Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கட்டிப்போட்ட மாட்டை அவிழ்த்து விட்டால் 

கட்டிப்போட்ட மாட்டை அவிழ்த்து விட்டால்

  • 13

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பண்பாடுடனான கல்வியே சமூகத்திற்கும் நாட்டிற்கும் இன்றியமையாத ஒன்றாக காணப்படும் சூழலில் பண்பாடு நல்லொழுக்கம் என்பவற்றை என்னவென்றே தெரியாமல் கல்வியை தேடும் பரம்பரை ஆரம்பித்து விட்டது.

இன்றைய கால கட்டத்தில் பல்கலைக்கழகங்கள் எனப்படுவது பாடசாலையிலும் வீட்டிலும் கட்டிப்பாதுகாக்கப்பட்ட நல்லொழுக்கங்களை தொலைக்கும் இடமாக மாறி வருகிறது. குறிப்பாக முஸ்லிம் பெண்களின் ஒழுக்க வீழ்ச்சி வெகுவாக இருப்பது கவலைக்குறிய விடயமாக காணப்படுகிறது.

அதிலும் இஸ்லாமிய கலாசாலைகளில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் பெண்கள் நல்ல பண்பாட்டிலும்
ஒழுக்கத்திலும் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிகவர்கள். ஆனால் நிலைமை எதிர்மாறாக காணப்படுகிறது.

கட்டிப் போட்ட மாட்டை அவிழ்த்து விட்டால் கொஞ்ச தூரம் ஓடிப்போய்த்தானாம் நிக்கும் என்ற சான்றோர் வாக்கை போல இவர்கள் பல்கலைக்கழகம் சென்ற பின்னர் நடாந்து கொள்கிறார்கள்.

ஒழுக்க சீர்கேடுகள் தொடர்ந்தும் நடக்கும் இடத்தில் இருக்கும் போது அது சகஜமான, நாளாந்த, இயல்பான வாழ்க்கையாக மாறிப்போகிறது அதுமட்டுமின்றி தன்னை கேக்கப்பார்க்க பொறுப்புதாரிகளோ பெற்றோர்களோ இல்லை என்பது இவர்களை சீர்கேடுகளின் பால் இன்னும் ஊக்கமழிக்கின்றது.

மார்க்கத்தை கற்ற பல்கலைக்கழக மாணவர்களே நீங்கள் தான் முன்மாதிரியாக இருக்க வேண்டும். சில முன்மாதிரியான மாணவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக.

தெரியாமல் செய்வதை விட பாவம் என்று தெரிந்தும் அதை செய்வது இறைவனிடத்தில் கடுமையான தண்டணையை பெற்றுத்தரக்கூடியது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

Adhnaan Cassim
Dip in psychology &
Counseling

பண்பாடுடனான கல்வியே சமூகத்திற்கும் நாட்டிற்கும் இன்றியமையாத ஒன்றாக காணப்படும் சூழலில் பண்பாடு நல்லொழுக்கம் என்பவற்றை என்னவென்றே தெரியாமல் கல்வியை தேடும் பரம்பரை ஆரம்பித்து விட்டது. இன்றைய கால கட்டத்தில் பல்கலைக்கழகங்கள் எனப்படுவது பாடசாலையிலும் வீட்டிலும்…

பண்பாடுடனான கல்வியே சமூகத்திற்கும் நாட்டிற்கும் இன்றியமையாத ஒன்றாக காணப்படும் சூழலில் பண்பாடு நல்லொழுக்கம் என்பவற்றை என்னவென்றே தெரியாமல் கல்வியை தேடும் பரம்பரை ஆரம்பித்து விட்டது. இன்றைய கால கட்டத்தில் பல்கலைக்கழகங்கள் எனப்படுவது பாடசாலையிலும் வீட்டிலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *