Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கனா காய்கிறது 

கனா காய்கிறது

  • 6

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

விடிந்தால் வெள்ளி ஆரவாரம்தான்
ஆசுபத்திரி அங்காடியாய்
வாரிசும் வந்தாச்சு
வாத்தியென்றது வைத்தியன் வாய்

மூத்தவன் நானன்று
கனமில்லா என்னை உன்கைகளும்
கவனமாய் தூக்கின கண்ணீருடன்

தொட்டில் ஆட்டியும்
தோலில் சுமத்தாட்டியும்
வீரியமாய் வீதியிலே நீ நடந்த
அழுகைதான் ஆயுதம் அடம்பிடித்தேன்
ஆசைகளுடன்
விரும்பியதும் கிடைத்தது
விளையாடும் பருவத்திலே

என்னென்ன தேவை
எனக்கென்ன தேவை
இருந்ததெல்லாம் இழந்து
பட்டினியும் கிடந்து
படிக்கவெச்ச நீ யென்ன
படியொன்று நான் முன்னேற
பலம்பெற்றியே பத்துப்பேர் முன்ன

கடனென்ன உடன்பெற்று
உரமூட்டி எனவளர்த்த- உன்
விருப்பெல்லாம் நீ துறந்து

பிடித்தென்ன பிடிவாதமாய்
பின்வாங்கா உன் பூரிப்பு
பதவியொன்று நான் பார்க்க
பாடு பல நீ பட்ட

எல்லாமே உன் விருப்பு
ஏங்குகிறேன் நானின்று
ஏளனமாய் என் மனது
பார்க்கிறது எனவென்று

ஆத்திரம்தான் சிலவேளை
அடங்குதில்ல ஏன் வாப்பா
ஆசையெல்லாம் இல்லாமலில்ல
அதையும் நீ கேட்டதில்ல

ஆயிரமாய் யோசிச்ச- உன்
ஆணையெல்லாம் அடயவெச்ச
ஒருவாட்டி ஏங்கிட்ட
விருப்பெதுவும் கேக்கலயே

பட்டகடன் பதவியுடன்
எட்டாக் கனா என்னவோ
தொக்கிநிக்குது என்னுடன்

என் ஆச என்னென்ன
எல்லாமே மண்ணோட
உங்கிட்ட நான் சொன்னா
உன் மனமென்ன ஆகிறது

உண்மைலே ரெண்டுபேரும்
நிக்கிறோமே ஓரிடம்தான்
உன் பாசமெல்லாம் வேசமில்ல
நாசமானது நம்பிக்கதான்
மோசமான முடிவுகள் சில
முட்டி மோதுது என்னுள்ளே

உன் ஆச என்னால
என் ஆச எதனால
இப்படிதான் இனியெல்லாம்
இழுபறிதான் கனவெல்லாம்

வெறுப்பேதும் இருந்ததில்ல உன்மேல
செருப்பாக நீ இருந்த என் கால்கீழ
முள்ளென்ன கல்லென்ன
எல்லாமே நீ பட்ட
எனக்கென்ன மிச்சம்வெச்ச

இனியாச்சும் என்கைய
எனக்காக விட்டுவிடு
மறுகைய நீ பிடிச்சு
மறுபடியும் நாம் நமக்காய் வாழ

Nawfees Imam
SESUL
1st year
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

விடிந்தால் வெள்ளி ஆரவாரம்தான் ஆசுபத்திரி அங்காடியாய் வாரிசும் வந்தாச்சு வாத்தியென்றது வைத்தியன் வாய் மூத்தவன் நானன்று கனமில்லா என்னை உன்கைகளும் கவனமாய் தூக்கின கண்ணீருடன் தொட்டில் ஆட்டியும் தோலில் சுமத்தாட்டியும் வீரியமாய் வீதியிலே நீ…

விடிந்தால் வெள்ளி ஆரவாரம்தான் ஆசுபத்திரி அங்காடியாய் வாரிசும் வந்தாச்சு வாத்தியென்றது வைத்தியன் வாய் மூத்தவன் நானன்று கனமில்லா என்னை உன்கைகளும் கவனமாய் தூக்கின கண்ணீருடன் தொட்டில் ஆட்டியும் தோலில் சுமத்தாட்டியும் வீரியமாய் வீதியிலே நீ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *