Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஓர் விதவையின் டயரியிருந்து 

ஓர் விதவையின் டயரியிருந்து

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இறந்து போன வார்த்தைகளாய்
என் கடந்து போன காலங்கள்
எழுத நினைத்தாலும்
எழுத்துக்குள் அடங்காத
என்னவனின் நினைவுகள்
நினைத்துப் பார்த்து
கண்ணீர் சிந்த மட்டுமே
துணை நிற்கின்றன

பல்கலைக்கழக வாசலிலே
விமானப் படை வீரனாக
எதிர்பாராத அவன் சந்திப்பு
காலவோட்டத்தில் நட்பாகிட

அவனது ஆறடி உயரம்
அன்பான குணம்
கவர்ந்திழுத்திட
காதல் என்னும் போதையில்
அந்நாட்கள்

காதல் வானில் அன்பிலே கைகோர்த்து
கதை பேசிய நிமிடங்கள்
இன்னும் நீங்காத வடுக்களாய்

போராட்டங்களுக்கு மத்தியில்
திருமண நாள் நிச்சயித்து
உன்னவள் என்ற
பெருமைக்குரியவளாகி ஓர் வாரம்

உரிமையுடன் உன் தோள் தொட்டு
பைக்கில் பயணித்த
அந்த நிமிடங்கள்
நம் வாழ்வின் இறுதி
மணித்துளிகள் என்று
உணர்ந்திருக்கவில்லை

அந்த ஒரு நொடி
மெல்லக் கண் விழித்துப் பார்க்கின்றேன்
கண்ணீரோடு உறவுகள் சூழ..
காயக்கட்டுகளோடு
வைத்தியசாலை
கட்டிலில் நான்…

என் விழிகள்
என்னவனையே தேட
என் செவிப்பரையில் விழுந்த
அந்த வார்த்தைகள் ஓர் பேரிடியாக
என் உயிரின் பாதி
இவ்வுலகை விட்டுப் பிரிந்திட

கத்தினேன்
கதறினேன்
பைத்தியம் ஆனேன்

என் கை தொட்ட
காதல் கணவன்
மறு உலகில்
எனக்கு
கிடைக்க வேண்டுமென்ற
பேராசையோடு

காயங்கள் வலிகள்
கட்டுக்கதைகள்
அவ்வப்போது அவதூருகள்
சில சந்தேகங்கள்
இத்தனையும் தாங்கி

வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றேன்
என்னவனை மனதில் சுமந்து
விதவை என்ற பட்டத்தோடு

Shiha-Hana

இறந்து போன வார்த்தைகளாய் என் கடந்து போன காலங்கள் எழுத நினைத்தாலும் எழுத்துக்குள் அடங்காத என்னவனின் நினைவுகள் நினைத்துப் பார்த்து கண்ணீர் சிந்த மட்டுமே துணை நிற்கின்றன பல்கலைக்கழக வாசலிலே விமானப் படை வீரனாக…

இறந்து போன வார்த்தைகளாய் என் கடந்து போன காலங்கள் எழுத நினைத்தாலும் எழுத்துக்குள் அடங்காத என்னவனின் நினைவுகள் நினைத்துப் பார்த்து கண்ணீர் சிந்த மட்டுமே துணை நிற்கின்றன பல்கலைக்கழக வாசலிலே விமானப் படை வீரனாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *