Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கட்டாய தகனத்திற்கு உள்ளாகிய ஜனாஸாக்கள் 101 - சுகா­தார அமைச்சின் தர­வுகள் 

கட்டாய தகனத்திற்கு உள்ளாகிய ஜனாஸாக்கள் 101 – சுகா­தார அமைச்சின் தர­வுகள்

  • 5

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

றிப்தி அலி

கொவிட் 19 தொற்று கார­ண­மாக கடந்த வருடம் 2020 மார்ச் 28 ஆம் திகதி முதல் இவ்­வ­ருடம் 2021 ஏப்ரல் 30 திகதி வரை உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் மொத்த எண்­ணிக்கை 178 ஆகும் என சுகா­தார அமைச்சின் தொற்று நோய் விஞ்­ஞானப் பிரிவின் தர­வுகள் தெரி­விக்­கின்­றன.

இத­ன­டிப்­ப­டையில் நோக்கும் போது கொவிட் சட­லங்­களை கட்­டாய தக­னத்­திற்­குட்­ப­டுத்தும் வர்த்­த­மானி அறி­வித்தல் அமு­லி­லி­ருந்த 2021 பெப்­ர­வரி 25 ஆம் திகதி வரை 101 முஸ்­லிம்கள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அறிய முடி­கி­றது.

சுகா­தார அமைச்­சிற்கு மேற்­கொள்­ளப்­பட்ட தகவல் அறியும் விண்­ணப்­பத்தின் ஊடாக இந்த தகவல் தெரிய வந்­தது.

கொவிட் – 19 மர­ணங்கள் தொடர்பில் சமர்ப்­பிக்­கப்­பட்ட தகவல் அறியும் விண்­ணப்­பத்­திற்கு சுகா­தார அமைச்சின் தொற்று நோய் விஞ்­ஞானப் பிரி­வினால் வழங்­கப்­பட்ட பதிலில் காணப்­பட்ட தர­வு­களின் அடிப்­ப­டை­யி­லேயே இந்த விடயம் கண்­ட­றி­யப்­பட்­டது.

கடந்த 2020.03.28 ஆம் திகதி நாட்டில் முத­லா­வது கொவிட் – 19 மரணம் பதி­வா­கி­யது. சுகா­தார அமைச்சின் தொற்று நோய் விஞ்­ஞானப் பிரிவின் தர­வு­களின் பிர­காரம், 2020.03.28 முதல் 2021.04.30ஆம் திகதி வரை­யான ஒரு வருட காலப் பகு­திக்குள் 678 பேர் கொவிட் – 19 கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இதில் 390 சிங்­க­ள­வர்­களும், 178 முஸ்­லிம்­களும், 99 தமி­ழர்­களும், 4 பறங்­கி­யர்­களும், ஏழு வெளி­நாட்­ட­வர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர் என என தொற்று நோய் விஞ்­ஞானப் பிரிவு தெரி­விக்­கி­றது.

இவர்­களில் 428 ஆண்­களும் 250 பெண்­களும் இக் காலப் பகு­திக்குள் கொவிட் – 19 கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இதே­வேளை, கடந்த பெப்­ர­வரி 25ஆம் திகதி சுகா­தார அமைச்சர் பவித்ரா வன்­னி­யா­ராச்­சி­யினால் வெளி­யி­டப்­பட்ட 2216/38ஆம் இலக்க அதி விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் கொவிட் – 19 கார­ண­மாக உயி­ரி­ழப்­ப­வர்­களின் கட்­டாய தகனம் நிறுத்­தப்­பட்­டது.

இதனைத் தொடர்ந்து, ஓட்­ட­மா­வடி பிர­தேச சபைக்­குட்­பட்ட மஜ்மா நகரில் கொவிட் – 19 கார­ண­மாக உயி­ரி­ழப்­ப­வர்கள், அவர்­களின் குடும்ப உறுப்­பி­னர்­களின் விருப்­பத்தின் பிர­காரம் அடக்கம் செய்ய சுகா­தார அமைச்சு அனு­ம­தித்­தது.

இதற்­கி­ணங்க, கடந்த மார்ச் 5ஆம் திகதி முதல் இன்று வரை கொவிட் – 19 கார­ண­மாக உயி­ரி­ழப்­ப­வர்கள் மஜ்மா நகரில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்டு வரு­கின்­றனர்.

இதற்­க­மைய “கடந்த 2021 மார்ச் 5ஆம் திக­தி­யி­லி­ருந்து 2021 ஏப்ரல் 30ஆம் திகதி வரை­யான காலப் பகு­தியில் கொவிட் – 19 கார­ண­மாக உயி­ரி­ழந்த 84 பேர் மஜ்மா நகரில் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளனர்” என ஓட்­ட­மா­வடி பிர­தேச சபையின் செய­லாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரி­வித்தர்.

இதில், 77 முஸ்­லிம்­களும், 2 சிங்­க­ள­வர்­களும், 3 பறங்­கி­யர்­களும், 2 தமி­ழர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர்” என அவர் மேலும் குறிப்­பிட்டார்.

மேற்குறிப்பிட்ட தரவுகளுக்கு அமைய, 2020.03.28ஆம் திகதி முதல் 2021.02.25ஆம் திகதி வரையான காலப் பகுதியில் கொவிட் – 19 காரணமாக உயிரிழந்த 101 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கட்டாய தகனத்திற்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் 334 ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டதாக ஒரு பரவலான கருத்து உள்ளது. என்றாலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் 181 என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் தற்போது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் 101  எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டதாக உள்ளது.

றிப்தி அலி கொவிட் 19 தொற்று கார­ண­மாக கடந்த வருடம் 2020 மார்ச் 28 ஆம் திகதி முதல் இவ்­வ­ருடம் 2021 ஏப்ரல் 30 திகதி வரை உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் மொத்த எண்­ணிக்கை 178…

றிப்தி அலி கொவிட் 19 தொற்று கார­ண­மாக கடந்த வருடம் 2020 மார்ச் 28 ஆம் திகதி முதல் இவ்­வ­ருடம் 2021 ஏப்ரல் 30 திகதி வரை உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் மொத்த எண்­ணிக்கை 178…