசையில் எட்டு ஏ களும் இரண்டு பி களும் பெற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்றாள்.

இப்படியாக விஞ்ஞான பீடத்திலே கல்வியைத் தொடர்ந்தாள் . இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு உயர் தரப் பரீட்சையில் நான்கு ஏ க்களைப் பெற்றாள். இப்படியாக காலங்கள் கடக்க பேராதனைப் பல்கலைகழகம் சென்று இரண்டாயிரதாது ஒன்பதாம் ஆண்டு சிறந்த பட்டதாரி பட்டத்தையும் பெற்று தனது ஊரான அக்கறைப்பற்று பெரிய வைத்தியராக கடமை ஏற்றாள்.

இன்று அவளைத் தூற்றியோர் எல்லோரும் புகழ ஆரமாபித்தனர்.

Fathima Rummana Hussain deen
Dehianga Muruthalawa

அது ஒரு அழகிய கிராமம். நான்கு திசைகளில் ஓரு அழகான அருவியும், மறுபுரம் பார்தால் பச்சைப் பசேல் என்ற வயல் வெளியும், மற்றைய பக்கம் பார்த்தால் வாழைத் தோட்டமும், மறுபுரத்திலே பாடசாலையும், அழகான நான்கு…

அது ஒரு அழகிய கிராமம். நான்கு திசைகளில் ஓரு அழகான அருவியும், மறுபுரம் பார்தால் பச்சைப் பசேல் என்ற வயல் வெளியும், மற்றைய பக்கம் பார்த்தால் வாழைத் தோட்டமும், மறுபுரத்திலே பாடசாலையும், அழகான நான்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *